விண்டோஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விண்டோஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 ஏப்., 2015

QR Code Image கணினியில் ஸ்கேன் செய்வது எப்படி

Posted by Anto Navis
QR Code பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கலாம். QR Code என்பது ஒரு ரகசிய குறியீடாகும். இந்த QR Code படத்தினுள் Texts, Links, Phone Numbers, Email Address, vcards ஆகியவைகளை மறைத்து ரகசியமாக மற்றவர்களுக்கு பகிரலாம். சமீபமாக இந்த QR கோடினை பல்வேறு துறைகளில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் இதில் முக்கியமானவை விளம்பர துறைகள், இணையதளங்கள், மொபைல் மென்பொருள் நிறுவனங்கள் போன்றவைகளாகும்.

இதுவரை  QR கோடினை மொபைல்கள் மற்றும் இணையதளங்களின் உதவியுடன் ஸ்கேன் செய்து வந்தோம். இனி இந்த QR Code படத்தினை நாம் உபயோகிக்கும் விண்டோஸ் கணினியில் எப்படி ஸ்கேன் செய்வது என்று பார்க்கலாம். QR Code Desktop Reader என்ற இலவச மென்பொருள் இந்த வேலையை சுலபமாக செய்கிறது.

உபயோகிப்பது எப்படி:
  • முதலில் இந்த Code Two QR Reader தளத்தில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொண்டு மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.
  • QR Code Image உங்கள் கணினியில் இருந்தால் From File என்பதை தேர்வு செய்து அந்த படத்தை தேர்வு செய்து கொள்ளவும். 
  • அல்லது QR Code Image ஏதேனும் இணையதளத்தில் இருந்தால் அந்த பக்கத்தை திறந்து கொண்டு இந்த மென்பொருளில் From Screen என்பதை கிளிக் செய்து அந்த QR Code Image ஐ தேர்வு செய்யவும்.
  • QR Code படத்தினை தேர்வு செய்தவுடன் அந்த படத்தில் மறைந்துள்ளதை இந்த மென்பொருள் காண்பிக்கும் அதனை உங்கள் கணினியில் சேமித்து கொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது.

இனி QR Code image களை இந்த முறையில் சுலபமாக ஸ்கேன் செய்து கொள்ளலாம்.
Read More

22 ஏப்., 2015

512MB RAMயை விட குறைந்த கணனிகளில் WINDOWS 7ஐ நிறுவுவது எப்படி?

Posted by Anto Navis
உங்கள் கணனிகள் சில வருட காலங்களுக்கு முன் கொள்வனவு செய்யப்பட்ட சிறப்பியல்புகள் குறைவான கணனிகளாக இருக்கலாம் அல்லது RAM இன் அளவானது512MB யை விட குறைவாக காணப்படலாம். இவ்வாறான நிலையில்  Windows பதிப்புகளில்Windows XP போன்ற இயங்குத்தளத்தையேஉங்களில் பெரும்பாலானோர் பயன்படுத்துவீர்கள். 

சிலருக்கு Windows 7 இயங்குத்தளத்தை நிறுவி பயன்படுத்த ஆசையாகஇருப்பீர்கள், இதற்கு RAM ஒரு தடையாக அமைந்துள்ளதா? கவலையை விடுங்கள்... இங்கு அவ்வாறான 512MBயை விடவும் குறைவான கணனிகளில்Windows 7 பதிப்பை நிறுவுவதற்கான இலகுவான வழியை பகிர்கின்றேன். 

முக்கியாக இச்செயற்பாடினை மேற்கொள்ள Windows 7 இன்  32bit பதிப்பை மட்டுமே பயன்படுத்தலாம்  64bit இயங்குத்தளத்தை 512MB RAMயை விட குறைவான கணனிகளில் இயக்குவது சிரமமானதே.

மேலும் இதற்கு Windows 7 Ultimate பதிப்பை பயன்படுத்த முடியும், ஆனாலும்Home Premium, Home Basicஅல்லது Starter பதிப்புகள் மிகச்சிறந்தது.

