windows 8 tricks லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
windows 8 tricks லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 ஜூன், 2015

பேஸ்புக்கை தடையின்றி பயன்படுத்த வசதியாக ‘லைட்’ என்ற ஆன்ட்ராய்டு ஆப்ஸ் ஃப்ரீ!

Posted by Anto Navis
உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமாக ‘பேஸ்புக்’ திகழ்கிறது. இந்த வலைத்தளத்தை உலகமெங்கும் 144 கோடி பேர் பயனாளர்களாக உள்ளனர். குறிப்பாக இளைய தலைமுறையினர் தூங்கக் கூட மறந்து ‘பேஸ்புக்’ வலைத்தளத்திற்கு அடிமையாகி விடார்கள் என்றால் அது மிகை இல்லை.

facebook_lite.0


இந்நிலையில் இண்டர்நெட் மற்றும் வை-ஃபை நெட் வேகம் குறைவாக இருக்கும் நேரத்தில் பேஸ்புக்கை தடையின்றி பயன்படுத்த வசதியாக ‘லைட்’ என்ற ஆன்ட்ராய்டு ஆப்ஸை வெளியிட்டு நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது பேஸ்புக் நிறுவனம்.முதற்கட்டமாக ஆசியாவில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆப்ஸ் விரைவில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வெளியிடப்பட உள்ளது.

இதுபற்றி பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வளர்ந்த நாடுகளிலும் கூட பல்வேறு இடங்களில் நெட்வொர்க்குகள் வேகமாக இருப்பதில்லை. இதனால், பேஸ்புக்கின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. அதற்கு தீர்வாக இந்த பேஸ்புக் ‘லைட்’ ஆப்ஸ் இருக்கும். இந்த ஆப்ஸ் 1 எம்.பி.க்கும் குறைவான அளவே கொண்டது. இதை ஈஸியாக டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். மிக குறைவான இண்டர்நெட் வேகத்தில் பேஸ்புக்கின் நியூஸ் பீடு, ஸ்டேட்டஸ் அப்பேட்டுகள், போட்டோக்கள் மற்றும் நோட்டிபிக்கேஷன்களை எளிதாக எந்த தடையுமின்றி பார்க்க முடியும்’ என தெரிவித்துள்ளது.
இந்த ஆப்ஸை ஆண்ட்ராய்டு மொபைல்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். பிளே ஸ்டோரில் இருந்து நாம் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
Read More

18 ஜூன், 2015

மென்பொருள்கள் இல்லாமல் கணினியின் வேகத்தை அதிகரிக்க

Posted by Anto Navis
வாங்கிய புதிதில் கணினியில் வேகம்  சூப்பராக இருக்கும்..அதுவே நாளாக நாளாக குறைந்துவிடும்..மென்பொருள் எதுவும் பயன்படுத்தாமலேயே கணினியின் வேகத்தை அதிகரிப்பது எப்படி? என்பதைப் பார்ப்போம்.
நீங்கள் விண்டோஸ் XP பயன்படுத்துபவர்கள் என்றால்...

Start=>Programs=>Run

நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள் என்றால்...

Start=>Programs=>Search=>Run தேர்ந்தெடுக்கவும்.

ஆக... நீங்கள் Run Window வைத் திறக்க வேண்டும். இதற்கு குறுக்கிவிசை Star+R அழுத்தினாலே Run Window திறந்துகொள்ளும். இப்போது அதில் gpedit.msc என தட்டச்சிடுங்கள். புதிதாக ஒரு window open ஆகும். அதில் 

Computer Configuration==>Administrative Templates==>Network==>Qos Packet Scheduler==>Limit Reservable Bandwidth என்ற வரிசையில் செல்லவும். இப்போது Not Configured என்பதில் டிக் மார்க் இருப்பதை கவனியுங்கள்.

இதை Enable என மாற்றிவிட்டு , Bandwith -ஐ 20 லிருந்து 0 க்கு மாற்றம் செய்துவிடுங்கள்.. அவ்வளவுதான்.. இனி உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்து பரிசோதித்துப் பாருங்கள்.. கணினி முன்பைவிட வேகமாக இயங்குவதை உணர முடியும். 
Read More

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க

Posted by Anto Navis
நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள் இருக்கும்.நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து கொள்ளவோ முடியும்.இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது.

இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட Window தோன்றும்.


இதில் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key தேர்வு செய்து கொள்க. உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என ஏதாவது தேர்வு செய்து கொள்க.

தேர்வு செய்த பின் Activate என்ற பட்டனை அழுத்துக.பின் கீழ்க்கண்ட Window தோன்றும்.

இதில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்கவோ முடியாது.மேலும் கோப்பின் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும்.கீழே உள்ள படத்தை பார்க்க.


உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால் முன்பு தேர்வு செய்த key அழுத்தினால் போதும்.அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும்.

