கணினி உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணினி உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 ஜூன், 2015

Hard disk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய

Posted by Anto Navis

Picture



அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டுகளில் பலவிதமான கோளாருச் செய்திகள் காணப்படும். விண்டோஸ் நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற கோளாருச் செய்திகள் அதிகமாக காணப்படும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம்தேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில பைல்கள் நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும் அந்த பைல்களால் நம்முடைய கணினியில் அடிக்கடி ஏரர் செய்தி காட்டும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது செக்டர் பகுதிகளாகவே சேமிக்கப்படும். மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும் இந்த பகுதிகளில் மீண்டும் தகவல் பதியப்படும் முழுமையாக இல்லை குறிப்பிட்ட பகுதியில் மட்டும், மற்றவைகள் வழக்கம் போல காலியாக உள்ள இடத்தில் பதியப்படும். இதனால் வன்தட்டில் எரர் செய்தி வருவதோடு கணினி தொடக்கமும் மந்தமாகும். இதுபோன்ற எரர் செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

                           இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து வேண்டிய ட்ரைவ் கோலனை தேர்வு செய்து, Read only பொதானை அழுத்தி சோதனை செய்து கொண்டு, எரர் செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும். எரர் செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த எரர் செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். வன்தட்டினை சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். 
Read More

27 ஏப்., 2015

TIN NUMBER... டின் நம்பர் என்றால் என்ன?

Posted by Anto Navis

TIN NUMBER. டின் நம்பர் என்றால் என்ன?
ஏன் இதனை ஒருவர் பெற வேண்டும்?
இதனை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

தமிழ்நாட்டில் தொழில் செய்பவர்கள் அரசுக்கு வரி செலுத்துவதற்காக உள்ள ஒரு அடையாள எண்ணை டின் (Taxpayer identification number) நம்பர் என்று சொல்கிறோம். புதியதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள், தங்கள் தொழில் சம்பந்தமான அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து இந்த எண்ணை வாங்க வேண்டும்.
உங்களது தொழில் எந்த (உற்பத்தி, சேவை , வர்த்தகம் அல்லது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி) ரீதியாக இருந்தாலும் தாங்கள் அதன் சம்பந்தமான அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்து டின் நம்பரை கண்டிப்பாக வாங்க வேண்டும்.
இதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள, “வணிகவரித்துறை” அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்யலாம்.
உங்களது தொழிலை வேறு ஒரு மாநிலத்தில் தொடங்குவதாக இருந்தால், தாங்கள் அந்த மாநிலத்திடமிருந்தே டின் நம்பரை பெறவேண்டும்.
தங்களது தொழிலானது நமது மாநிலத்தைத் தாண்டி, வேறு மாநிலத்திலும் நடைபெறுகிறது என்றால், அதற்கு மத்திய அரசிடம் விண்ணப்பித்து, மத்திய விற்பனை வரி எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த எண் மொத்தம் 11 இலக்கங்களைக் கொண்டதாகும். ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு குறியீடு உள்ளது.
இந்த எண்ணானது, மதிப்புக் கூட்டு வரி விதிப்பு (Value added tax) எனப்படும் வாட் கணக்கோடு தொடர்புடையதாகும். இந்த எண்ணைப் பெற்று தொழில் நடத்தும் ஒருவர், முறையாக அரசுக்கு வரியை செலுத்திவிட்டுத்தான் தொழில் செய்றார்! என்பதை புரிந்து கொள்ளலாம்.
இந்த எண்ணைப் பெறுவதற்காக Form-F, Form-A விண்ணப்பிக்கும் போது, அதனுடன்
1. தொழில் செய்பவரது புகைப்படம் 2 
2. குடும்ப அட்டை நகல்
3. பான் கார்டு நகல்
4. சொத்து தொடர்பான ஆவணங்கள் நகல்
5. வாடகை ஒப்பந்த பத்திரத்தின் நகல்
6. செய்யும் தொழிலுக்கு ஏற்ப வங்கி வரைவோலை (Demand Draft) 
இது வணிக வரித்துறையின் பெயருக்கு எடுக்க வேண்டும்.
மேலும், ஏற்கனவே தொழில் செய்து கொண்டிருக்கும் இருவரது பரிந்துரை கடிதத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
ஆவணங்களை சரிபார்த்தபின் விண்ணப்பத்தில் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு வணிகவரித்துறையில் இருந்து, சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.
இந்த டின் நம்பரை வைத்து ஒருவர், பல தொழில்களை தொடங்கிக் கொள்ளலாம். ஆனால் எந்த ஒரு தொழிலை தொடங்கினாலும் வணிகவரித்துறை அலுவலகத்தில் கடிதம் மூலம் தெரிவித்துவிட்டு தொடங்க வேண்டும்.
யார் பெயரில் டின் நம்பர் பெறப்பட்டுள்ளதோ, அவர் பெயரில்தான் தொழில்களை தொடங்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