கவனிக்க
இதற்கு தேவைப்படுவது
1) Windows 7 32bit ISO பதிப்பு.
2) HEX editor ஒன்று Free Hex Editor Neo(மிகச்சிறந்தது).
3) UltraISO அல்லது powerISO.

இப்போது  படிமுறைகளை பார்ப்போம்.
  1. முதலில் UltraISO அல்லது powerISO வினை உங்கள் கணனியில் நிறுவுங்கள்.
  2. Windows 7 32bit ISO வினை mount செய்து  "winsetup.dll" கோப்பை  sources folder இலிருந்து copy செய்து உங்கள் கணனியில் உள்ள் எதாவது ஒரு local drive வில் Paste செய்து கொள்ளுங்கள்.
  3.  இப்பொழுது Paste செய்து கொண்ட "winsetup.dll" இனை Free Hex Editor Neo இன் உதவியுடன் open செய்து கொள்ளுங்கள் .
    Ctrl + Click on the image to View Full Image
  4.  அதில் 77 07 3D 78 01 சரக்கோவையை (string) தேடிக் கண்டுப்பிடியுங்கள். 
  5. அதனை  E9 04 00 00 00 சரக்கோவையை  கொண்டு படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Replace செய்து save செய்து கொள்ளுங்கள்.
    Ctrl + Click on the image to View Full Image
  6. பின்னர் UltraISO அல்லது powerISO வின் உதவியுடன் Windows 7 32bit ISOவினை open செய்து கொள்ளுங்கள்.  sources folder யை Open செய்து அதிலுள்ள "winsetup.dll"ஐ நீங்கள் திறுத்தியமைத்த "winsetup.dll" இனை கொண்டு replace செய்யுங்கள். பின்  ei.cfg கோப்பை delete செய்வதன் மூலம்  அனைத்து windows 7 SKU களையும் unlock செய்து கொள்ளுங்கள் .பின் அதனை ISO வாக save செய்யுங்கள்.
  7. அதனை Burn செய்து Install செய்யுங்கள்.
Read More

உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் பிரட்ச்சனைகளும் அதன் தீர்வும் !

Posted by Anto Navis

புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு....


நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவராக இருப்பீர்கள். உங்கள் கம்ப்யூட்டரில் திடீரென சில பிரட்ச்சனைகள் வந்துவிடும். உடனே நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்யக்கூடியவரை கூப்பிட்டு என்ன பிரட்ச்சனை என்று பார்க்கச்சொல்வீர்கள். அவர் நல்லவராக இருந்தால் பரவாயில்லை. பணம் பறிப்பவராக இருந்தால் உங்களுக்கு கம்ப்யூட்டர் தெரியாததை புரிந்துகொண்டு சாதாரண பிரட்ச்சனையை எல்லாம் பெரிதாகச் சொல்லி உங்களிடம் காசு பறிக்க பார்ப்பார்...........

சரி இதற்க்கு என்ன செய்யவேண்டும் நான் என்று கேட்கிறீர்களா ?

கம்ப்யூட்டரை பயன்படுத்த ஆரம்பித்துவிட்ட நீங்கள் கம்ப்யூட்டரில் அடிக்கடி ஏற்படும் சாதாரண பிரட்ச்சனைகளைப் பற்றி தெரிந்துகொண்டால் உங்களை யாரும் அவ்வளவு சீக்கிரம் ஏமாற்ற முடியாது.

அப்படி சாதாரணமாக வரக்கூடிய பிரட்ச்சனை என்னென்ன ?

1) உங்கள் கம்ப்யூட்டர் நீங்கள் முன்பு பயன்படுத்தியதை விட ரெம்பவும் வேகம் குறைந்ததாக (Slow) இருந்தால் அதன் வேகத்தை எந்தெந்த முறைப்படி அதிகப்படுத்துவது.

முதலாவதாக உங்கள் கம்ப்யூட்டர் ஸ்டார் ஆகும்போது தானாக திறந்து செயல்பட்டுக்கொண்டிருக்கக்கூடிய சில சாப்ட்வேர்களால் (Automatic Running Programes) உங்கள் கம்ப்யூட்டர் வேகம் குறையலாம்.