தற்போது நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்க முடியும்.
இந்த மென்பொருளை தரவிறக்க 
இங்கே கிளிக் செய்க
Read More

லேப்டாப் கம்ப்யூட்டரில் ஏற்படும் வெப்பத்தை தடுக்க

Posted by Anto Navis

கணினியில் ஏற்படும் வெப்பத்தைக் குறைக்க அதிலேயே காற்றாடிகள் வைத்திருப்பார்கள்.. லேப்டாப்பில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கவும், காற்று பரிமாற்றம் நடைபெறவும் சிறிய துளைகள் லேப்டாப் கணினியின் அடியில் வைத்திருப்பார்கள்.

laptop with stand

நாம் அதை மடியில் வைத்துப் பயன்படுத்துப்போது வெப்பமானது வெளியேறாத வண்ணம் அத்துளைகள் அடைப்பட்டு விடுவதால் மிகுதியான வெப்பம் லேப்டாப்பிலேயே தங்கிவிடுகிறது. இதனால் விரைவாக லேப்டாப் சூடேறுகிறது. இவ்வாறு சூடேறுவதால் ஏற்படும் வெப்பத்தை குறைப்பது எப்படி, வெப்பம் அதிகளவு ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன என்பதை இப்பதிவின் வழியே பார்ப்போம்.


laptop notebook stand
Notebook laptop stand
இத்தகை வெப்பம் அதிகரிக்கும்போது லேப்டாப்கள் தீப்பிடித்த சம்பவங்களையும் நாம் செய்திதாள்களில் படித்திருப்போம். Dell, Sony,acer போன்ற நிறுவனங்களின் லேப்டாப் கணினிகளில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தை வெளியிட்டதால் அவற்றுக்குப் பதிலாக மாற்று பேட்டரிகள் வழங்கப்பட்ட சம்பவங்களும் ஏற்பட்டன.

லேப்டாப் கணினிகளில் அதிக வெப்பத்தை ஏற்படுத்தும் முதற்காரணி இந்த பேட்டரிகள்தான்.. முதலில் இந்த பேட்டரிகள் தரமானதுதானா என சோத்தறிவது முக்கியம். தரமற்ற பேட்டரிகளால் அதிக வெப்பம் ஏற்படும். இது தவிர கணினியில் உள்ள எலக்ட்ரானிக் சாதனங்களாலும் வெப்பம் ஏற்படுகின்றன. இவைகளனைத்தும் கணினி இயக்கத்தை ஆரம்பித்தவுடனேயே வெப்பத்தை வெளியிட ஆரம்பிக்கின்றன். அதனால் அரை மணிநேரம் தொடர்ந்து கணினியை பயன்படுத்தாத நிலையில் கணினியை நிறுத்தி வைக்குமாறு நாளிதழ்களில் குறுந்தகவல்களாக வெளியிடுகின்றனர். காரணம் கணினி வெளிப்படுத்தும் வெப்பம் அதிகம்.
right position - laptop with stand
சாதாரணமாக நம்முடைய வீட்டில் எலக்ட்ரானிக் பொருட்களை இயக்கவிட்டு, சிறிது நேரத்தில் அதை கையால் தொடும்பொழுது இந்த வெப்பத்தை உணர முடியும். சாதாரண Desktop computer -களில் ஏற்படும் வெப்பத்தை விட Laptop computer -களில் ஏற்படும் வெப்பம் அதிகம். காரணம் லேப்டாப் கணினிகளில் குறைந்த இடத்தில் அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களும் வைக்கப்படுவதால்தான். இதனால் தான் லேப்டாப் கணினிகளில் அதிகம் வெப்பம் ஏற்படுகிறது.

அடுத்து இயங்கும் வேகம் அதிகமாக இருப்பதற்காக இந்த லேப்டாப் கம்ப்யூட்டர்களில் அதிக திறனுள்ள எலக்ட்ரானிக் பொருட்கள், விரைவாக இயங்கக்கூடிய Operating system ஆகியவைகள் இடம்பெற்றுள்ளன. இதன் வேக அதிகரிப்பாலும் வெப்பம் கூடுதலாக வெளியிடப்படுகிறது. இந்த வெப்பத்தை வெளியேற்ற லேப்டாப்பினுள் வெப்பத்தை வெளியேற்றப் பயன்படும் விசிறிகள், Heat Sink தகடுகளைப் பொருத்துகின்றனர். எனினும் இதனால் போதிய அளவு வெப்பத்தை வெளியேற்ற முடியாத சூழ்நிலை. மேலும் இதில் பொருத்தப்படும் விசிறிகளின் வேகம் நாளடையவில் குறைந்துவிடுகின்றன. இதனால் வெப்பம் ஏற்படுகிறது.
லேப்டாப் ஸ்டாண்ட்

லேப்டாப்பில் ஏற்படும் அதிக வெப்பத்தை தடுக்கும் முறைகள்:

இதுபோல அதிக வெப்பத்தினால் முதலில் கணனியில் பாதிக்கப்படுவது Hardware தான். Hardware பிரச்னை ஏற்படாமல் இருக்க முதலில் வெப்பத்தை குறைக்கவும், லேப்டாப்பை குளிர்விக்கவும் செய்ய வேண்டும். இதற்கு முதலில் லேப்டாப்பைத் திறந்து அதில் பொருத்தப்பட்டிருக்கும் விசிறிகள் சரியாக இயங்குகின்றனவா என சோதிக்க வேண்டும். அதனுடைய அதிகபட்ச வேகத்தில் விசிறிகள் சுழல வேண்டும். வேகம் குறைந்தாலோ அல்லது சுற்றாமல் இருந்தாலோ சரி செய்ய வேண்டும்.
Laptop fan cleaning
Laptop fan cleaning
புதிய லேப்டாப், அல்லது இதுவரைக்கும் திறந்து பார்க்காத லேப்டாப் (laptop) எனில் அந்த நிறுவனங்களின் Service Center கொடுத்து சோதனை செய்ய வேண்டும். வீட்டிலேயே சோதனை செய்ய நீங்கள் நினைத்தால் அதற்குண்டான மென்பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். கணினியில் எந்தெந்த பகுதிகள் சரியாக இயங்குகின்றன என்பதைக் கண்டறிய மென்பொருள்கள் (Software Program) உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி உங்கள் லேப்டாப்பை திறக்காமலேயே நீங்கள் சோதனை செய்துகொள்ள முடியும்.

வெப்பம் வெளியேறுவதற்கு அமைக்கப்படிருக்கும் காற்றுத் துளைகளை அடிக்கடி கவனிக்க வேண்டும். இதில் தூசிகள் ஏதேனும் படிந்திருக்கிறதா என்பதை சோதனை செய்து சுத்தம் செய்ய வேண்டும். காற்றுத்துளைகளில் அடைப்பு ஏற்பட்டிருந்தாலும் வெப்பம் வெளியேறாமல் அதிகரிக்கும்.

பயாஸ் சோதனை செய்தும் வெப்பம் உருவாவதனை அறிய முடியும். இதற்கு Bios settings மாற்றி அமைக்க உங்கள் லேப்டாப் நிறுவனதின் இணையத்தளத்திற்கு சென்று அவர்கள் கொடுத்திருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி Bios settings மாற்றி அமைப்பதற்கான வழிமுறைகளைக் கொடுத்திருப்பார்கள். BIOS settings Update களும் இணையதளத்தில் கிடைக்கும்.
laptop bios settings page
BIOS Settings
வெப்ப மிகுதியான பகுதிகளில் லேப்டாப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ரேடியேட்டர், கார் என்ஜின், காற்றோட்டம் இல்லாத சிறிய அறைகள், வெட்டவெளியில் சூரிய ஒளி படும் இடங்கள் ஆகிய இடங்களில் லேப்டாப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

மெத்தைகள், தலையணை, தொடைகளின் மேல் வைத்து இயக்குவது ஆகியவைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கால் தொடைகளின் மேல் வைத்து இயக்குவதால் உடலுக்கும் கேடு விளைவிக்கும். மெத்தை விரிப்புகள், தலையணை போன்றவைகளின் மேல் வைத்து இயக்குவதால் லேப்டாப்பிலிருந்து வெப்பம் வெளியேறும் வழிகளை அவைகள் அடைத்துக்கொள்வதால் வெப்பம் அதிகமாகும்.

இதற்கு மாற்று ஏற்பாடாக இதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ள அலுமினிய தாங்கிகளைப் பயன்படுத்தலாம். இத்தகைய பழக்கங்களை நாம் மேற்கொண்டால் லேப்டாப் அதிக வெப்பம் ஏற்படாமல் தடுப்பதோடு, அவற்றில் ஏற்படும் பிரச்னைகளையும் தடுக்க முடியும்.
Read More

டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து பெறும் பயன்கள்

Posted by Anto Navis
கம்ப்யூட்டர் பயனர்கள் பலரும் டெஸ்டாப்பில் ரைட் கிளிக் செய்து Refresh மட்டுமே செய்வார்கள்.
ரைட் கிளிக் செய்யும்போது தோன்றும் விண்டோவில் மேலும் பல பயனுள்ள வசதிகளும் உள்ளன.
பெரும்பாலான பயனர்கள் அவ்வசதிகளைப் பயன்படுத்துவதே இல்லை. அந்த வசதிகளைப் பற்றியும், அதனுடைய பயன்களையும் தெரிந்துகொள்வோம்.
Right Click செய்யும்பொழுது நமக்கு முதலில் தெரியும் பயன்பாடு view.
இது டெஸ்டாப்பில் இருக்கும் அப்ளிகேஷன்களின் ஷார்ட் கட்கள் மற்றும் கோப்புகளின் ஐகான்களை பார்வைக்கு தோற்றம் அளிக்கும் விதத்தை மாற்றுவதற்குப் பயன்படுகிறது.
இதில் உள்ள ஆப்சன்கள்
1. Large icons
டெக்ஸ்டாப்பில் தோன்றும் ஐகான்களை பெரியதாக காட்ட இந்த வசதி பயன்படுகிறது. ரைட் கிளிக் செய்து view >> Large icons என்பதை தேர்ந்தெடுத்திடும்பொழுது டெஸ்க்டாப்பில் தோன்றும் ஐகான்கள் பெரியதாக தோற்றமளிக்கும்.large icons
2. Medium icons
டெக்ஸ்டாப்பில் தோன்றும் ஐகான்களை மீடியமாக காட்ட இந்த வசதி பயன்படுகிறது. ரைட் கிளிக் செய்து view >> Medium icons என்பதை தேர்ந்தெடுத்திடும்பொழுது டெஸ்க்டாப்பில் தோன்றும் ஐகான்கள் மீடியமாக தோற்றமளிக்கும்.
medium-icons
3. Small icons
டெக்ஸ்டாப்பில் தோன்றும் ஐகான்களை சிறியதாக காட்ட இந்த வசதி பயன்படுகிறது. ரைட் கிளிக் செய்து view >> Small icons என்பதை தேர்ந்தெடுத்திடும்பொழுது டெஸ்க்டாப்பில் தோன்றும் ஐகான்கள் மீடியமாக தோற்றமளிக்கும்.
small-icons
4. Auto arrange icons
இந்த வசதியானது டெஸ்க்டாப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள ஐகான்களை தானாகவே ஒழுங்குபடுத்திக்கொள்ளும்.
5. Align icons to grid
இந்த வசதியை தேர்ந்தெடுக்கும்பொழுது டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்களை grid – ல் அலைன் செய்து அழகாக காட்டும்.
icons align to grid
6. Show desktop icons
இந்த வசதியை செயல்படுத்தும்பொழுது டெஸ்க்டாப் ஐகான்கள் தெரியும். டிக் மார்க்கை எடுத்துவிட்டால் டெஸ்க்டாப்பில் ஐகான்கள் மறைந்துவிடும்.
7. Show gadgets
விண்டோஸ் 7 ல் பயனுள்ள calendar, clock, cpu meter, currency, feed headlines, picutre puzzle, slide show, weather, windows media center போன்ற கேட்கெட்கள் உள்ளன. அவற்றை நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருந்தால், அவற்றை டெஸ்டாப்பில் தோன்றச் செய்வதற்கும், தேவையில்லை யெனில் மறையச் செய்வதற்கும் பயன்படும் வசதி இதுவாகும்.
Sort By
இந்த வசதியின் மூலம் டெஸ்டாப்பில் உள்ள ஐகான்களை, Name, Size, Item type, Date modified என்ற வகைகளில் வரிசைப்படுத்தலாம். பெயரின் அடிப்படையில் வரிசைப்படுத்த Name என்பதையும், கோப்புகளின் அளவின் அடிப்படையில் வரிசைப்படுத்த Size என்பதையும், ஐகான்களின் தன்மையின் அடிப்படையில் வரிசைப்படுத்த Item என்பதையும், தேதி அடிப்படையில் வரிசைப்படுத்த Date modified என்ற வசதியையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Desktop ல் ரைட்கிளிக் பயன்பாடு என்ற இப்பதிவு புதிய கணினி பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
Read More

உங்களின் கணினியை மேம்படுத்த அல்லது இரண்டாவது Harddisk வாங்கப் போகிறீர்களா?

Posted by Anto Navis
உங்களின் கணினியில் இடம் போத வில்லை என புதிதாக ஒரு HardDisk வாங்கினால் நல்லது என நினைக்கிறீர்களா?  புதிதாக ஒரு 500 GB அல்லது 1 TB  வாங்கி வைக்கலாம் என ஒரு யோசனை வைத்திருந்தால் அதை சற்று தள்ளிப் போடுங்கள்.
அல்லது., கணினியின் செயலி (Processor) மெதுவாக உள்ளது என புதிய  Core i7 / Core i5 Processor  வாங்கி மேம்படுத்துதலை விட ஒரு 120 GB SSD  வாங்கி அதில் உங்களின் Windows + Softwaresஐ பதியும் போது உள்ள வேக மாற்றம் சமமாக இருக்கும்.
நாம் பொதுவாக வாங்கும் IDE, SATA, SATA2  Harddisk அல்லாமல் ஒரு SSD  வாங்குவது பற்றி யோசியுங்கள்.
நீங்கள் ஒரு புதிய SSD வாங்கி அதில் உங்களின் OS மற்றும் அனைத்து மென்பொருள்களையும் (Photoshop, Coral, AutoCad, 3D Studio Max) போன்ற அதிக செயல் திறன் வேண்டிய அனைத்து மென்பொருளையும் அதிலேயே பதியுங்கள் (Install).
இப்போது உங்களின் கணினியில் இரண்டு Harddisk இருக்கும். SSD இல் OS & Software installations. ஏற்கனவே இருந்த Harddiskஇல் பாடல்கள் மற்றும் படங்கள் போன்ற அதிகம் பயன்படுத்தாத (மென்பொருள்கள் மூலம் எடிட்டிங் வேலைகள் செய்யாமல்.. வெறுமனே கேட்பதர்க்கு / பார்ப்பதற்கு மட்டும் பயன்படும் Media கோப்புகள்)
பொதுவாக நமது கணினி மெதுவாக இருப்பதன் முக்கிய காரணம் அதன் Harddiskஇன் திறன்.
Kingston , Corsair, Intel, Samsung  போன்ற பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்குங்கள். விலை சாதாரண Harddiskஐ விட அதிகமாகவே இருக்கும். ஆனால் வாங்கியபின் அதன் வேகம் உண்மையிலேயே பிரமிக்கும் வகையில் இருக்கும்.
இது வேகமானது என்பதற்கு என்ன காரணம்?
பொதுவாக நமது வன் தட்டுகள் (harddisk) உள்ள சில தட்டுகள் (Disks.. similar like our DVDs) இருக்கும்.. அதில் தரவுகளை (Data) எழுதுதல் மற்றும் படித்தல் வேலைகள் (Read & Write operations) நடக்கும். ஆனால் SSD களில் அதன் உள்ளே RAM களில் இருப்பது போல Chipகளே இருக்கும். இதனால் இதில் செய்யப்படும் வேலைகளின் வேகம் மிக மிக அதிகமாக இருக்கும்.
Read More

