13 ஜூன், 2014

உங்கள் Gmail கணக்கை இன்னுமொரு கணினி மூலம் பயன்படுத்தி விட்டு அதனை Sing out செய்ய மறந்து விட்டீர்களா?

Posted by Anto Navis

நீங்கள் எதோ ஒரு அவசர தேவைக்காகவோ அல்லது வேறு சந்தர்ப்பங்களிலோ உங்கள் Gmail கணக்கை இன்னுமொரு கணனி மூலம் அல்லது Mobile சாதனம் மூலம் பயன்படுத்தி விட்டு அதனை Sing out செய்ய மறந்து விட்டீர்களா?


அவ்வாறு Sing out செய்ய தவறும் பட்சத்தில் உங்கள் விலைமதிப்பற்ற தகவல்களை ஏனையோர் பார்த்துவிடும் சந்தர்பங்களும் ஏற்படுவதுண்டு.



எனவே இதனை Sing out செய்து கொள்வதற்கு மீண்டும் குறிப்பிட்ட கணனியை அல்லது Mobile சாதனத்தை அணுகித்தான் ஆகவேண்டும் என்பதில்லை.

நீங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ பயன்படுத்தும் கணனி மூலமாகவும் குறிப்பிட்ட கணக்குக்குள் சென்று Sing out செய்ய மறந்துவிட்ட அதனை Sing out செய்து கொள்ளலாம்.
World Cup 2014
இதனை மேற்கொள்ள ......

குறிப்பிட்ட Gmail கணக்குக்குள் உள்நுழைந்த பின் திறக்கப்படும் பக்கத்தில் கீழ்பகுதியில் Last account activity என்பதுடன் Details என்ற ஒரு இணைப்பு இருக்கும்.

பின் அதனை சுட்டுவதன் மூலம் திறக்கப்படும் புதிய சாளரத்தில் நீங்கள் குறிப்பிட்ட கணக்குக்குள் எந்தெந்த சாதனம் மூலம் உள்நுழைந்துள்ளீர்கள், எவ்வளவு நேரத்துக்கு முன் உள்நுழைதீர்கள், எந்த இணைய உலாவியை பயன்படுத்தி உள்நுழைதீர்கள் என்பதையெல்லாம் பட்டியல் இட்டு காட்டும்.

பின் Sing out all other session என்பதனை சுட்டுவதன் மூலம் நீங்கள் Sing out செய்ய மறந்த அத்தனை சாதனங்களிலிருந்தும் வெளியேறிக்கொள்ளலாம்.

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்