இதற்க்கு நீங்கள் Start பட்டனை அழுத்தி Run என்று வருவதை கிளிக் செய்து




அதில் msconfig என்று டைப் செய்து எண்டரை அழுத்தினால் உங்களுக்கு ஒரு தட்டு ஓப்பன் ஆகும்

அதில் Startup என்ற தலைப்பை தேர்ந்தெடுத்து அங்கு டிக் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களில் உங்களுக்கு எந்த புரோகிராம் தேவை இல்லாமல் தானாக திறக்கிறது என்று தோன்றுகிறதோ அந்த புரோகிராம் பெயரில் உள்ள டிக்கை அகற்றிவிட்டு OK செய்துவிடலாம்.

அடுத்து Start > Control Panel > Add or Remove Programs சென்று நீங்கள் இன்ஸ்டால் செய்த தேவை இல்லாத மென்பொருள்களை (Software) நீக்கிவிடலாம்.


அடுத்து My Computer > C Drive சென்று அதன் வலது புறம் கிளிக் செய்து Properties ஐ தேர்ந்தெடுத்து Disk clean up என்ற இடத்தை கிளிக் செய்து


அதில் உள்ள அனைதையும் டிக் செய்து தேவை இல்லாத பழைய டெம்ரவரி பைல்கள் அனைத்தையும் அழித்துவிடலாம். இதில் உள்ள பைல்களை அழிப்பதால் உங்கள் கம்ப்யூட்டருக்கு எந்த பிரட்ச்சனையும் இல்லை.

அடுத்து Start > All Programs > Accessories > System Tools > Disk Defragmenter என்ற பகுதிக்குச் சென்று Defragment என்ற பட்டனை அழுத்தி உங்கள் கம்ப்யூட்டரை கிளின் செய்யலாம்.


இந்த மூன்று முறையில் உங்கள் கம்ப்யூட்டரை கிளீன் செய்வதால் உங்கள் கம்ப்யூட்டரில் முன்பு இருந்த வேகம் குறைவு நீங்கி சிறப்பாக செயல்படும். இதைச் செய்ய நீங்கள் தெரிந்துகொண்டால் உங்களுக்கு ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவர் தேவையில்லை.

2)உங்கள் கம்ப்யூட்டரில் ஏதாவது ஒன்றை நீங்கள் தவறுதலாக செய்யப்போக உங்கள் கம்ப்யூட்டரில் உங்களை வேலை செய்யவிடாமல் கீழே உள்ள படத்தில் உள்ளதுபோல ஒரு பிரட்ச்சனையான பகுதி (Error Display) அடிக்கடி ஓப்பன் ஆகி உங்களை வேலை செய்ய விடாமல் தடுக்கலாம்.



இந்த பிரட்ச்சனை தட்டை (Error Display) எப்படி போக வைப்பது.

உங்கள் கம்ப்யூட்டரில் Start பட்டனை கிளிக் செய்து Help and Support என்ற இடத்தை கிளிக்       செய்யுங்கள்

.

அதில் undo change your computer with System Resotre என்ற இடத்தை கிளிக் செய்து
restore my computer earliery time என்ற இடத்தை கிளிக் செய்தால்
உங்களுக்கு காலெண்டர் போல ஒரு தட்டு ஓப்பன் ஆகும்

அதில் நீங்கள் இரண்டு மூன்று நாளைக்கு முன்பாக உங்கள் கம்ப்யூட்டரில் பிரட்ச்சனை இல்லாமல் இருந்த நாளை தேர்ந்தெடுத்து கிளிக் செய்து Next > Next அழுத்தி Finish செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் ஒரு முறை மூடி திறக்கும் (Restart). அப்படி திறந்த உடன் பாருங்கள் உங்களுக்கு ஏற்பட்ட பிரட்ச்சனை தட்டு (Error Display) மருபடியும் வராது.