QR Code Image கணினியில் ஸ்கேன் செய்வது எப்படி

Posted by Anto Navis
QR Code பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கலாம். QR Code என்பது ஒரு ரகசிய குறியீடாகும். இந்த QR Code படத்தினுள் Texts, Links, Phone Numbers, Email Address, vcards ஆகியவைகளை மறைத்து ரகசியமாக மற்றவர்களுக்கு பகிரலாம். சமீபமாக இந்த QR கோடினை பல்வேறு துறைகளில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் இதில் முக்கியமானவை விளம்பர துறைகள், இணையதளங்கள், மொபைல் மென்பொருள் நிறுவனங்கள் போன்றவைகளாகும்.

இதுவரை  QR கோடினை மொபைல்கள் மற்றும் இணையதளங்களின் உதவியுடன் ஸ்கேன் செய்து வந்தோம். இனி இந்த QR Code படத்தினை நாம் உபயோகிக்கும் விண்டோஸ் கணினியில் எப்படி ஸ்கேன் செய்வது என்று பார்க்கலாம். QR Code Desktop Reader என்ற இலவச மென்பொருள் இந்த வேலையை சுலபமாக செய்கிறது.

உபயோகிப்பது எப்படி:
  • முதலில் இந்த Code Two QR Reader தளத்தில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொண்டு மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.
  • QR Code Image உங்கள் கணினியில் இருந்தால் From File என்பதை தேர்வு செய்து அந்த படத்தை தேர்வு செய்து கொள்ளவும். 
  • அல்லது QR Code Image ஏதேனும் இணையதளத்தில் இருந்தால் அந்த பக்கத்தை திறந்து கொண்டு இந்த மென்பொருளில் From Screen என்பதை கிளிக் செய்து அந்த QR Code Image ஐ தேர்வு செய்யவும்.
  • QR Code படத்தினை தேர்வு செய்தவுடன் அந்த படத்தில் மறைந்துள்ளதை இந்த மென்பொருள் காண்பிக்கும் அதனை உங்கள் கணினியில் சேமித்து கொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது.

இனி QR Code image களை இந்த முறையில் சுலபமாக ஸ்கேன் செய்து கொள்ளலாம்.
Read More

22 ஏப்., 2015

512MB RAMயை விட குறைந்த கணனிகளில் WINDOWS 7ஐ நிறுவுவது எப்படி?

Posted by Anto Navis
உங்கள் கணனிகள் சில வருட காலங்களுக்கு முன் கொள்வனவு செய்யப்பட்ட சிறப்பியல்புகள் குறைவான கணனிகளாக இருக்கலாம் அல்லது RAM இன் அளவானது512MB யை விட குறைவாக காணப்படலாம். இவ்வாறான நிலையில்  Windows பதிப்புகளில்Windows XP போன்ற இயங்குத்தளத்தையேஉங்களில் பெரும்பாலானோர் பயன்படுத்துவீர்கள். 

சிலருக்கு Windows 7 இயங்குத்தளத்தை நிறுவி பயன்படுத்த ஆசையாகஇருப்பீர்கள், இதற்கு RAM ஒரு தடையாக அமைந்துள்ளதா? கவலையை விடுங்கள்... இங்கு அவ்வாறான 512MBயை விடவும் குறைவான கணனிகளில்Windows 7 பதிப்பை நிறுவுவதற்கான இலகுவான வழியை பகிர்கின்றேன். 

