pen drive tricks லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
pen drive tricks லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 ஜூன், 2015

கணினியில் USB PORT ஐ DISABLE செய்வது எப்படி

Posted by Anto Navis
USB PORT அனைவருக்கும் பயன் உள்ளதாக இருந்தாலும் பள்ளி ,கல்லூரி மற்றும் அலுவலகம்  போன்ற இடங்களில் USB னை  பயன்படுத்தவது தடை செய்யப்பட்டு இருக்கும். கணினியில் VIRUS ஆல் பாதிப்பு வந்து விடும் அல்லவா ! அதனால் USB PORT னை DISABLE செய்யப்பட்டு இருக்கும்.இதை எப்படி செய்யும் வழிமுறைகளை காண்போம்.

இதனை WINDOWS இல் DISABLE செய்வது பற்றி பார்ப்போம் 
REGISTRY EDITOR செல்லவேண்டும்  அதற்க்கு ,

RUN----->TYPE  " regedit "

REGISTRY EDITOR சென்றவுடன்,

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor 
மேலே உள்ள PATH க்கு சென்று பின்,
START என்பதை இரண்டு முறை கிளிக் செய்யவேண்டும்.
அடுத்து  ஒரு விண்டோ ஒன்று  திறக்கும்,
அதில் HEXDECMIAL VALUE வை SELECT செய்து VALUE DATA என்ற இடத்தில் "4" என்று மாற்றவேண்டும். (படம் 2). 
 பின் OK கொடுத்து கணினியை RESTART  செய்யவேண்டும்.இதில் கவனிக்க வேண்டிய வை 4 என்று மற்றும் முன் அதில் உள்ள எண்னை ("3") நினைவில் கொள்ளவேண்டும்.அதுதான் ENABLE செய்யவேண்டிய எண் .

REGEDIT WINDOW

படம் -2
Read More

13 செப்., 2014

Pendrive வை RAM ஆக பயன்படுத்தி கணினியின் வேகத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்::::

Posted by Anto Navis
கணினியில் பல தொழில்நுட்பம் வந்துவிட்ட நிலையில் அவற்றின் பயன்பாடுகளை பயன்படுத்த தேவைப்படும் நினைவாற்றலின் அளவை எண்ணி பார்க்கும் போது பகல் கனவாகவே உள்ளது.
use pendriv as ram
இப்பிரச்சனையை கணனியின் RAM அளவை அதிகரிக்கும் பொழுது சரி செய்யலாம். ஆனால் RAMன் விலை அதிகமென்பதால் நாம் பயன்படுத்தும் Pendriveவை RAM ஆக மாற்றி பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் வழிமுறைகள்:
1. பயன்படுத்தும் Pendriveவில் உள்ள அனைத்து தகவலையும் நீக்கிவிட்டு Pendriveவை கனணியின் USB portல் பொறுத்தவும். (Minimum 2 GB).
pendrive_002
2. MY COMPUTER யை Right click செய்து அந்த menuவில் உள்ள PROPERTIES யை click செய்யவும். அப்போது ஓபனாகும் புதிய விண்டோவில் advanced system setting என்பதை கிளிக் செய்யவும்.
3. அடுத்ததாக தோன்றும் system properties menu வில் உள்ள advanced என்ற tab யை click செய்யவும்.
pendrive_004
4. அடுத்ததாக தோன்றும் window வில் performanceக்கு கீழேயுள்ள setting யை click செய்யவும்.
pendrive_005
5.Performance window வில் மீண்டும் advance டேபுக்கு சென்று virtual memory-க்கு கீழாக உள்ள change யை click செய்யவும்.
pendrive_006
6. தோன்றும் அடுத்த window வில் உள்ள உங்களின் pendrive தோற்றத்தை select செய்து custom size யை தெரிவு செய்யவும்.
pendrive_007
7. Initial Size:1020 ,Maximum size:1020 என மாற்றம் செய்யவும். இந்த அளவை உங்களின் pendive அளவை பொறுத்து மாற்றி அமைக்கலாம்.
pendrive_008
8. set என்பதை click செய்யவும்.
pendrive_009
9. கடைசியாக ok செய்தவுடன் கனணியை restart செய்யவும்.
pendrive_010
இதன் இறுதியில் உங்கள் கணினியின் செயல்படும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Read More

30 ஜூன், 2014

போல்டர் ஷார்ட்கட் பாதிப்பிற்கான தீர்வு

Posted by Anto Navis

பென் ட்ரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க் ஆகியவற்றை நாம் தினசரி அலுவல் நிமித்தமாகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் பல கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் பயன் படுத்தி வருகிறோம். இவ்வாறான பயன்பாட்டில் நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்தும் நிலை உண்டாகி விடுவது இயல்புதான்.

