27 ஜூலை, 2014

செல்போனில் சிக்னலே இல்லாமல் மெசேஜ் அனுப்புவது எப்படி…..

Posted by Anto Navis
செல்போனில் சிக்னலே இல்லாமல் மெசேஜ் அனுப்புவது எப்படி…..
முழுவதும் விரைந்து செய்தி அனுப்ப முன்பு மோர்ஸ் என்பவரின் தந்தி (டெலிகிராம்) பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. இப்போது சாதாரண போன், பேஜர், செல்போன் என அடுத்த கட்டத்துக்கு தொழில்நுட்ப வளர்ச்சி சென்றது. இதன் மூலம் எஸ்எம்எஸ் செய்திகள் எம்எம்எஸ் எனப்படும் படங்கள் அனுப்பப்படுகின்றன. ஆனால், செய்திகள், படங்களை அனுப்ப செல்போன் டவர் சிக்னல் இருப்பது அவசியம். சிக்னல் கிடைக்காத மலை பிரதேசங்கள், கடல் வழிகள், ஆழமான சுரங்கங்கள் ஆகியவற்றில் செய்திகளை அனுப்ப முடியவில்லை. 

இந்தப்பிரச்சனைக்கும் தீர்வுகண்டுள்ளது கோரெனா(goTenna) என்னும் நிறுவனம்.இந்நிறுவனம் ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளது.அதற்க்கான அப்பிளிகேஷனையும் உருவாக்கியுள்ளது.செல்போனில் சிக்னல் இல்லாதபோது இந்த அப்பிளிகேஷனை பயன்படுத்தி மற்றவருடன் எமது மெசேஜ்களைப் பகிர்ந்துகொள்ள முடியும்.இதற்கு ஒரு நிபந்தனை என்னவெனில் அவரும் இந்த கோரெனா(goTenna) கருவியை வைத்திருக்கவேண்டும்.இதில் நடைபெறும் செயற்ப்பாடு என்னவெனில் நீங்கள் இந்த அப்பிளிகேஷனைப் பயன்படுத்தி மெசேஜ் அனுப்பும் போது உங்கள் செல்போனுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த கோரெனா(goTenna) கருவிக்கு முதலில் மெசேஜ் பாஸ் செய்யப்படும்.அக்கருவி இந்த மெசேயை ரேடியோ சிக்க்னலாக மாற்றி அனுப்பும் அதை குறிப்பிட்ட நபர் இதே கோரெனா(goTenna) கருவியை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.இக்கருவி காடுகளில் பயனிப்பவற்களுக்கும் மலையேறுபவர்களுக்கும் மற்றும் சுரங்கப்பணியாளர்களுக்கும் வரப்பிரசாதமாக அமையும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்