முக்கியாக இச்செயற்பாடினை மேற்கொள்ள Windows 7 இன்  32bit பதிப்பை மட்டுமே பயன்படுத்தலாம்  64bit இயங்குத்தளத்தை 512MB RAMயை விட குறைவான கணனிகளில் இயக்குவது சிரமமானதே.

மேலும் இதற்கு Windows 7 Ultimate பதிப்பை பயன்படுத்த முடியும், ஆனாலும்Home Premium, Home Basicஅல்லது Starter பதிப்புகள் மிகச்சிறந்தது.

கவனிக்க
இதற்கு தேவைப்படுவது
1) Windows 7 32bit ISO பதிப்பு.
2) HEX editor ஒன்று Free Hex Editor Neo(மிகச்சிறந்தது).
3) UltraISO அல்லது powerISO.

இப்போது  படிமுறைகளை பார்ப்போம்.
  1. முதலில் UltraISO அல்லது powerISO வினை உங்கள் கணனியில் நிறுவுங்கள்.
  2. Windows 7 32bit ISO வினை mount செய்து  "winsetup.dll" கோப்பை  sources folder இலிருந்து copy செய்து உங்கள் கணனியில் உள்ள் எதாவது ஒரு local drive வில் Paste செய்து கொள்ளுங்கள்.
  3.  இப்பொழுது Paste செய்து கொண்ட "winsetup.dll" இனை Free Hex Editor Neo இன் உதவியுடன் open செய்து கொள்ளுங்கள் .
    Ctrl + Click on the image to View Full Image
  4.  அதில் 77 07 3D 78 01 சரக்கோவையை (string) தேடிக் கண்டுப்பிடியுங்கள். 
  5. அதனை  E9 04 00 00 00 சரக்கோவையை  கொண்டு படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Replace செய்து save செய்து கொள்ளுங்கள்.
    Ctrl + Click on the image to View Full Image
  6. பின்னர் UltraISO அல்லது powerISO வின் உதவியுடன் Windows 7 32bit ISOவினை open செய்து கொள்ளுங்கள்.  sources folder யை Open செய்து அதிலுள்ள "winsetup.dll"ஐ நீங்கள் திறுத்தியமைத்த "winsetup.dll" இனை கொண்டு replace செய்யுங்கள். பின்  ei.cfg கோப்பை delete செய்வதன் மூலம்  அனைத்து windows 7 SKU களையும் unlock செய்து கொள்ளுங்கள் .பின் அதனை ISO வாக save செய்யுங்கள்.
  7. அதனை Burn செய்து Install செய்யுங்கள்.
Read More

உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் பிரட்ச்சனைகளும் அதன் தீர்வும் !

Posted by Anto Navis

புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு....


நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவராக இருப்பீர்கள். உங்கள் கம்ப்யூட்டரில் திடீரென சில பிரட்ச்சனைகள் வந்துவிடும். உடனே நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்யக்கூடியவரை கூப்பிட்டு என்ன பிரட்ச்சனை என்று பார்க்கச்சொல்வீர்கள். அவர் நல்லவராக இருந்தால் பரவாயில்லை. பணம் பறிப்பவராக இருந்தால் உங்களுக்கு கம்ப்யூட்டர் தெரியாததை புரிந்துகொண்டு சாதாரண பிரட்ச்சனையை எல்லாம் பெரிதாகச் சொல்லி உங்களிடம் காசு பறிக்க பார்ப்பார்...........

சரி இதற்க்கு என்ன செய்யவேண்டும் நான் என்று கேட்கிறீர்களா ?

கம்ப்யூட்டரை பயன்படுத்த ஆரம்பித்துவிட்ட நீங்கள் கம்ப்யூட்டரில் அடிக்கடி ஏற்படும் சாதாரண பிரட்ச்சனைகளைப் பற்றி தெரிந்துகொண்டால் உங்களை யாரும் அவ்வளவு சீக்கிரம் ஏமாற்ற முடியாது.

அப்படி சாதாரணமாக வரக்கூடிய பிரட்ச்சனை என்னென்ன ?