27 ஏப்., 2015

QR Code Image கணினியில் ஸ்கேன் செய்வது எப்படி

Posted by Anto Navis
QR Code பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கலாம். QR Code என்பது ஒரு ரகசிய குறியீடாகும். இந்த QR Code படத்தினுள் Texts, Links, Phone Numbers, Email Address, vcards ஆகியவைகளை மறைத்து ரகசியமாக மற்றவர்களுக்கு பகிரலாம். சமீபமாக இந்த QR கோடினை பல்வேறு துறைகளில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் இதில் முக்கியமானவை விளம்பர துறைகள், இணையதளங்கள், மொபைல் மென்பொருள் நிறுவனங்கள் போன்றவைகளாகும்.

இதுவரை  QR கோடினை மொபைல்கள் மற்றும் இணையதளங்களின் உதவியுடன் ஸ்கேன் செய்து வந்தோம். இனி இந்த QR Code படத்தினை நாம் உபயோகிக்கும் விண்டோஸ் கணினியில் எப்படி ஸ்கேன் செய்வது என்று பார்க்கலாம். QR Code Desktop Reader என்ற இலவச மென்பொருள் இந்த வேலையை சுலபமாக செய்கிறது.

உபயோகிப்பது எப்படி:
  • முதலில் இந்த Code Two QR Reader தளத்தில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொண்டு மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.
  • QR Code Image உங்கள் கணினியில் இருந்தால் From File என்பதை தேர்வு செய்து அந்த படத்தை தேர்வு செய்து கொள்ளவும். 
  • அல்லது QR Code Image ஏதேனும் இணையதளத்தில் இருந்தால் அந்த பக்கத்தை திறந்து கொண்டு இந்த மென்பொருளில் From Screen என்பதை கிளிக் செய்து அந்த QR Code Image ஐ தேர்வு செய்யவும்.
  • QR Code படத்தினை தேர்வு செய்தவுடன் அந்த படத்தில் மறைந்துள்ளதை இந்த மென்பொருள் காண்பிக்கும் அதனை உங்கள் கணினியில் சேமித்து கொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது.

இனி QR Code image களை இந்த முறையில் சுலபமாக ஸ்கேன் செய்து கொள்ளலாம்.
Read More

18 ஏப்., 2015

வாட்ஸ் ஆப் ஐ கணினியில் எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துக்கொள்ள ஆசையா !!!

Posted by Anto Navis
வாட்ஸ் ஆப் ஐ கணினியில் எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துக்கொள்ள ஆசையா !!!
வாட்ஸ் ஆப் ஐ கணினியில் எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துக்கொள்ள ஆசையா !!!

How to Install WhatsApp On Your PC/Laptop Using BlueStack Software Its works Perfectly on the mentioned os versions such as Windows XP/7/8 and also support the Mac OS

Its one of the best way to use your mobile android apps in your system, it will help to save your time to use your mobile phones, 

For More Tutorials Subscribe Our Youtube Channel: www.youtube.com/user/antonavis7


Read More

9 நவ., 2014

உங்கள் கணிணி வேகமாக செயல்பட.....

Posted by Anto Navis

மிக மெதுவாகச் செயல்படும் கணிணி உங்களை வெறுப்பேற்றுகிறதா? கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணிணியை விரைவாகச் செயல்பட வைக்க முடியும்.


1. உங்கள் கணிணியைச் சுத்தம் செய்யுங்கள்:
உங்கள் கணிணியின் டெஸ்க்டாப் அடைசலாக இல்லாமல் இருந்தாலே உங்கள் கணிணி விரைவாகச் செயல்படத் தொடங்கும். அதேபோல், உங்கள் சி ட்ரைவ் முழுக்க கோப்புகளை அடைத்து வைக்காமல் நிறைய வெற்றிடம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். குறைந்தது 25 சதவீத இடமாவது காலியாக இருந்தால்தான் கணிணியின் வேகம் அதிகரிக்கும்.

* இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யுமுன் உண்மையிலேயே அது தேவையான கோப்புதானா என்று பார்த்துக்கொண்டு பதிவிறக்கம் செய்யுங்கள். அக்கோப்பின் பயன்பாடு முடிந்தபின் அதை அழித்துவிடுங்கள்.

* உங்களுக்குப் பயன்படாத மென்பொருட்களைத் தேவையில்லாமல் சேமித்து வைக்கவேண்டாம்.

