20 ஜூன், 2015

ஒரே கருவியில் இரு whatsapp பயன்படுத்துவது எப்படி?

Posted by Anto Navis
Whatsup                                      
    பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்ஆப் இலவச அழைப்புகள், புகைப்படம், வீடியோ, இசை மற்றும் ஃபைல்களை பறிமாறி கொள்ள உதவுகின்றது. தற்சமயம் பெரும்பாலானோரும் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி வருவதற்கு முக்கிய காரணமாக அதன் எளிய வடிவமைப்பு மற்றும் சிறப்பான சேவையை கூறலாம். இருந்தும் வாட்ஸ்ஆப் செயலியில் ஒரே குறை இருக்கின்றது, டூயல் சிம் ஆன்டிராய்டு போன்களை பயன்படுத்துவோர் இரு சிம் கார்டுகளிலும் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது. ஒரு ஸ்மார்ட்போனில் ஒரு வாட்ஸ்ஆப் அக்கவுன்டு மட்டும் தான் பயன்படுத்த முடியும். இந்த பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும் ஆன்டிராய்டு செயலி தான் OGWhatsApp, இந்த செயலியை பயன்படுத்தி பயனாளிகள் இரு அக்கவுன்டை ஒரே ஸ்மார்ட்போனில் பயன்படுத்த முடியும்.


OGWhatsApp இரு வாட்ஸ்ஆப் அக்கவுன்டுகளை ஒரே கருவியில் பயன்படுத்த அனுமதிக்கின்றது, இதை செய்ய உங்களது போனினை ரூட் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.உங்களது வாட்ஸ்ஆப் டேட்டாவை முழுமையாக பேக்கப் செய்து ரீ ஸ்டோர் செய்ய வேண்டும்.வாட்ஸ்ஆப் டேட்டாக்களை அழிக்க வேண்டும், இதை மேற்கொள்ள செட்டிங்ஸ் >> ஆப்ஸ் >> வாட்ஸ்ஆப் >> க்ளியர் டேட்டா என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
அடுத்து /sdcard/WhatsApp directoryயை /sdcard/OGWhatsApp என பெயர் மாற்ற வேண்டும். இதை மேற்கொள்ள ஃபைல் மேனேஜர் பயன்படுத்தலாம்.ஒரிஜினல் வாட்ஸ்ஆப் செயலியை உங்களது ஆன்டிராய்டு கருவியில் இருந்து அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.அடுத்து OGWhatsApp செயலியை உங்களது ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
இன்ஸ்டால் செய்த பின் ஒரிஜினல் வாட்ஸ்ஆப் செயலியில் பதிவு செய்யப்பட்ட பழைய நம்பரை ஓஜி வாட்ஸ்ஆப் செயலியில் வெரிஃபை செய்ய பயன்படுத்த வேண்டும்.பின் ஒரிஜினல் வாட்ஸ்ஆப் செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்