1) உங்கள் கம்ப்யூட்டர் நீங்கள் முன்பு பயன்படுத்தியதை விட ரெம்பவும் வேகம் குறைந்ததாக (Slow) இருந்தால் அதன் வேகத்தை எந்தெந்த முறைப்படி அதிகப்படுத்துவது.

முதலாவதாக உங்கள் கம்ப்யூட்டர் ஸ்டார் ஆகும்போது தானாக திறந்து செயல்பட்டுக்கொண்டிருக்கக்கூடிய சில சாப்ட்வேர்களால் (Automatic Running Programes) உங்கள் கம்ப்யூட்டர் வேகம் குறையலாம்.

இதற்க்கு நீங்கள் Start பட்டனை அழுத்தி Run என்று வருவதை கிளிக் செய்து




அதில் msconfig என்று டைப் செய்து எண்டரை அழுத்தினால் உங்களுக்கு ஒரு தட்டு ஓப்பன் ஆகும்

அதில் Startup என்ற தலைப்பை தேர்ந்தெடுத்து அங்கு டிக் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களில் உங்களுக்கு எந்த புரோகிராம் தேவை இல்லாமல் தானாக திறக்கிறது என்று தோன்றுகிறதோ அந்த புரோகிராம் பெயரில் உள்ள டிக்கை அகற்றிவிட்டு OK செய்துவிடலாம்.

அடுத்து Start > Control Panel > Add or Remove Programs சென்று நீங்கள் இன்ஸ்டால் செய்த தேவை இல்லாத மென்பொருள்களை (Software) நீக்கிவிடலாம்.


அடுத்து My Computer > C Drive சென்று அதன் வலது புறம் கிளிக் செய்து Properties ஐ தேர்ந்தெடுத்து Disk clean up என்ற இடத்தை கிளிக் செய்து


அதில் உள்ள அனைதையும் டிக் செய்து தேவை இல்லாத பழைய டெம்ரவரி பைல்கள் அனைத்தையும் அழித்துவிடலாம். இதில் உள்ள பைல்களை அழிப்பதால் உங்கள் கம்ப்யூட்டருக்கு எந்த பிரட்ச்சனையும் இல்லை.

அடுத்து Start > All Programs > Accessories > System Tools > Disk Defragmenter என்ற பகுதிக்குச் சென்று Defragment என்ற பட்டனை அழுத்தி உங்கள் கம்ப்யூட்டரை கிளின் செய்யலாம்.


இந்த மூன்று முறையில் உங்கள் கம்ப்யூட்டரை கிளீன் செய்வதால் உங்கள் கம்ப்யூட்டரில் முன்பு இருந்த வேகம் குறைவு நீங்கி சிறப்பாக செயல்படும். இதைச் செய்ய நீங்கள் தெரிந்துகொண்டால் உங்களுக்கு ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவர் தேவையில்லை.

2)உங்கள் கம்ப்யூட்டரில் ஏதாவது ஒன்றை நீங்கள் தவறுதலாக செய்யப்போக உங்கள் கம்ப்யூட்டரில் உங்களை வேலை செய்யவிடாமல் கீழே உள்ள படத்தில் உள்ளதுபோல ஒரு பிரட்ச்சனையான பகுதி (Error Display) அடிக்கடி ஓப்பன் ஆகி உங்களை வேலை செய்ய விடாமல் தடுக்கலாம்.



இந்த பிரட்ச்சனை தட்டை (Error Display) எப்படி போக வைப்பது.

உங்கள் கம்ப்யூட்டரில் Start பட்டனை கிளிக் செய்து Help and Support என்ற இடத்தை கிளிக்       செய்யுங்கள்

.

அதில் undo change your computer with System Resotre என்ற இடத்தை கிளிக் செய்து
restore my computer earliery time என்ற இடத்தை கிளிக் செய்தால்
உங்களுக்கு காலெண்டர் போல ஒரு தட்டு ஓப்பன் ஆகும்

அதில் நீங்கள் இரண்டு மூன்று நாளைக்கு முன்பாக உங்கள் கம்ப்யூட்டரில் பிரட்ச்சனை இல்லாமல் இருந்த நாளை தேர்ந்தெடுத்து கிளிக் செய்து Next > Next அழுத்தி Finish செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் ஒரு முறை மூடி திறக்கும் (Restart). அப்படி திறந்த உடன் பாருங்கள் உங்களுக்கு ஏற்பட்ட பிரட்ச்சனை தட்டு (Error Display) மருபடியும் வராது.