3) நீங்கள் தினமும் இண்டெர் நெட் பார்த்துக்கொண்டிருப்பீர்கள் அந்த இண்டெர் நெட் உங்கள் கம்ப்யூட்ருக்கு வருவதற்க்கு என்னென்ன செட்டப் செய்யப்பட்டுள்ளது என்று உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அது பிரட்ச்சனை இல்லை. ஆனால் உங்கள் கம்ப்யூட்டரில் தேதி மற்றும் நேரம் ஓடிக்கொண்டிருக்கும் இடத்தில் இரண்டு கம்ப்யூட்டர் ஒன்றாக இனைந்தது போன்று ஒரு ஐக்கான் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்

. அது விளக்கு போல மின்னுவதால்தான் இண்டெர் நெட் வருகிறது என்று உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். ஆனால் திடீரென அந்த ஐக்கான் அந்த இடத்தில் இல்லாமல் போய் இண்டெர் நெட் வேலை செய்யவில்லை என்றால் அதை எங்கு போய் எடுப்பது மறுபடி இண்டெர் நெட்டை எப்படி வேலை செய்ய வைப்பது என்பது உங்களுக்கு தெரியாது. அதற்க்காக கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவரை கூப்பிட்டு வந்து அவருக்கு பணம் கொடுத்து அதை கொண்டு வருவீர்கள்.

சரி......... அதை எப்படி கொண்டு வருவது.

உங்கள் கம்ப்யூட்டரின் முகப்பில் (Desktop-ல்) My Network Place என்ற ஒரு ஐக்கான் இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால் சரி இல்லை என்றால் அப்படியே அந்த கம்ப்யூட்டர் படத்தில் (Wallpaper-ல்) உங்கள் மவுசை வைத்து அதன் வலது புறம் கிளிக் செய்து Properties சென்று Desktop என்ற தளைப்பை தேர்ந்தெடுத்து Customize Desktop என்ற பட்டனை கிளிக் செய்து மேலே My Network Place என்று எழுதப்பட்ட இடத்தில் பக்கத்தில் உள்ள சிறிய கட்டத்தில் கிளிக் செய்து டிக்கை வரவைத்து ok செய்து அதை மூடிவிடுங்கள்.

இப்பொழுது My Network Place என்ற ஐக்கானை உங்கள் மவுசால் தொட்டு வலது புறம் கிளிக் செய்து Open என்ற இடத்தை அழுத்துங்கள்.

உடனே உங்களுக்கு My Network Place என்ற ஒரு பகுதி ஓப்பன் ஆகும். அதில் வலது புறத்தில் View Network Connections என்று எழுதப்பட்ட இடத்தை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து உங்களுக்கு அதன் வலது புறத்தில் Local Aria Connection என்று ஒரு ஐக்கான் தோன்றும். அந்த ஐக்கானை உங்கள் மவுசால் தொட்டு அதன் வலது புறம் கிளிக் செய்து அதில் வரும் Enable என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள்.


உடனே உங்களுக்கு பழையபடி உங்கள் கம்ப்யூட்டரின் Taskbar டைம் பக்கத்தில் அந்த இண்டெர் நெட் இரண்டு கம்ப்யூட்டர் ஐக்கான் வந்துவிடும். 
இனி உங்கள் கம்ப்யூட்டரில் இண்டெர்நெட்டை நீங்கள் பார்க்கலாம்.



Read More

8 ஏப்., 2015

கம்யூட்டரில் அழிக்க முடியாத ஃபைல்களை அழிக்க வேண்டுமா???

Posted by Anto Navis
ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமேஎன்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும்.
பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறதுஎன்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்;ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.
சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும்என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம். எனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றதுஎன்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள்இல்லையாகீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.
1. முதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
எடுத்துக்காட்டாக “myessay. txt” என்னும் பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடையசரியான முகவரி C:\\Documents and Settings\\ User Name \\ My Documents என்பது. பைலின் பெயரையும் இந்த முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள்.
இனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது எப்கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில்Safe Mode with Command Prompt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட் ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\\Documents and Settings\\Your Name\\My Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது Change Directory என்பதைக் குறிக்கிறது. டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல் இப்போது நீக்கப்பட்டுவிடும். அப்பாடி! கம்ப்யூட்டர் உங்களுக்குக் கொடுத்த சவாலில் வெற்றி பெற்றுவிட்டீர்களா!சந்தோஷமா!!
Read More

5 ஏப்., 2015

உங்களுடைய பேஸ்புக் கணக்கு எவ்வாறு Hack செய்யப்படலாம் ?

