blogger tricks லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
blogger tricks லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

8 மார்., 2018

பிளாகில் ஈமெயில் subscription பெட்டியின் மேலே படங்களை இணைப்பது எப்படி?

Posted by Anto Navis


பிளாகில் ஈமெயில் subscription பெட்டியின் மேலே படங்களை இணைப்பது எப்படி என்பதை பார்ப்போம்.
இது மிகவும் சுலபமான வேலைதான்.  உங்களுடைய widget ஐ திறந்து ( CTRL+F )  கீகளை பயன்படுத்தி

பின்வரும் எழுத்துகளை தேடி "Enter your email address:" இவற்றை நீக்கிவிட்டு கீழே கொடுத்துள்ள 
கோடிங்கை காப்பி பேஸ்ட் செய்துக்கொள்ளுங்கள்.



<img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMnngtLgtoBY9nPZBBC1ZP3VpGaT3AhE2_pW9Zp_O5VfM7_7Ly5p7CKFWpBDNR-dkZPHjO1hM3mgt88Bpwl1Oq4xH4DB2H8qNpJEN9BkEYYVZDsR3pVhz9neJZ2gCGYQK82sx2aY7-Efs/s1600/Hand.gif" />



மேலே கோடிங்கில் கொடுத்துள்ள படத்தின் URL ஐ நீக்கிவிட்டு உங்களுக்குத் தேவையான படத்தின் URL ஐ சேர்த்துக் கொள்ளலாம்.  நன்றி ...
Read More

பிளாகரில் Older post, Newer Post, Home பட்டன் வைப்பது எப்படி?

Posted by Anto Navis

பிளாகை அழகுபடுத்த இன்னும் ஒரு சிறிய டிப்ஸ்.  newer post, older post, home என்ற எழுத்துகளுக்கு பதிலாக நாம் விரும்பும் படத்தை ( Button ) இணைத்துக் கொள்ளலாம்.  அதற்கான வழி இதோ.   முதலில் Dashboard>> Design >> Edit HTML சென்று Expand Widget 
Templates என்பதற்கு முன் உள்ள 
கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும்.  பிறகு 



Next Button
 இந்த கோடிங்கை கண்டுபிடித்து.

<data:newerPageTitle/>
கீழே கொடுத்துள்ள கோடிங்கை Replays செய்துவிடுங்கள்.


<img alt='Next' border='0' src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggpLgb8XOzqd23qAZ34EsF0y1zpWcaiCtAw-V3LO7Utb8GdrUpP8WXiAdTzmIH_Or48-xzeYdl-23llxXCErgncl89oU9HC7YDB1h37irzkXJO_5R9JTqLIM4rtxv3c_0nLZlZhDU5Wr4/?imgmax=800' title='Next'/>


மேலே கொடுத்துள்ள நீல கலர் கோடிங்கை நீக்கிவிட்டு  தேவையான படத்தின் URL ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். 



Previous Button
இந்த கோடிங்கை கண்டுபிடித்து.

<data:olderPageTitle/>
கீழே கொடுத்துள்ள கோடிங்கை Replays செய்துவிடுங்கள்.


<img alt='previous' border='0' src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRJ4ojLh1lF_cpdu7yolZAgy2voetfYMqZMYwJt1qCJdFoU7_W2_BC13Ly5r3FrXlNjdTm6cPj1Oe8jhdHEEWpAJC2OXg8kGNYo8uU8ELzg0jca6G4X7gqNGg5uL9kC3a-ePk8C14W3Qw/?imgmax=800' title='previous'/>


மேலே கொடுத்துள்ள நீல கலர் கோடிங்கை நீக்கிவிட்டு  தேவையான படத்தின் URL ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.


Home Button
இந்த கோடிங்கை கண்டுபிடித்து.

<data:homeMsg/>
கீழே கொடுத்துள்ள கோடிங்கை Replays செய்துவிடுங்கள்.


<img alt='home' border='0' src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_j16oE5P1HosWBzqvL4K-nCsQnhVsfwBp-9VnRXG2BJqmmg6u8gdkNsYfA1Qe-vv25Sd5CUZT6ygZQwgN1R0_yQsJyXGZWy_iPoBQ3VB2SUnSwe718jFJrXqeC5yKdIyGMtZ15Urxmpk/?imgmax=800' title='home'/>


மேலே கொடுத்துள்ள நீல கலர் கோடிங்கை நீக்கிவிட்டு  தேவையான படத்தின் URL ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

நன்றி....
Read More

19 ஜூன், 2015

ப்ளாக்கில் ஆடியோ ஃபைல்களை இணைக்க..