3) நீங்கள் தினமும் இண்டெர் நெட் பார்த்துக்கொண்டிருப்பீர்கள் அந்த இண்டெர் நெட் உங்கள் கம்ப்யூட்ருக்கு வருவதற்க்கு என்னென்ன செட்டப் செய்யப்பட்டுள்ளது என்று உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அது பிரட்ச்சனை இல்லை. ஆனால் உங்கள் கம்ப்யூட்டரில் தேதி மற்றும் நேரம் ஓடிக்கொண்டிருக்கும் இடத்தில் இரண்டு கம்ப்யூட்டர் ஒன்றாக இனைந்தது போன்று ஒரு ஐக்கான் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்

. அது விளக்கு போல மின்னுவதால்தான் இண்டெர் நெட் வருகிறது என்று உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். ஆனால் திடீரென அந்த ஐக்கான் அந்த இடத்தில் இல்லாமல் போய் இண்டெர் நெட் வேலை செய்யவில்லை என்றால் அதை எங்கு போய் எடுப்பது மறுபடி இண்டெர் நெட்டை எப்படி வேலை செய்ய வைப்பது என்பது உங்களுக்கு தெரியாது. அதற்க்காக கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவரை கூப்பிட்டு வந்து அவருக்கு பணம் கொடுத்து அதை கொண்டு வருவீர்கள்.

சரி......... அதை எப்படி கொண்டு வருவது.

உங்கள் கம்ப்யூட்டரின் முகப்பில் (Desktop-ல்) My Network Place என்ற ஒரு ஐக்கான் இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால் சரி இல்லை என்றால் அப்படியே அந்த கம்ப்யூட்டர் படத்தில் (Wallpaper-ல்) உங்கள் மவுசை வைத்து அதன் வலது புறம் கிளிக் செய்து Properties சென்று Desktop என்ற தளைப்பை தேர்ந்தெடுத்து Customize Desktop என்ற பட்டனை கிளிக் செய்து மேலே My Network Place என்று எழுதப்பட்ட இடத்தில் பக்கத்தில் உள்ள சிறிய கட்டத்தில் கிளிக் செய்து டிக்கை வரவைத்து ok செய்து அதை மூடிவிடுங்கள்.

இப்பொழுது My Network Place என்ற ஐக்கானை உங்கள் மவுசால் தொட்டு வலது புறம் கிளிக் செய்து Open என்ற இடத்தை அழுத்துங்கள்.

உடனே உங்களுக்கு My Network Place என்ற ஒரு பகுதி ஓப்பன் ஆகும். அதில் வலது புறத்தில் View Network Connections என்று எழுதப்பட்ட இடத்தை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து உங்களுக்கு அதன் வலது புறத்தில் Local Aria Connection என்று ஒரு ஐக்கான் தோன்றும். அந்த ஐக்கானை உங்கள் மவுசால் தொட்டு அதன் வலது புறம் கிளிக் செய்து அதில் வரும் Enable என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள்.


உடனே உங்களுக்கு பழையபடி உங்கள் கம்ப்யூட்டரின் Taskbar டைம் பக்கத்தில் அந்த இண்டெர் நெட் இரண்டு கம்ப்யூட்டர் ஐக்கான் வந்துவிடும். 
இனி உங்கள் கம்ப்யூட்டரில் இண்டெர்நெட்டை நீங்கள் பார்க்கலாம்.



