20 மார்., 2014

பேஸ்புக் தளத்தில் ஏமாறாதீர்கள்!

Posted by Anto Navis


பேஸ்புக் தளம் தற்போது நமது அன்றாட வாழ்வில் ஒன்றாக மாறி வருகிறது. கோடிக்கணக்கான பயனர்கள் இருக்கும் பேஸ்புக் தளத்தில் பல ஏமாற்றுப் பேர்வழிகளும் சுற்றிக் கொண்டு தான் இருக்கின்றனர்.  அத்தகையவர்களில் ஒரு வகையினர் பற்றி தற்போது பார்ப்போம்.


இந்த ஏமாற்று பேர்வழிகள் செய்யும் மோசடி ஒரு சங்கிலித் தொடர் ஆகும்.
  1. உங்கள் நண்பர்கள் கணக்கை ஹேக் செய்ய, உங்கள் ப்ரொபைலை யார் பார்த்தார்கள் என்று அறிய, வித்தியாசமான பேஸ்புக் தீம் என்று பல்வேறுவிதமாக கூறி ஒரு புகைப்படத்தில் சுட்டி (Link)  கொடுத்து நிரல்களைக் கொடுப்பார்கள்.
  2. அதனை உங்கள் நண்பர்கள் பேஸ்புக் ப்ரொபைலுக்கு சென்றோ, அல்லது பேஸ்புக் முகப்பு பக்கத்திலோ பயன்படுத்துமாறு வழிமுறைகளை சொல்வார்கள்.
  3. அப்படி நீங்கள் செய்தால் உங்கள் பேஸ்புக் பக்கம் வித்தியாசமான தீமுக்கு மாறும். இது உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டதற்கான அறிகுறி (உங்கள் நண்பர்கள் கணக்கு அல்ல!).
  4. பிறகு ஸ்டெப் ஒன்றில் சொன்ன புகைப்படத்தில் உங்கள் கணக்கு மூலம் உங்கள் நண்பர்கள் பெயர்கள் தானாக டேக் செய்யப்படும்.
  5. பிறகு உங்கள் நண்பர்கள் ஸ்டெப் ஒன்று முதல் செய்யத் தொடங்குவார்கள்.
இப்படி செய்வதினால் அவர்களுக்கு என்ன லாபம்? இருக்கிறது. இந்த பிரச்சனை இத்துடன் முடிந்துவிடவில்லை.
ஹேக் செய்யப்பட்ட உங்கள் கணக்கு மூலம் உங்களுக்கே தெரியாமல் பல்வேறு பேஸ்புக் பக்கங்கள் லைக் செய்யப்படும்.
நீங்கள் ஏமாற்றப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் பேஸ்புக் கடவுச்சொல்லை மாற்றுவது.
பிறகு உங்கள் ப்ரொபைலுக்கு சென்று Activity Log என்பதை க்ளிக் செய்யுங்கள்.
activity log
அங்கு உங்களுக்கு தெரியாமல் லைக் செய்யப்பட்டவைகள் இருக்கும். அதன் பக்கத்தில் உள்ள பென்சில் ஐகானை க்ளிக் செய்து Unlike செய்துவிடுங்கள்.
இப்படி லைக் செய்யப்படும் பேஸ்புக் பக்கங்கள் பணத்திற்காக விற்கப்படுகிறது. பேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்துங்கள், ஏமாற்று பேர்வழிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளுங்கள்…!

------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavis713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்