17 ஜன., 2014

Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?

Posted by Anto Navis

Paypal – இந்த வார்த்தையை அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். ஆன்லைன் ஷாப்பிங், ஆன்லைன் மூலம் பணம் அனுப்புதல் போன்றவற்றை மிகப் பாதுகாப்பான முறையில் செய்யும் இது இணையத்தில் இயங்கும் ஒவ்வொருவருக்கும் அவசியம். இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

நிறைய தளங்கள் உங்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை Check அல்லது Paypal மூலம் தருகின்றன. இன்னும் பல Paypal வழியாக மட்டுமே பணம் செலுத்தும். எனவே Paypal Account Create செய்வது கட்டாயம் ஆகிறது.
இந்த பதிவில் Paypal Account உருவாக்குதல், Bank Account சேர்த்தல், Bank Account க்கு பணத்தை பெறுதல் போன்றவற்றை காண்போம்.
1. முதலில் Payapal.com என்ற முகவரிக்கு செல்லவும்.
2. அதில் Sign Up என்பதை கிளிக் செய்து வரும் பக்கத்தில் முதலில் உங்கள் நாடு சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளவும், அடுத்து என்ன மாதிரி கணக்கு தொடங்க போகிறீர்கள் என்ற கேள்விக்கு Personal என்பதை தெரிவு செய்யவும். பின்னர் Upgrade செய்து கொள்ளலாம். [நிறுவனங்கள் பெயரில் என்றால் மூன்றாவதை தெரிவு செய்ய வேண்டும்]
3. அடுத்த பக்கத்தில் உங்கள் தகவல்களை நீங்கள் தர வேண்டும். இதில் உங்கள் First Name என்பதில் உங்கள் பெயரை தரவும், Last Name என்பதில் Initial தரவும். இதில் உங்கள் உண்மைப் பெயரை பயன்படுத்தவும். தவறு எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லாம் முடித்த பின் Agree & Create Account -ஐ கிளிக் செய்யுங்கள்.
4. அடுத்த பக்கத்தில் My Account என்பதை கிளிக் செய்யுங்கள்.
5. இப்போது வரும் பக்கத்தில் உங்கள் Bank Account கேட்கப்படும். அதில் Add bank என்பதை கிளிக் செய்யவும்.
6. அதில் உங்கள் அக்கௌன்ட் பெயர், பேபால் கணக்கோடு ஒத்துப் போக வேண்டும்.  அடுத்து உள்ள கட்டங்களில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்பவும். NEFT/IFSC Code அறிய நீங்கள் உங்கள் பேங்க் பெயர் மற்றும் ஊர் போன்றவற்றை இங்கே கொடுத்து தேடலாம்.
7. இந்த தகவல்களை நிரப்பிய பின்னர் Continue கொடுக்கவும்.

8. அடுத்த பக்கத்தில் Save என்பதை கொடுத்து விடவும்.
9. இப்போது Paypal உங்கள் வங்கிக் கணக்கில் 4 முதல் 5 நாட்களுக்குள் கொஞ்சம் பணம் போடும். [இந்திய ரூபாயில் இரண்டு ரூபாய்க்கும் குறைவாக இருக்கும்.] Two Deposits ஆக போட்டு இருக்கும். அதை செக் செய்து அதை உங்கள் Paypal கணக்கில் நுழைந்து Account Overview பகுதியில் “Confirm Bank Account” என்பதை கிளிக் செய்து தர வேண்டும்.
இது சரியாக இருந்தால் உங்கள் Paypal கணக்கு Verify செய்யப்பட்டு விடும். இனி Paypal கணக்கில் நீங்கள் பணங்களை பெற இயலும். அதை எளிதாக உங்கள் வங்கிக கணக்குக்கு Transfer செய்யவும் இயலும்.
Personal Account களுக்கு Fees எதுவும் கமிஷன் ஆக பெறப்படுவது இல்லை. அதனால் அதைப் பற்றிய கவலை வேண்டாம்.
------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavi713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்