1 ஜன., 2014

YouTube வீடியோக்களை மென்பொருள் எதுவுமின்றி தரவிறக்க.

Posted by Anto Navis


நாம் YouTube இலே பல்வேறு வீடியோக்களை பார்வையிடுகின்றோம். இவற்றை தரவிறக்குவதற்காக பல்வேறு மென்பொருட்களை பயன்படுத்தியிருப்போம். ஆனால் இப்பதிவினூடாக மென்பொருட்கள் எதுவுமின்றி எவ்வாறு விரும்பிய வடிவங்களில் வீடியோக்களை தரவிறக்கிக் கொள்வது என்று பார்ப்போம்.


முதலில் உங்களுக்கு விரும்பிய வீடியோக்குரிய URL முழுவதையும் கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு Copy செய்துகொள்ளுங்கள்.



இப்போ Browser இல் புதிய TAB இல் நீங்கள் Copy செய்த URL ஐ Pasteசெய்துகொள்ளுங்கள்.

இப்போ நீங்கள் Paste செய்த URL ஐ கீழ் காட்டப்பட்டவாறு “ www. ” இற்குப் பதிலாக “  ss ” என்று மாற்றிய பின்னர் Enter செய்யவும் அல்லது பக்கத்தைRefresh செய்துகொள்ளவும்.



இப்போ உங்களுக்கு புதிய பக்கம் திறக்கும். இதிலே கீழ் காட்டியவாறு வட்டமிடப்பட்டுள்ளதில் உங்களுக்கு விரும்பிய வீடியோ வடிவத்தை தெரிவுசெய்து தரவிறக்கிக் கொள்ளவேண்டியதுதான்......

நன்றி நண்பர்களே..!!

http://adfoc.us/19339036189259இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம் 


2 கருத்துகள்:

பிரபலமான இடுகைகள்