Read More

20 ஏப்., 2015

"பேஸ்புக்" - Facebook மற்றும் "ட்விட்டர்" - Twitter

Posted by Anto Navis

"பேஸ்புக்" - Facebook மற்றும் "ட்விட்டர்" - Twitter போன்ற சமூக வலைத்தளங்களில் உலா வருபவர்கள் பெரும்பாலும் பொய்களையே கூறிவருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இப்போதெல்லாம், சாமான்யர்கள் மட்டுமல்லாது அரசியல், சினிமா, விளையாட்டு, எழுத்து என பலதரப்பட்ட துறைகளைச் சார்ந்தவர்களும் தங்களுக்கென்று பேஸ்புக்கிலோ அல்லது ட்விட்டரிலோ ஒருவலை பக்கத்தை உருவாக்கிக் கொண்டு, அதில் தங்களது சொந்தக் கதை, சோகக் கதைகளை எடுத்துவிடுவது ஃபேஷனாகிவிட்டது.

சாமான்யர்கள் தங்களுக்கு நாட்டமுள்ள இலக்கியமோ அல்லது விளையாட்டோ அல்லது சமூக சேவையோ போன்ற துறைகளை குறிப்பிட்டு, அதே துறைகளில் நாட்டமுள்ளவர்களுடன் குழுவாக இயங்கி, அது தொடர்பான செய்திகளை தங்களது சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர்.

அதேப்போன்று "செலிப்பிரேட்டிகள்" எனப்படும் பிரபலங்களும் - பெரும்பாலும் சினிமா நடசத்திரங்கள் அல்லது விளையாட்டு வீரர்கள் - தங்களது குழந்தை "உச்சா" போனதிலிருந்து நேற்று எந்த கடையில் பிட்ஸா சாப்பிட்டேன் என்பது வரை அடித்து விடுகிறார்கள். அதையும் ஒரு கூட்டம் ஆவலாக படிக்க காத்துக்கொண்டிருக்கிறது.

இவர்கள் கதை இதுவென்றால் அத்வானி போன்ற சீரியஸ் தலைவர்கள், அயோத்தி, காஷ்மீர் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மீதான தங்களது கருத்துக்களை இப்போதெல்லாம் பத்திரிகையாளர்களிடம் கூறுவதைக் காட்டிலும், தங்களது வலைத்தளங்களில்தான் எழுதுகிறார்கள்.

அதே சமயம் எசகுபிசகாக எதையாவது எழுதி, சர்ச்சையில் சிக்கிக்கொள்கிற அரசியல் பிரபலங்களும் உண்டு. சசி தரூரை நினைவிருக்கிறதுதானே...?! விமானத்தில் "எக்கனாமிக்" வகுப்பில் பயணிப்பது மாட்டு தொழுவத்தில் இருப்பதுபோன்று இருப்பதாக தனது ட்விட்டர் தளத்தில் எழுதப்போக, வசமாக வாங்கிக்கட்டிக்கொண்டார்.

இந்தியாவில் மட்டும் இந்த நிலை இல்லை; பல மேற்குலக நாடுகளிலும் இதே கதைதான்!

ஆனால் இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் "கதைப்பவர்கள்" நேரில் பேசும்போது கூறுவதைக் காட்டிலும் பொய்களைத்தான் அதிகமாக அவிழ்த்துவிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பிரிட்டனில் "டைரக்ட் லைன் இன்சூரன்ஸ்" என்ற நிறுவனம், சுமார் 2000 பேரிடம் நடத்திய ஆய்வில், "ஒருவர் மற்ற யாரோ ஒரு நபரிடம் நேருக்கு நேர் பேசும்போது பொய் கூறுவதைவிட, ட்விட்டரிலோ அல்லது ஃபேஸ்புக்கிலோ பொய்களை எழுதும்போதுதான் அதிக சவுகரியமாக உணர்வதாக தெரியவந்துள்ளது.

"பேஸ்புக்" - Facebook மற்றும் "ட்விட்டர்" - Twitter போன்ற சமூக வலைத்தளங்களில் உலா வருபவர்கள் பெரும்பாலும் பொய்களையே கூறிவருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இப்போதெல்லாம், சாமான்யர்கள் மட்டுமல்லாது அரசியல், சினிமா, விளையாட்டு, எழுத்து என பலதரப்பட்ட துறைகளைச் சார்ந்தவர்களும் தங்களுக்கென்று பேஸ்புக்கிலோ அல்லது ட்விட்டரிலோ ஒருவலை பக்கத்தை உருவாக்கிக் கொண்டு, அதில் தங்களது சொந்தக் கதை, சோகக் கதைகளை எடுத்துவிடுவது ஃபேஷனாகிவிட்டது.