Posted by Anto Navis

சில தளங்களுக்கு சென்றால் பின்னணியில் இசை ஒலிப்பதை கேட்கலாம். அது போன்று நமது தளத்திலும்  ஆடியோ  ஃபைல்களை இணைப்பது எப்படி? என்று இந்த பதிவில் காண்போம். அவ்வாறு இணைப்பதற்கு Embed என்ற முறை பயன்படுத்தப்படுகிறது.


ஆடியோ ஃபைல்களை ஒலிக்க வைக்க:

*முதலில் உங்களுடைய ஆடியோ ஃபைலை, இலவசமாக ஃபைலை upload செய்ய அனுமதிக்கும் தளங்களில்  upload செய்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த ஆடியோவின் முகவரியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த முகவரி .mp3, .wav, அல்லது .midi என்று முடிய வேண்டும்.

*நமக்கு விருப்பமான பாடல்களை அல்லது ஒலி கோப்புகளை நமது தளத்தில் sidebar-ல் ஒலிக்க செய்ய கீழுள்ள Code-ஐ பயன்படுத்தவும்.

<embed flashvars="audioUrl=https://sites.google.com/site/guide4bloggers/bnfiles/01TitleTrack.mp3"height="27" quality="best" src="http://www.google.com/reader/ui/3523697345-audio-player.swf" type="application/x-shockwave-flash" width="400"></embed>
மேலுள்ள code-ல் உங்களுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்ய,

width - என்ற இடத்தில் உங்களுக்கு ஏற்றவாறு அகலத்தின் அளவை மாற்றலாம்.

height - என்ற இடத்தில் உங்களுக்கு ஏற்றவாறு உயரத்தின் அளவை மாற்றலாம்.

audioUrl - என்ற இடத்தில் உங்கள் ஆடியோ ஃபைலின் முகவரியை கொடுக்கவும்.

மேலே நான் கொடுத்துள்ள Code-ன் Output பின்வருமாறு இருக்கும்.



பதிவில் இணைக்க:

பதிவெழுதும் போது மேலுள்ள code-ஐ HTML mode-ல் வைத்து paste செய்து மீண்டும் Compose Mode-ற்கு மாறிக் கொள்ளலாம்.

பின்னணியில் ஒலிக்கச் செய்ய:

பின்னணியில்  பாடல்கள் போன்ற ஆடியோ ஃபைல்களை ஒலிக்கச் செய்ய 


<head>
என்ற  Code-ஐ தேடி அதற்கு பின்னால், பின்வரும் Code-ஐ paste செய்யவும்.


<embed autostart="true" height="0" loop="true" src="https://sites.google.com/site/guide4bloggers/bnfiles/01TitleTrack.mp3" width="0"/>

* loop - என்ற இடத்தில், பாடல்கள் திரும்ப, திரும்ப ஒலிக்கச் செய்ய "true" என்றும், ஒருமுறை மட்டும் ஒலிக்கச் செய்ய "false" என்றும் கொடுக்கவும்.

* src - என்ற இடத்தில் உங்கள் ஆடியோ ஃபைலின் முகவரியை கொடுக்கவும்.


 பின்னணியில் இசை ஒலிப்பதால் வாசகர்களுக்கு சலிப்பு ஏற்படலாம்.
Read More

ப்ளாக்கரில் வீடியோவை இணைப்பது எப்படி?

Posted by Anto Navis
தற்போது வீடியோக்களை பதிவில் இணைக்கும் முறையை எளிமைப்படுத்தியுள்ளது ப்ளாக்கர் தளம்.

முதலில் உங்கள் ப்ளாக்கர் தளத்தின் புதிய பதிவிடும் (New Post) பக்கத்திற்கு செல்லுங்கள்.

அங்கு Insert a Video என்ற பட்டன் இருக்கும்(படத்தை பார்க்கவும்). அதனை க்ளிக் செய்யுங்கள்.

(படங்களை பெரிதாக காண, படங்கள் மீது க்ளிக் செய்யவும்.)



க்ளிக் செய்த பிறகு வரும் Window-ல் மூன்று Options வரும்.

1. Upload

2. From YouTube

3. My YouTube Videos


1. Upload

உங்கள் கணினியில் உள்ள வீடியோக்களை இணைக்க இடது புறம் உள்ள Upload என்பதை தேர்வு செய்து, Browse என்பதை க்ளிக் செய்து, உங்கள் வீடியோவை தேர்வு செய்யுங்கள். பிறகு கீழே உள்ள Upload பட்டனை க்ளிக் செய்யுங்கள். பிறகு உங்கள் வீடியோ Upload ஆகத் தொடங்கும். உங்கள் வீடியோவின் கொள்ளளவை(Memory)  பொறுத்து பதிவேற்றம் ஆக நேரம் ஆகும்.