பெரும்பாலும் நமது அதி முக்கியமான கோப்புகள் (புகைப்படங்கள், பல நாட்கள் செலவழித்து உருவாக்கிய ஆவணங்கள்)  அனைத்தையும் பென் ட்ரைவ்களில்தான் வைத்திருப்போம். மால்வேர் தாக்குதல்களுக்கு உள்ளான கணினிகளில் இவற்றை பயன் படுத்திய பிறகு, நமது பென் ட்ரைவை சோதித்துப் பார்த்தால், நாம் அதில் வைத்திருந்த ஃபோல்டர்கள் அனைத்தும் காணாமல்  போய், வெறும் 1 KB மட்டுமே அளவுள்ள  அவற்றின் ஷார்ட்கட்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கலாம்.
ஒரு சிலர், பென் ட்ரைவில் உள்ள அனைத்தும் போய்விட்டது என்று எண்ணி ஃபார்மெட் கூட செய்திருக்கிறார்கள். பல நாள் உழைப்பு வீணாகிவிட்டதே என்றெண்ணி தலையில் கைவைத்து அமருவதை விட, கொஞ்சம் சிந்தித்தால் போதும் இழந்ததாக கருதிய கோப்புறைகளை மீட்டெடுத்து விடலாம். 

முதலில் நாம் செய்ய வேண்டியது, நமது பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல்  ட்ரைவ் லெட்டரை அறிந்து கொண்டு (உதாரணமாக G: ), ஸ்டார்ட் மெனுவில் ரன் கட்டளைக்கு சென்று CMD என டைப் செய்து DOS prompt இற்கு செல்லுங்கள். அங்கு ட்ரைவ் லெட்டரை டைப் செய்து (G:) என்டர் கீயை அழுத்தி,  அந்த குறிப்பிட்ட ட்ரைவிற்கு செல்லுங்கள். அங்கு DIR/AD என டைப் செய்து என்டர் கீயை அழுத்த, நமது ட்ரைவில் உள்ள அனைத்து ஃபோல்டர்களும் (நாம் இழந்ததாக கருதிய) hidden வடிவில் மறைக்கப்பட்டிருப்பதை காணலாம். 

இவற்றை எப்படி மீட்டெடுக்கலாம்? 

DOS prompt -ல் இருந்து கொண்டு, Attrib -r -s -h /s /d G:*.* என்ற கட்டளையை கொடுங்கள். அவ்வளவுதான் உங்கள் கோப்புறைகள் மீட்கப்பட்டன.  பிறகு தேவையற்ற ஷார்ட்கட்கள், மற்றும் வைரஸ் என சந்தேகிக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் டெலிட் செய்து விடுங்கள். 

Read More

14 மே, 2014

பென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி?

Posted by Anto Navis

Remove Write Protection on USB drives
பென் டிரைவில் எதாவது கோப்புகளை ஏற்றும் போது சில நேரம் கீழ்க்கண்ட பிழைச்செய்தியைக் காட்டும்.

"Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk" 

என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்கு வைரஸ் பிரச்சினை உட்பட பல காரணங்கள் இருக்கின்றன. இதனை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.


எளிமையான வழி:

Start - Run செல்லவும். பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.




reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 0

பின்னர் உங்கள் கணிணியை ரீஸ்டார்ட் செய்து விட்டு மறுபடியும் பென் டிரைவை சொருகி சரிபார்க்கவும்.  இப்பொழுது நீங்கள் விரும்பியபடி வேலை செய்யலாம். சரி உங்களுடைய பென் டிரைவை Write Protected செய்து வைக்க வேண்டும் எனில் கீழே உள்ள நிரலை மேற்கண்டவாறு Run Box இல் கொடுத்து எண்டர் தட்டவும். 

reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 1
------------------------------------------------------------------------------------------------------------------------
* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavis713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.


Read More

21 மார்., 2014

பெண்டிரைவில் write protected பிழையை சரி செய்வது எப்படி?

Posted by Anto Navis 16 Comments


  • Open Start Menu >> Run, type regedit and press Enter. This will open the registry editor.
  • Navigate to the following path:

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies
  • Double click the key WriteProtect in the right pane and set the value to 0
  • In the Data Value Box, press OK
  • Exit Registry, restart your computer and then re-connect your USB pen drive to your computer.

------------------------------------------------------------------------------------------------------------------------
* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavis713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

Read More

16 மார்., 2014

பென்டிரைவ் வைத்து உள்ளிர்களா ?