Posted by Anto Navis

ஹாய்.........

இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு பேஸ்புக் தொடர்பானது அதாவது இன்று பெரும்பாலும் எல்லா நண்பர்களும் பேஸ்புக் பாவனையாளர்கள் இருந்த போதும் சில நண்பர்களுக்கு இந்த பேஸ்புக் பற்றிய முழு விபரம் தெரியாமல் பயன்படுத்துகின்றனர்.......

எல்லோருக்கும் சில பிரச்சினைகள் வரும் அதாவது உங்களுடைய முகநூல் மற்றும் Twitter, Gmail கணக்குகள் திருடப்படுது. அது பற்றிதான் நாம் இன்று பார்க்க இருக்கிறோம்.

உங்களுடைய கணக்குகள் எவ்வாறு திருப்படுகின்றது ? திருடுவது எவ்வாறு?

*குறிப்பு: நான் பேஸ்புக் அடிப்படையாக கொண்டு இந்த பதிவு இருக்கிறது இது போல உங்களுடைய Twitter, Gmail, மற்றைய கணக்குகள் இவ்வாறுதான் திருடப்படும் & படலாம்.

உங்களுடைய கணக்கு திருடுவதட்கான காரணம்:


  • முதலில் உங்களுடைய Password


இது எவ்வாறு திருடுவதுக்கு காரணமாக அமையலாம், அதாவது திருடர்கள் முதலில் உங்களுடைய கணக்கினை இந்த Paasword மூலம் தான் முயட்சிப்பர்கள்.

நீங்கள் கொடுக்கும் Low password
ex : Raseem123, Raseem, NICNumber, Mobile, Lover Name இவ்வாறான Password


  • அடுத்தது நீங்கள் Login செய்யும் முறை



இந்த படத்தில் உள்ளது போல அதில் கிளிக் செய்து Login செய்தால் நீங்கள் உங்களுடைய கணினியினை Off செய்தலும் அது மீண்டும் Login செய்யப்படும்

உங்களுடைய நண்பர்கள் கணினியில் பயன்படுத்தினால் உங்களுடைய நண்பர்கள் திருடுவதுக்கு சந்தர்ப்ப, உள்ளது


  • அடுத்தது Forgot Password கொடுத்து உங்களுடைய கணக்கினை திருடுவது 


இதில் சில கணக்கு எடுக்கலாம் அது நீங்கள் கொடுக்கும் Password மற்றும் உங்களுடைய Profile Info மிகவும் கவனம் கொடுக்க வென்றும்



  • இன்று அதிகளவு உங்களுடைய கணக்கு திருடப்படுவது இவ்வாறுதான் 


இந்த வழிமுறை அதிளவு Hacker தெரிந்திருக்கும் அதாவது Facebook போல உள்ள ஒரு Facebook உருவாக்கி உங்களுடைய கணக்கினை திருட முடியும்





இதை பார்த்தல் பேஸ்புக் போல இருக்கும் ஆனால் அதன் URL பார்த்தல் பேஸ்புக் என்று இருக்காது மேலே படத்தில் உள்ளது போல எதசும் ஒரு URL இருக்கும்

இது பேஸ் புக் மற்றும் இல்லை வேற கணக்குகளுக்கும் இந்த முறையில் ஹாக் செய்யலாம்


  • Software மூலம் ஹக் செய்வது 


இது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் பணம் கொடுத்தால் மாத்திரம் தான் இந்த Software மூலம் ஹக் செய்யலாம்
Read More

1 ஏப்., 2015

விண்டோஸ் 7 இயங்கு தளத்தை தமிழில் பயன்படுத்துவது எப்படி?

Posted by Anto Navis

விண்டோஸ் 7 இயங்கு தளத்தை தமிழில் பயன்படுத்துவது எப்படி?