2. From YouTube

யூட்யூப் வீடியோக்களை பதிவில் இணைக்க இரண்டாவதாக இருக்கும் From YouTube என்பதை தேர்வு செய்துக் கொள்ளுங்கள். பிறகு வரும் தேடுபொறியில் குறிச்சொற்களை இட்டு Search Videos என்பதை க்ளிக் செய்யுங்கள். நீங்கள் இட்ட குறிச்சொற்கள் தொடர்பான பல்வேறு Youtube வீடியோக்களை அது காட்டும். உங்களுக்கு விருப்பமான வீடியோவை க்ளிக் செய்து, கீழே உள்ள Select பட்டனை க்ளிக் செய்யுங்கள். பிறகு அந்த வீடியோ உங்கள் பதிவில் இணைந்துவிடும்.


 3. My YouTube Videos

மூன்றாவதாக உள்ள My YouTube Videos என்பதை க்ளிக் செய்தால் நீங்கள் உங்கள் யூட்யூப் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ள வீடியோக்களின் தொகுப்பை காட்டும். உங்களுக்கு தேவையான வீடியோவை தேர்வு செய்து, கீழே உள்ள Select பட்டனை க்ளிக் செய்யுங்கள். பிறகு அந்த வீடியோ உங்கள் பதிவில் இணைந்துவிடும்.

Read More

ப்ளாக் தொடங்குவது எப்படி? part - 3

Posted by Anto Navis


கடந்த  பகுதியில் புதிய ப்ளாக் உருவாக்குவது பற்றி பார்த்தோம் அல்லவா? தற்போது புதிய பதிவு எழுதுவது பற்றியும், அதில் உள்ள வசதிகள் பற்றியும் விரிவாக பார்ப்போம்.

[படங்களை பெரிதாகக் காண படத்தின் மேல் சொடுக்கவும்.]

ப்ளாக்கர் Dashboard பக்கத்தில் நீங்கள் உருவாக்கிய ப்ளாக் பின்வருமாறு காட்சி அளிக்கும்.



அதில்  Start Blogging என்பதனை க்ளிக் செய்தால் புதிய பதிவு எழுதுவதற்கான பக்கம் பின்வருமாறு வரும்.


அந்த பக்கத்தில் மேலே உள்ள சிறிய பெட்டியில் பதிவிற்கான தலைப்பு கொடுக்க வேண்டும்.

அதற்கு கீழே உள்ள பெரிய பெட்டியில் நீங்கள் எழுத நினைக்கும் பதிவை எழுத வேண்டும்.

பதிவின் தலைப்புக்கு பக்கத்தில்    என்று நான்கு பட்டன்கள் இருக்கும்.

Publish -  நீங்கள் பதிவை எழுதி முடித்தப் பின் அதனை பிரசுரிப்பதற்கு இதனை சொடுக்கவும்.

Save - நீங்கள் பதிவை எழுதி, பிறகு பிரசுரிக்கலாம் என்று நினைத்தாலோ, அல்லது பாதி பதிவை எழுதி மீதியை பிறகு எழுதலாம் என நினைத்தாலோ Save என்பதை சொடுக்கவும். அவ்வாறு சேமித்த பதிவுகள் Drafts எனப்படும்.

கவனிக்க:  ப்ளாக்கரில் பதிவு எழுதிக் கொண்டிருக்கும் போது தானியங்கியாக நாம் எழுத எழுத சேமித்துக் கொள்ளும்.

Preview -  நாம் எழுதும் பதிவை பிரசுரிப்பதற்கு முன்னால் அது பிரசுரித்தப் பின் எப்படி வரும் என்பதை முன்னோட்டம் பார்க்க இதனை சொடுக்கவும். இதன் மூலம் நம் பதிவில் எழுத்துப் பிழைகளோ அல்லது வேறு பிழைகளோ இருந்தால் சரி செய்துக் கொள்ளலாம்.

Close - பதிவெழுதும் பகுதியில் இருந்து வெளியேற இதனை சொடுக்கவும்.

பதிவின் தலைப்புக்கு கீழ் பின்வருமாறு இருக்கும்.


இவைகளைப் பற்றி ஒவ்வொன்றாகப்  பார்ப்போம்.