சாமான்யர்கள் தங்களுக்கு நாட்டமுள்ள இலக்கியமோ அல்லது விளையாட்டோ அல்லது சமூக சேவையோ போன்ற துறைகளை குறிப்பிட்டு, அதே துறைகளில் நாட்டமுள்ளவர்களுடன் குழுவாக இயங்கி, அது தொடர்பான செய்திகளை தங்களது சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர்.

அதேப்போன்று "செலிப்பிரேட்டிகள்" எனப்படும் பிரபலங்களும் - பெரும்பாலும் சினிமா நடசத்திரங்கள் அல்லது விளையாட்டு வீரர்கள் - தங்களது குழந்தை "உச்சா" போனதிலிருந்து நேற்று எந்த கடையில் பிட்ஸா சாப்பிட்டேன் என்பது வரை அடித்து விடுகிறார்கள். அதையும் ஒரு கூட்டம் ஆவலாக படிக்க காத்துக்கொண்டிருக்கிறது.

இவர்கள் கதை இதுவென்றால் அத்வானி போன்ற சீரியஸ் தலைவர்கள், அயோத்தி, காஷ்மீர் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மீதான தங்களது கருத்துக்களை இப்போதெல்லாம் பத்திரிகையாளர்களிடம் கூறுவதைக் காட்டிலும், தங்களது வலைத்தளங்களில்தான் எழுதுகிறார்கள்.

அதே சமயம் எசகுபிசகாக எதையாவது எழுதி, சர்ச்சையில் சிக்கிக்கொள்கிற அரசியல் பிரபலங்களும் உண்டு. சசி தரூரை நினைவிருக்கிறதுதானே...?! விமானத்தில் "எக்கனாமிக்" வகுப்பில் பயணிப்பது மாட்டு தொழுவத்தில் இருப்பதுபோன்று இருப்பதாக தனது ட்விட்டர் தளத்தில் எழுதப்போக, வசமாக வாங்கிக்கட்டிக்கொண்டார்.

இந்தியாவில் மட்டும் இந்த நிலை இல்லை; பல மேற்குலக நாடுகளிலும் இதே கதைதான்!

ஆனால் இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் "கதைப்பவர்கள்" நேரில் பேசும்போது கூறுவதைக் காட்டிலும் பொய்களைத்தான் அதிகமாக அவிழ்த்துவிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பிரிட்டனில் "டைரக்ட் லைன் இன்சூரன்ஸ்" என்ற நிறுவனம், சுமார் 2000 பேரிடம் நடத்திய ஆய்வில், "ஒருவர் மற்ற யாரோ ஒரு நபரிடம் நேருக்கு நேர் பேசும்போது பொய் கூறுவதைவிட, ட்விட்டரிலோ அல்லது ஃபேஸ்புக்கிலோ பொய்களை எழுதும்போதுதான் அதிக சவுகரியமாக உணர்வதாக தெரியவந்துள்ளது
Read More

19 ஏப்., 2015

FACEBOOK உங்கள் பெயரை மாற்ற வேண்டுமா !!!

Posted by Anto Navis

Facebook தளத்தில் முதல் முறையாக நீங்கள் கணக்கை துவங்கிய பொழுது, உங்கள் பெயரை கொடுத்திருப்பீர்கள். அதன் பிறகு, அந்த குறிப்பிட்ட பெயருக்கு பதிலாக, வேறு ஒரு பெயரை கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றினால்,  உங்கள் பெயரை முகபுத்தகத்தில் எப்படி மாற்ற முடியும் என்பதை பார்க்கலாம்.