Posted by Anto Navis 2 Comments

பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு REMOVABLE DEVICE ஆகும்.

இத்தகைய பென்டிரைவ்கள்(pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். 

அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். 

இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி?

உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

1.உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E)கொடுத்து MY COMPUTER செல்லவும்.

2.அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

3.தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக் செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத் தேரந்தெடுக்கவும்.

4.பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.

5.அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.

6.அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.

இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும்.

மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். 

இதனால் உங்கள் பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்…!
------------------------------------------------------------------------------------------------------------------------
* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavis713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.


Read More

4 மார்., 2014

Creating a Bootable USB Drive-within 5 minutes

Posted by Anto Navis
Easily TO learn How to create a bootable usb drive within 5 minutes.... Watch this video and Share it to all Ur Friends,and all Social Networks




------------------------------------------------------------------------------------------------------------------------
* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavi713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

Read More

1 மார்., 2014

கணினியில் USB DRIVE யின் செயல்பாட்டை முடக்கலாம்

Posted by Anto Navis
கணினியில் வைரஸ் நுழைவதற்கான நுழைவாயில் பெரும்பாலும் USB Drive கள் தான். ஒன்றிற்கு மேற்பட்டோர் கணினியை உபயோகிக்கும் போது அனைவரும் USB Drive களை பயன்படுத்துவது தவிர்க்க இயலாதது.இல்லத்திலோ, அலுவலகங்களிலோ , ப்ரொவ்சிங் சென்டெர் போன்ற இடங்களிலோ கணினி பற்றி அதிகம் அறியாதோர் தவறுதலாக வைரஸ் உள்ள USB Device மூலம் கணினிக்குள் வைரஸ் புகுத்தி விட வாய்ப்பு உண்டு.

நம்முடைய கணினியில் உள்ள விவரங்களை நாம் கணினியில் இல்லாத நேரம் பிறர் சில நிமிடங்களில் USB காப்பி செய்து எடுத்து விடும் அபாயமும் உண்டு. இது போன்ற தருணங்களில் கணினியில் உள்ள USB Drive களை முடக்கி (Disable) செய்து வைக்க வேண்டிய கட்டாயம் வரும்.

கணினியின் BIOS Settings சென்று USB Port Disable செய்யலாம். ஆனால் அது நாம் USB Mouse, USB Keyboard, USB Printer போன்றவற்றை உபயோகித்தால் அவற்றையும் முடக்கி விடும்.USB Storage Device களை மட்டும் முடக்க வேண்டும். 

இதனை இரண்டு வழிமுறைகளில் செய்யலாம்.

Start பட்டனை கிளிக் செய்து Run கிளிக் செய்யுங்கள். அதில் regedit என்று கொடுத்து எனத் தட்டுங்கள். Start --> Run --> regedit . ரெஜிஸ்டரி எடிட்டர் தோன்றும். 

அதில் HKEY_LOCAL_MACHINE --> SYSTEM --> CurrentControlSet --> Services --> UsbStor செல்லுங்கள். வலது புறம் வரும் ஆப்சன்களில் "Start" என்பதனை டபுள் கிளிக் செய்யுங்கள்.

தோன்றும் விண்டோவில் "Value Data" என்பதில்நீங்கள் USB Storage Drive களை Disable செய்ய விரும்பினால் "4" என்று கொடுக்கவும். USB Storage Drive களை Enable செய்ய விரும்பினால் "3" என்று கொடுக்கவும்.

ரெஜிஸ்டரி எடிட்டரை மூடி விட்டு கணினியை Reboot செய்யவும். உங்கள் தேர்வின்படி USB Storage Drive enable/disable ஆகும்.

இந்த முறை உங்களுக்கு கடினமானதாக தோன்றினால் ஒரு எளிய முறையை பார்ப்போம். கீழ்காணும் இரண்டு கோப்புகளையும் தரவிறக்கி கொள்ளுங்கள்.

USB Storage Drive களை Enable செய்ய - EnableUSBDrive.regUSB Storage Drive களை Disable செய்ய -DisableUSBDrive.regஉங்கள் தேவைக்கான கோப்பை ஓபன் செய்தால் USB Enable / Disable ஆகும்.

மேற்சொன்ன முறைகள் விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000, விண்டோஸ் 2003, விண்டோஸ் விஸ்டா , விண்டோஸ் 28, விண்டோஸ் 7 உள்ளிட்ட விண்டோஸ் இயங்குதளங்களில் வேலை செய்யும்
------------------------------------------------------------------------------------------------------------------------
* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavis713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

Read More

பிரபலமான இடுகைகள்