23 நவ., 2014

பேஸ்புக்கில் Trusted Contacts என்றால் என்ன? அதன் பயன் என்ன?

Posted by Anto Navis
இன்றைக்கு நம் பேஸ்புக் பக்கத்தை யாரேனும் ஹாக் செய்து விட்டால், கிட்டத்தட்ட நம் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் இன்னொருவர் கைக்கு சென்றுவிடும் அபாயம் உள்ளது. இதனாலேயே பேஸ்புக் தனது பயனர்களின் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இதில் ஒரு பாதுகாப்பு வசதி தான் “Trusted Contacts”. 
Trusted Contacts என்றால் என்ன?
பாஸ்வேர்டை மறந்துவிட்ட காரணத்தினாலோ அல்லது யாரேனும் ஹாக் செய்து விட்டாதாலோ நம் பேஸ்புக் அக்கவுண்ட்டில் நுழைய முடியவில்லை என்றால் நாம் நம் ஈமெயில் மூலம் நம் கணக்கை திரும்ப பெறலாம். நம்மால் ஈமெயில் கணக்கை அக்செஸ் செய்ய முடியவில்லை என்றால் நம் Trusted Contacts மூலமும் நம் கணக்கை திரும்ப பெற இயலும்.
இதன் முக்கிய அவசியம் என்னவெனில் நம்மால் ஈமெயில், போன் மூலமும் நம் பேஸ்புக் கணக்கை திரும்ப பெற முடியவில்லை என்றால் Trusted Contacts இல்லை என்றால் நம் கணக்கை திரும்ப பெறுவது மிக கடினமாக இருக்கும். அதே சமயத்தில் இந்த வசதியை நாம் பயன்படுத்தினால் நம் கணக்கை திரும்ப பெறுவது எளிதாகும்.
அதே சமயம் Trusted Contacts என்பதில் பெயருக்கு ஏற்றார் போல உங்களுக்கு நம்பிக்கையானவர்களை மட்டும் சேருங்கள், அதே போல பேஸ்புக்கை அடிக்கடி பயன்படுத்தும் நண்பராகவும் அவர் இருக்கட்டும்.
எப்படி Trusted Contacts-ஐ சேர்ப்பது?
உங்கள் பேஸ்புக் கணக்கில் Settings >> Security என்ற பக்கத்திற்கு செல்லவும். இப்போது கீழே உள்ளது போல Trusted Contacts என்ற ஒரு பகுதி இருக்கும்.

Security Settings
அதில் “Choose Trusted Contacts” என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது எப்படி Trusted Contacts மூலம் நம் கணக்கை திரும்ப பெற இயலும் என்ற சொல்லப்பட்டிருக்கும். அதிலும் ”Choose Trusted Contacts” என்பதை கிளிக் செய்யுங்கள்.

Choose Trusted Contacts
இப்போது அடுத்த விண்டோவில் உங்களின் Trusted Contacts-ஐ நீங்கள் Add செய்யலாம்.

Choose Trusted Contacts 2
இதில் 3-5 நண்பர்களை நீங்கள் சேர்க்கலாம்.

Trusted Contacts
இவர்கள் மூலம் பேஸ்புக் கணக்கை மீட்க முடியும் .

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்