கணினி உலகம் மற்றும் இணையத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும், அதிகமான வாசகர்களை பெறவும் நிறைய வசதிகளை அறிமுகம் செய்வது வழக்கம். அதில் முக்கியமாக தங்கள் படைப்புகளை குறிப்பிட்ட மொழிகளில் தந்து அதிக பயனர்களை பெறுவது. 
இதுவரை கூகுள், பேஸ்புக் மற்றும் பல மென்பொருட்கள் அறிமுகமான கொஞ்ச வருடங்களிலேயே இந்த விசயத்தில் அடித்து ஆட, இவர்களுக்கெல்லாம் முன்னோடியான மைக்ரோசாப்ட் கொஞ்சம் தாமதமாக இந்த விஷயத்தை கையில் எடுத்து பல வசதிகளை அதன் பயனர்களுக்கு தந்துள்ளது. 

அந்த வகையில் இன்றைய பதிவில் உங்கள் விண்டோஸ் 7 இயங்கு தளம் கொண்ட கணினியை எப்படி தமிழில் பயன்படுத்துவது என்று பார்ப்போம். 

முதலில் இந்த இணைப்பில் சென்று தமிழுக்கான விண்டோஸ் 7 மொழி இடைமுகத் தொகுப்பை (Lanugage Interface Pack - LIP) தரவிறக்கம் செய்யுங்கள். 32 பிட் அல்லது 64 பிட் ஏதேனும் ஒன்றை மட்டும். எது என்ற குழப்பத்தில் உள்ளவர்கள் 32 பிட்டை தரவிறக்கம் செய்யவும். 


இது உங்கள் கணினியில் தரவிறக்கம் ஆன பின்பு, அதை உங்கள் கணினியில் நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இன்ஸ்டால் செய்யும் போது கீழே உள்ளது போல வரும்.


இதில் Next என்பதை தெரிவு செய்து, பின் அடுத்து வரும் பகுதியில் I Accept the license terms என்பதை தெரிவு செய்து மீண்டும் ஒரு Next, அடுத்து மீண்டும் ஒரு Next, இப்போது தமிழ் மொழி உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகும்.


இன்ஸ்டால் ஆன பின் மீண்டும் Next என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் Display மொழியை தெரிவு செய்ய வேண்டும். அதில் தமிழ் என்பதை தெரிவு செய்து "Apply display language to welcome screen and system accounts" என்பதை கிளிக் செய்து "Change Display Lanugage" என்பதை கிளிக் செய்யுங்கள்.


அவ்வளவு தான் இப்போது உங்கள் கணினியை ஒரு முறை நீங்கள் Restart செய்ய வேண்டும்.

இனி உங்கள் கணினி தமிழில் இயங்க ஆரம்பிக்கும். அனைத்து வசதிகளும், செயல்களும் தமிழில் இல்லாவிட்டாலும் பொதுவான பல விஷயங்கள் தமிழில் இருக்கும்.

தமிழில் டெஸ்க்டாப்


தமிழில் ஸ்டார்ட் மெனு
இனி ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட கணினியில் அடிப்படை விசயங்களை செய்ய முடியும்.

மீண்டும் ஆங்கிலத்துக்கு மாற: 
ஸ்டார்ட் மெனு >> கட்டுப்பாட்டுப் பலகம் >> காட்சி மொழியை மாற்றவும் என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் கட்டுப்பாட்டுப் பலகம் >> வட்டாரம் மற்றும் மொழி என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் "விசைப்பலகைகளும் மொழிகளும்" என்கிற பகுதியில் காட்சி மொழி ஒன்றை தேர்வு செய்யவும் என்பதற்கு கீழே English என்பதை தெரிவு செய்யுங்கள்.

ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற (இன்ஸ்டால் செய்த பின்): Control Panel >> Change Display Language என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் Control Panel >> Region and Language என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் Keyboards and Language என்பதில் Choose a Display Language கீழே தமிழை தெரிவு செய்து கொள்ளலாம்.
Read More

பிரபலமான இடுகைகள்