   - Compose என்பது நாம் எழுதும் பதிவு, இணைத்திருக்கும் படங்கள் எல்லாம்  ப்ளாக்கில் எப்படி இருக்குமோ (கிட்டத்தட்ட) அதே போல காட்சி அளிக்கும். HTML என்பது நாம் எழுதும் பதிவு, இணைத்திருக்கும் படங்கள் ஆகியவற்றை HTML நிரல்களாக காட்டும். எப்போதும் Compose Mode-ல் வைத்து எழுதுங்கள்.  உங்களுக்கு HTML தெரிந்திருந்தால் நிரலில் மாற்றம் செய்யலாம்.

 - இது Undo/Redo ஆகும். பதிவெழுதும் போது மாற்றம் செய்தால் முந்தைய மாற்றத்திற்கு செல்லவும், பிந்தைய மாற்றத்திற்கு செல்லவும் பயன்படுகிறது.

- இவைகள் எழுத்துக்களை அழகுப்படுத்த உதவுகிறது. நாம் மாற்ற வேண்டிய வார்த்தைகளை தேர்வு செய்து இதனை சொடுக்க வேண்டும்.

  - இவைகள் மற்ற இணையப்பக்கங்களுக்கு இணைப்பு (Links) கொடுக்க, படங்கள், வீடியோக்கள் இணைக்க, முகப்பு பக்கத்தில் சிலவற்றை மட்டும் தெரியவைக்க (Jump Break) பயன்படுகிறது.

பதிவில் படத்தை இணைத்தப்பின் அதன் அளவை மாற்ற படத்தின் மேல் க்ளிக் செய்யுங்கள்.


அவ்வாறு க்ளிக் செய்தபின் அதில் Small, medium, Large, X-Large, Original Size இவற்றில் ஒன்றை தேர்வு செய்து அளவை மாற்றலாம். மேலும் Left, Center, Right இவற்றில் ஒன்றை தேர்வு செய்து இடது, நடு, வலது புறத்தில் படத்தை தெரிய வைக்கலாம்.

 - இவைகள் (இடது, வலம், நடு என்று) எழுத்துக்களை அல்லது படங்களை  Align செய்ய, பட்டியலிட, மேற்கோள் காட்ட, எழுத்துக்களில் நாம் செய்த மாற்றங்களை நீக்க, எழுத்துப்பிழைகளை பார்க்க பயன்படுகின்றன.


 - இவை தமிழில் உள்பட பல மொழிகளில் தட்டச்சு செய்யவும் (Amma என்று டைப் செய்தால் அம்மா என்று வரும்), பதிவை வலதுப் பக்கத்திலிருந்து இடது பக்கமாகவோ, இடத்துப் பக்கத்திலிருந்து வலது பக்கமாகவோ தெரியவைக்கவும் பயன்படுகிறது.



இனி அதே பக்கத்தில் வலதுபுறம் உள்ள Post Settings பற்றி பார்ப்போம்.





Labels - நாம் எழுதும் பதிவிற்கு தொடர்புடைய குறிச்சொற்களை இங்கு எழுத வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் Webdesign பற்றி கவிதை எழுதினால் "Technology", "Webdesign", "Web development" என்பது போன்று குறிச்சொற்களை கொடுக்கலாம்.

Schedule - நீங்கள் எழுதும் பதிவை எப்பொழுது பிரசுரிக்க வேண்டும் என்பதை இங்கு தேர்வு செய்யலாம். Default-ஆக இது Automatic என்று இருக்கும். நீங்கள் எப்பொழுது Publish பட்டனை க்ளிக் செய்கிறீர்களோ, அப்பொழுது பிரசுரமாகும்.  இல்லையென்றால் Set Date and Time என்பதை க்ளிக் செய்து எப்பொழுது பிரசுரமாக வேண்டும் என்பதை தேர்வு செய்யலாம். உதாரணத்திற்கு பதிவை மறுநாள் காலை பிரசுரமாக தேர்வு செய்தீர்கள் என்றால் மறுநாள் காலை குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் ஆன்லைனில் இல்லையென்றாலும் தானாக பிரசுரமாகும். மேலும் ஏற்கனவே பதியப்பட்ட பதிவுகளை இன்று பதிந்தது போலவும் மாற்றலாம்.


Location - இது உங்கள் இருப்பிடத்தைக் காட்டுவதற்காக பயன்படுகிறது. இதனை தவிர்ப்பது நலம்.


Options - இந்த பகுதியில் கீழுள்ள வசதிகள் உள்ளன.