* புகைப்படங்கள், பவர்பாயிண்ட்கள், திரைப்படங்கள், பாடல்கள் இவற்றைத் தனியாக ‘சி டி’ ‘டிவிடி’க்களில் பதிந்து வைத்துக்கொண்டால், ‘ஹார்ட் டிஸ்க்’ இடமும் மிச்சமாகும். உங்கள் கணிணி பாதிப்படைந்தாலும், இவை பத்திரமாகவே இருக்கவும் உதவும்.

* ‘ஸ்டார்ட்’ ஐச் சொடுக்கவும். ‘ரன்’ என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் ‘%Temp%’ என்று தட்டச்சு செய்து ‘Enter’ ஐத் தட்டவும். தற்காலிகமாகத் தேவைப்பட்ட, சேமிக்கப்பட்ட கோப்புகள் உள்ள Folder திறக்கப்படும். அதில் உள்ள கோப்புகளை எல்லாம் முழுமையாக அழித்துவிடவும்.

* தேவைப்படாத கோப்புகளை அழிக்கையில் ‘Shift Key’ஐப் பிடித்துக்கொண்டு அழிப்பதன் மூலம், Recyecle Binல் கோப்புகள் சேராமல் நேராக அழிக்கப் படும். அடிக்கடி உங்கள் Recycle Binஐக் காலி செய்வது அவசியம். ஏனினெல் அழிக்கப்பட்ட கோப்புகள் Recycle Binஇல் இருக்குமானால் உங்கள் சி டிரைவின் இடத்தை அது எடுத்துக்கொள்ளுவதாகவே ஆகிறது.

2. உங்கள் கணிணித் திரையில் ‘WallPaper’ பயன்படுத்தாதீர்கள். அது கணிணிச் செயல்பாட்டின் வேகத்தைக் குறைக்கக் கூடியது.

3. கூடியவரை ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறப்பது, பல மென்பொருட்களைப் பயன்படுத்துவது வேகத்தைக் குறைக்கும். தேவையென்றால் ஒழிய, பல கோப்புகளைத் திறந்து வைக்கவேண்டாம். அப்படி ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறக்க நேர்ந்தால், அப்பொழுது பயன்படுத்தும் கோப்பைத்தவிர மற்றவற்றைச் சிறிதாக்கி (Minimize) வைக்கவும்.

4. கணிணியில் பாடல் கேட்டுக்கொண்டே வேலை செய்வது உங்களுக்குச் சுகம்தான். ஆனால் உங்கள் ‘RAM’ இன் சக்தி கண்டிப்பாகக் குறைந்துவிடும். முடிந்தால் இதைத் தவிர்க்கலாம்.

5. உங்கள் கணிணியில் ‘விண்டோஸ்’ ஒவ்வொரு முறை துவக்கப்படுகையிலும், அத்தனை எழுத்துருக்களையும்(Fonts) லோட் செய்கிறது. இதனாலும், தாமதம் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, நீங்கள் பயன்படுத்தாத எழுத்துருக்களை கணிணியில் இருந்து நீக்கி விடலாம். அதற்கு, உங்கள் C:\Windows சென்று Fonts ஃபோல்டரைத்திறந்து, தேவைப்படாத எழுத்துருக்களை அழித்துவிடுங்கள். (எ.கா. Windings). உங்கள் கணிணி பயன்படுத்தும் எழுத்துருக்கள் சிவப்பு நிறத்தில் A என்ற எழுதப்பட்டிருக்கும். அவற்றை அழித்து விடக்கூடாது. கவனம்.

6. பொதுவாக கணிணியில் கோப்புகள் பதியப்படும்பொழுது துண்டாக்கப் பட்டுப் பதியப்பட்டிருக்கலாம் (Fragmentation). இதன் காரணமாக நீங்கள் ஒவ்வொரு முறை அந்தக் கோப்பைத் திறக்கும்பொழுதும் கணிணி அந்த முழுக் கோப்பின் துண்டுகளைத்தேடித் தேடி இணைத்துத் தருகிறது.

இதனால் நீங்கள் கோப்பைத் திறக்கத் தாமதமாகிறது. இப்பிரச்னை,நீங்கள் குறைந்தது மாதம் ஒருமுறையாவது உங்கள் கணிணியை Defragmentation செய்வதன் மூலம் தீர்ந்துவிடும். எப்பொழுதெல்லாம் உங்கள் கணிணியில் ஏராளமான கோப்புகள் குவிந்து விடுகின்றனவோ, உங்கள் கணிணி வட்டியக்கியில் (டிஸ்க் ட்ரைவ்) உள்ள காலியிடம் 15 சதவீதத்திற்கு கீழ் வந்துவிடுகையிலோ, நீங்கள் உங்கள் கணிணியில் புதிய நிரல்கள் அல்லது ‘விண்டோஸ்’ மென்பொருளின் சமீப வெளியீடு எதையாவது நிறுவுகையிலோ நீங்கள் De - fragmentation செய்வது மிகவும் அவசியம்.

7. C Cleaner என்ற நிரலானது உங்கள் கணிணியில் உள்ள தற்காலிகக்கோப்புகள், தேவையற்ற கோப்புகளை நீக்கவும், உங்கள் ‘Registry’ யில் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்யவும் உதவுகிறது.

