1. Large icons
18 ஜூன், 2015
டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து பெறும் பயன்கள்
Posted by Anto Navis in: computer tricks windows 7 tricks windows 8 tricks windows XP Tricks
கம்ப்யூட்டர் பயனர்கள் பலரும் டெஸ்டாப்பில் ரைட் கிளிக் செய்து Refresh மட்டுமே செய்வார்கள்.
ரைட் கிளிக் செய்யும்போது தோன்றும் விண்டோவில் மேலும் பல பயனுள்ள வசதிகளும் உள்ளன.
பெரும்பாலான பயனர்கள் அவ்வசதிகளைப் பயன்படுத்துவதே இல்லை. அந்த வசதிகளைப் பற்றியும், அதனுடைய பயன்களையும் தெரிந்துகொள்வோம்.
Right Click செய்யும்பொழுது நமக்கு முதலில் தெரியும் பயன்பாடு view.
இது டெஸ்டாப்பில் இருக்கும் அப்ளிகேஷன்களின் ஷார்ட் கட்கள் மற்றும் கோப்புகளின் ஐகான்களை பார்வைக்கு தோற்றம் அளிக்கும் விதத்தை மாற்றுவதற்குப் பயன்படுகிறது.
இதில் உள்ள ஆப்சன்கள்
1. Large icons
1. Large icons
டெக்ஸ்டாப்பில் தோன்றும் ஐகான்களை பெரியதாக காட்ட இந்த வசதி பயன்படுகிறது. ரைட் கிளிக் செய்து view >> Large icons என்பதை தேர்ந்தெடுத்திடும்பொழுது டெஸ்க்டாப்பில் தோன்றும் ஐகான்கள் பெரியதாக தோற்றமளிக்கும்.
2. Medium icons
டெக்ஸ்டாப்பில் தோன்றும் ஐகான்களை மீடியமாக காட்ட இந்த வசதி பயன்படுகிறது. ரைட் கிளிக் செய்து view >> Medium icons என்பதை தேர்ந்தெடுத்திடும்பொழுது டெஸ்க்டாப்பில் தோன்றும் ஐகான்கள் மீடியமாக தோற்றமளிக்கும்.
3. Small icons
டெக்ஸ்டாப்பில் தோன்றும் ஐகான்களை சிறியதாக காட்ட இந்த வசதி பயன்படுகிறது. ரைட் கிளிக் செய்து view >> Small icons என்பதை தேர்ந்தெடுத்திடும்பொழுது டெஸ்க்டாப்பில் தோன்றும் ஐகான்கள் மீடியமாக தோற்றமளிக்கும்.
4. Auto arrange icons
இந்த வசதியானது டெஸ்க்டாப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள ஐகான்களை தானாகவே ஒழுங்குபடுத்திக்கொள்ளும்.
5. Align icons to grid
இந்த வசதியை தேர்ந்தெடுக்கும்பொழுது டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்களை grid – ல் அலைன் செய்து அழகாக காட்டும்.
6. Show desktop icons
இந்த வசதியை செயல்படுத்தும்பொழுது டெஸ்க்டாப் ஐகான்கள் தெரியும். டிக் மார்க்கை எடுத்துவிட்டால் டெஸ்க்டாப்பில் ஐகான்கள் மறைந்துவிடும்.
7. Show gadgets
விண்டோஸ் 7 ல் பயனுள்ள calendar, clock, cpu meter, currency, feed headlines, picutre puzzle, slide show, weather, windows media center போன்ற கேட்கெட்கள் உள்ளன. அவற்றை நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருந்தால், அவற்றை டெஸ்டாப்பில் தோன்றச் செய்வதற்கும், தேவையில்லை யெனில் மறையச் செய்வதற்கும் பயன்படும் வசதி இதுவாகும்.
Sort By
இந்த வசதியின் மூலம் டெஸ்டாப்பில் உள்ள ஐகான்களை, Name, Size, Item type, Date modified என்ற வகைகளில் வரிசைப்படுத்தலாம். பெயரின் அடிப்படையில் வரிசைப்படுத்த Name என்பதையும், கோப்புகளின் அளவின் அடிப்படையில் வரிசைப்படுத்த Size என்பதையும், ஐகான்களின் தன்மையின் அடிப்படையில் வரிசைப்படுத்த Item என்பதையும், தேதி அடிப்படையில் வரிசைப்படுத்த Date modified என்ற வசதியையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Desktop ல் ரைட்கிளிக் பயன்பாடு என்ற இப்பதிவு புதிய கணினி பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
About Admin of the Blog:
Anto Navis is the founder of Computer Tricks In Tamil .He is a Tech Geek, SEO Expert, Web Designer and a Pro Blogger. Contact Him Here
பிரபலமான இடுகைகள்
-
இதோ இன்று நான் நல்ல பதிவு ஒன்றை உங்களுக்கு கொண்டு வந்துள்ளேன். எமக்கு வரும் Wrong Call ஐ எங்கிருந்து வந்தது என்று இலகுவாக கண்டு பிடிக...
-
இந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...
-
இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...
-
தொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...
-
நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...
-
ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பத...
-
Google Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...
-
பகுதி நேர வேலை ! வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ! ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ! உங்கள் திறமைக்கேற்ற வேலை ! சில மாதங்களில்...
-
நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...
-
ஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...
0 comments:
கருத்துரையிடுக