Facebook இல் உங்கள் பயனர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு வலது மேற்புறமுள்ள Account லிஸ்ட் பாக்ஸை க்ளிக் செய்து, Account Settings லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

அடுத்து திறக்கும் திரையில், My Account என்பதற்கு கீழாக உள்ள Settings tab தான் Default ஆக இருக்கும், இல்லையெனில் Settings டேபை க்ளிக் செய்யுங்கள்.
இனி கீழே உள்ள Name (Raseem Mass) என்பதற்கு நேராக உள்ள Edit என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள்
அடுத்த திரையில், First Name மற்றும் Last Name ஆகியவற்றை உங்கள் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். மாற்றிய பிறகு Change Name பொத்தானை அழுத்தினால் போதுமானது.
என்னுடைய பக்கத்தில் 5 முறை நான் பெயர் மாதாவும் எனக்கு காடாது 
Alternate Name ஏற்கனவே கொடுக்கவில்லை என்றால் இப்பொழுது கொடுத்துக் கொள்ளலாம். (அதுவும் தமிழில்)
Read More

17 ஏப்., 2015

உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா..? கண்டுபிடிப்பது எப்படி???

Posted by Anto Navis

நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும். சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும்போது, அதனுடைய
உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லா?
உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா?

உண்மையான நிறுவனத்தைப் போன்றே தற்போது போலியான தயாரிப்புகள்
தற்போது விலைக்கு வந்து அசல் எது?

போலி எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு எந்த வித்தியாசமும் இல்லாமல் காணப்படும்.

இவ்வாறான போலி தயாரிப்பு மொபைல்களைக் கண்டறிய கீழ்க்கண்ட வழிமுறைகள் உங்களுக்கு உதவும்.

முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போன் ஒரிஜினல்தானா என்பதைக் கண்டறிய

International Mobile Equipment Identification எனப்படும் IMEI எண்ணை அறிந்துகொள்ள வேண்டும். 

உங்கள் மொபைலில் IMEI எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி? சாதாரண செயல்பாட்டின் மூலம் IMEI எண்ணைக் கண்டறிய முடியும்.

உங்கள் மொபைலில் *#06# என தட்டச்சிடுங்கள்...
உடனே உங்கள் மொபைல் போனிற்கான IMEI எண் காட்டபடும்.
அந்த IMEI எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அந்த IMEI ண்ணை ஒரு SMS ஆக தட்டச்சிட்டு  53235 என்ற எண்ணிற்கு SMS செய்துவிடுங்கள். 

இப்பொழுது உங்கள் பதில் SMS ஆக Success என்ற செய்தி வந்திருக்கும்.

அப்படி வரவில்லையென்றால் உங்கள் மொபைல் போலியானது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். இந்த முறையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம்  இருப்பின் இணையத்தின் மூலமும் நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

**************************************

http://www.numberingplans.com/

**********************************


என்ற இந்த இணைய முகவரிக்கு சென்று நீங்கள் குறித்துவைத்துக்கொண்ட IMEI எண்ணை உள்ளிடுவதன் மூலம் உங்கள் மொபைல் போனைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் நீங்கள் பெற முடியும். 

குறிப்பு: IMEI எண்ணானது பதினைந்து இலக்க எண்ணாக இருக்கும். உங்களுடைய மொபைல் தயாரிப்புக்குரிய நாடுகளையும், தரத்தையும் இந்த IMEI எண்களை வைத்துக் கண்டறிய முடியும். அதாவது நீங்கள் குறித்துவைத்த IMEI எண்ணில் 7,8 வது இலக்க எண்கள் 1. 0,2 அல்லது 2,0 என இருப்பின் ஐக்கிய அரபு எமிரேட்சில் அசெம்பிள் செய்யப்பட்டதாக இருக்கும்.

இதனுடைய தரம் குறைந்ததாக இருக்கும். 2. 0,8 அல்லது 8,0 என இருபின் ஜெர்மனி நாட்டு தயாரிப்பாகவும், தரமானதாகவும் இருக்கும். 3. 0,1 அல்லது 1,0 என இருப்பின் அது பின்லாந்து நாட்டுத் தயாரிப்பாகவும் தரமிக்கதாகவும் இருக்கும். 4. 1,3 என இருப்பின் Azerbaijan
நாட்டு அசெம்பிள் தயாரிப்பாகவும்,தரம் குறைந்தும், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கும்.
Read More

பிரபலமான இடுகைகள்