8. XP Boot Logo ஒவ்வொரு முறையும் உங்கள் கணிணியை இயக்குகையில் நிறுவப்படாதவாறு முடக்கம் செய்யுங்கள்.

9. தேவையற்ற பயன்படாத Portகளை முடக்கிவையுங்கள்

10. உங்கள் Hard Disk ஐ, பிரித்து ‘சி’ ‘டி’, ‘இ’ என தனித்தனியாக வைப்பது உங்கள் கணிணியில் செயல்பாடு வேகமடைய உதவும்.

11. அடிக்கடி உங்கள் கணிணியின் தட்டச்சுப் பலகை, கணிணி எலி, கணிணியில் உள்ள விசிறி முதலியவற்றைச் சுத்தம் செய்யுங்கள்.

12. உங்கள் கணிணியில் நச்சுநிரல்களை கண்டறிவதற்கான/அழிப்பதற்கான நிரல்களை அடிக்கடி பயன்படுத்துங்கள். பல நேரங்களில் நச்சு நிரல்கள், கணிணியில் செயல்படும் திறனைக் குறைக்கின்றன.

13. சமீபத்தில் பார்க்கப்பட்ட கோப்புகள் என்ற பயன்பாட்டை நீங்கள் உபயோகப்படுத்துவதில்லை எனில், அதை நிரந்தரமாக முடக்கி வைக்கலாம். இது உங்கள் கணிணியின் வேகத்தைக் குறைக்கும் ஒரு செயல்பாடு.
அதை முடக்குவதன்மூலம் உங்கள் கணிணியின் வேகம் அதிகரிக்கிறது.

14. உங்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் வேறு இடத்தில் சேமித்தபின் உங்கள் கணிணியை ‘Reformat’ செய்யுங்கள். உங்கள் கணிணியின் வேகத்தை அதிகப்படுத்தக் கூடிய எளிய வழி இது.

15. இணையத்தில் தேவையற்ற விளம்பரங்கள் வந்து உங்கள் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க ‘Ad Blocker’ பொருத்துங்கள்.

16. இது எல்லாவற்றையும் விட மிகவும் எளிய வழி……
ஒரு புதிய நவீனமான கணிணியை வாங்கி விடுங்கள்.
Read More

17 அக்., 2014

how to solve blue screen error in pc

Posted by Anto Navis

சில நேரங்களில் நமது கம்ப்யூட்டரானது கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில் "Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press Control+Alt+Delete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும்.
இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.

ஹார்ட்வேர்_பிரச்னை
கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் குறைந்த பட்சம் 16 இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start => Settings => Control pannel => System => Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.

ராம்_மெமரி_சிப்ஸ்
ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.

ஹார்ட்_டிஸ்க்_டிரைவ்
பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.

வீடியோ_கார்ட்
சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும். StartSettingsControl PanelDisplaySettings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.

வைரஸ்
பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.

பிரிண்டர்
பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பஃப்ஃபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.

சாப்ட்வேர்
முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.

அதிக_வெப்பம்
இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில், சிபியு செட் செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.

மின்_ஓட்டம்
கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு


Read More

11 ஜூன், 2014

விண்டோஸ் 8 ஹேங்கில் இருந்து தப்பிக்க...!

Posted by Anto Navis

தற்போது நீங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறீர்களா?

அது திடீரென்று அது தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு உங்களுக்கு சிக்கல் தருகிறதா? இந்த சிஸ்டங் களில், இதனை நாமே ஆய்வு செய்து தீர்வுகளைக் கண்டறியலாம். முதலில் பிரச்னை என்ன எனப் பார்க்க வேண்டும்.

உங்கள் கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் செய்த வுடன், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, எப்8 கீயை விட்டுவிட்டு அழுத்தவும். இதனைச் சரியாக செய்தால், உங்களுக்கு ஊதா நிறத்தில் ஒரு திரை காட்டப்படும்.

இதன் தலைப்பு "Choose an option" என இருக்கும். இதில் "Continue", "Troubleshoot" மற்றும் "Turn off your PC." என மூன்று ஆப்ஷன்கள் தரப்படும். இவற்றில், Troubleshoot என்ற ஆப்ஷனைத் தட்டுங்கள்;
அல்லது கிளிக் செய்திடுங்கள். 

அதன் பின்னர், "Advanced options" என்பதில் இதே போல கிளிக் செய்திடுங்கள். இங்கு கிடைக்கும் விண்டோவில் பல டூல்கள் காட்டப்படும்.

விண்டோஸ் 8 ஹேங்கில் இருந்து தப்பிக்க...!

இவற்றைப் பயன் படுத்தி, உங்கள் சிஸ்டத்தின் பிரச்னை என்ன வெனச் சரியாகக் கண்டறியலாம்.
ஏற்கனவே, சிஸ்டம் இமேஜ் பைல் உருவாக்கி வைத்திருந் தால், அந்த நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்ல, இதில் ஆப்ஷன் தரப்பட்டி ருக்கும்.

மேலும் கம்ப்யூட்டரை சேப் மோடுக்குக் கொண்டு செல்லவும் ஆப்ஷன் கிடைக்கும். இவற்றின் மூலம், சிக்கலைத் தீர்த்து, கம்ப்யூட்டரை இயல்பு நிலைக்குக் கொண்டு வரலாம்.
Read More

6 மார்., 2014

மறந்துபோன விண்டோஸ்-7 & விண்டோஸ்-8 கடவுச்சொல்லை மாற்றியமைக்க

Posted by Anto Navis


பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்கள் தங்களுடைய கணினிக்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைத்திருப்பர். தீடிரென கடவுச்சொல் தவறு என்று பிழைச்செய்தி வரும், நாம் எவ்வளவு தான் முட்டி மோதினாலும் கணினியை திறக்க முடியாது. அதுபோன்ற சூழ்நிலையில் இதற்கு வழி என்னதான் என்று பார்த்தால் கணினியை பற்றி அறியாதவர்கள் இயங்குதளத்தை நிறுவுதல் ஒன்றே வழி என்று கூறுவார்கள். ஆனால் கணினியில் எந்தவித மாற்றமும் செய்யமல் கடவுச்சொல்லை மாற்றியமைக்க எளிமையான வழி இருக்கிறது.



முதலில் நம்முடைய கணினியில் என்ன இயங்குதளம் நிறுவியுள்ளோமோ அந்த இயங்குதளத்தை சீடி/டிவிடி யிலோ அல்லது பெண்ட்ரைவிலோ

பூட் செய்து கொள்ளவும். பின் பூட் செய்த சீடி/டிவிடி அல்லது பெண்ட்ரைவினை கணினியில் இட்டு, பயாஸ் சென்று First Booting Device யை சீடி/டிவிடி அல்லது பெண்ட் இதில் ஒன்றில் ஏதாவது ஒன்றினை தேர்வு செய்து பின் பயாஸினை சேமித்து பின் அதிலிருந்து பூட் செய்யவும். கணினி பூட் ஆனவுடன் இயங்குதளத்தை நிறுவுவதற்கான தொடக்க விண்டோ தோன்றும் அதில் Repair your computer என்பதை கிளிக் செய்யவும்.

உங்கள் கணினி உள்ள இயங்குதளங்கள் பட்டியலிடப்படும். அதில் எந்த இயங்குதளத்தின் பயனர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமோ அதை தேர்வு செய்து Next என்ற பொத்தானை அழுத்தவும். இதில் நீங்கள் எந்த இயங்குதளத்தின் பயனர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற நினைக்கிறீர்களோ அது எந்த கோலனில் நிறுவப்பட்டுள்ளது என்பதை குறித்து வைத்துக்கொள்ளவும். இங்கு விண்டோஸ் 7 D: கோலனில் நிறுவப்பட்டுள்ளது.

அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Command Prompt என்பதை கிளிக் செய்யவும்.

வரும் கட்டளை பலகையில் கீழ்காணும் கட்டளைகளை உள்ளிடவும்.

copy d:\windows\system32\sethc.exe d:\

மேலே குறிப்பிட்ட கட்டளையை உள்ளிட்டு என்டர் கீயை அழுத்தியவும். 1 file(s) copied. என்ற செய்தி வரும். அடுத்து மீண்டும் மற்றொரு கட்டளையை உள்ளிடவும்.

copy d:\windows\system32\cmd.exe d:\windows\system32\sethc.exe

கட்டளையை உள்ளிட்டு என்டர் கீயை அழுத்தியவுடன் மீண்டும் அதன் மேலே பதியட்டுமா என்ற உங்களிடம் கணினி கேட்கும். நீங்கள் Yes என்று தட்டச்சு செய்து என்டர் கீயை அழுத்தவும். 1 file(s) copied. என்ற செய்தி அடுத்த வரியில் தோன்றும்.

பின் கட்டளை பலகையினை மூடிவிட்டு கணினியை மறுதொடக்கம் செய்யவும். பயனர்கணக்கு முகப்புபக்கம் தோன்றும். அப்போது Shift+Tab கீகளை ஒரு சேர ஐந்து முறை தொடர்ந்து அழுத்தவும். அப்போது ஒரு கட்டளை பலகை தோன்றும். அதில் கீழ்காணும் கட்டளையை உள்ளிடவும்.

net user TCINFO passwd

இதில் net user என்பது இருப்பியல்பு கட்டளை ஆகும். TCINFO என்பது நீங்கள் மாற்ற இருக்கும் விண்டோஸ் பயனர் கணக்கின் பெயர் ஆகும். Passwd என்பது நீங்கள் புதியதாக மாற்ற நினைக்கும் கடவுச்சொல் ஆகும். அதை உங்கள் விருப்பபடி உள்ளிட்டுக்கொள்ளவும். அவ்வளவுதான் இனி நீங்கள் புதிதாக மாற்றிய கடவுச்சொல்லே செயல்படும்.

மீண்டும் வேறொரு பயனர் கணக்கிற்கு கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமெனில், முதலிலிருந்து மீண்டும் அப்படியே செய்யவும். இது விண்டோஸ் 8 ற்கும் பொருந்தும்.
------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavis713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

Read More

பிரபலமான இடுகைகள்