Reader Comments - நீங்கள் எழுதும் அந்த பதிவில் வாசகர்கள் பின்னூட்டம் (Comment) இடலாமா? வேண்டாமா? என்பதை தேர்வு செய்யலாம். (இது மற்ற பதிவுகளை பாதிக்காது. எழுதும் அந்த பதிவிற்கு மட்டுமானது)

Compose Mode - Compose Mode-ல் வைத்து பதிவு எழுதும் போது HTML Code இணைத்தால், அது Code-ஆகவே தெரிவதற்கு "Show HTML literally" என்பதனையும், Code-ற்கு பதிலாக அதன் வெளியீடு தெரிவதற்கு "Interpret typed HTML" என்பதனையும் தேர்வு செய்யவும்.

Line Breaks - இது தேவையில்லை விட்டுவிடுங்கள். ( இரண்டும் முயற்சித்தேன். ஒன்றாகத் தான் உள்ளது)

பதிவு எழுதியப் பின் Publish என்பதை கொடுக்க வேண்டியது தான். கொடுத்தபின் அனைத்து பதிவுகளும் இருக்கும் Posts பக்கத்திற்கு வரும். அங்கு மேலே உள்ள View Blog என்பதை க்ளிக் செய்து உங்கள் ப்ளாக்கை பார்க்கலாம்.

Read More

ப்ளாக் தொடங்குவது எப்படி? part- 2

Posted by Anto Navis
கடந்த பகுதியில் ப்ளாக் பற்றிய சிறிய அறிமுகத்தைப் பார்த்தோம். தற்போது புதிய ப்ளாக் ஒன்றை உருவாக்குவோம். அதற்கு முன் நமது ப்ளாக்கின் பெயர் எப்படி இருக்க வேண்டும்? என்று பார்ப்போம்.


ப்ளாக்கிற்கு பெயர் வைப்பது எப்படி?


ப்ளாக்கிற்கு பெயர் வைக்கும் போது முடிந்தவரை சிறியதாகவும், நினைவில் நிற்கும்படியும் வையுங்கள். மேலும் நீங்கள் எதைப் பற்றி எழுதுகிறீர்களோ? அது தொடர்பான பெயராக இருக்கட்டும். தமிழ் ப்ளாக்கிற்கு பெயர் வைக்கும் போது அந்த பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது  எழுத்துக்களில் குழப்பம் வராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு "தினச்செய்தி" என்று பெயர் வைத்தால் அதனை ஆங்கிலத்தில்"thinachcheithi", "dinaseithi", "dhinachcheithi", "thinaseithi" இப்படி பல குழப்பங்கள் வாசகர்களுக்கு வரலாம். அதனால் இதனை தவிர்ப்பது நல்லது. பல வாசகர்கள் உங்கள் தளத்தை புக்மார்க் செய்திருக்கலாம். ஆனால் எல்லா நேரங்களிலும் அவர்கள் புக்மார்க் மூலம் வருவதில்லை. வேறொரு கணினிகளை பயன்படுத்தினால் நேரடியாக உங்கள் தள முகவரியைக் கொடுத்து வருவார்கள். அது போன்ற சமயங்களில் குழப்பம் ஏற்படும்.

உங்கள் ப்ளாக் முகவரியுடன் blogspot என்ற sub-domain-ம் சேர்ந்து வரும் என்று சொன்னேன் அல்லவா? அதற்கு பதிலாக .com, .net, .org போன்ற Custom domain-ல் மாறும் எண்ணம் இருந்தால் முதலில் அந்த பெயர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று பாருங்கள் (அவ்வாறு பார்க்க http://www.zolahoast.com/என்ற முகவரிக்கு சென்று பார்க்கவும்). ஏனெனில் நீங்கள் ஒரு பெயரில் ப்ளாக்கை நடத்தி வந்தது Custom Domain-கு மாறும் போது வேறொரு பெயரை பயன்படுத்தினால் சில வாசகர்களை இழக்க நேரிடும்.

ஆங்கிலத் தளங்களை தொடங்குவதாக இருந்தால் உங்கள் ப்ளாக் பெயரில் Keywords எனப்படும் குறிச்சொற்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு உங்கள் ப்ளாக் தொழில்நுட்பம் பற்றியது என்றால் ப்ளாக்கின் பெயரில் "tech", "technology", "techno", "web" போன்ற வார்த்தைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலே  சொன்னது சின்ன விஷயம் தான். மேலே சொன்னவைகள் போன்று பெயர் வைக்கவில்லை என்றாலும் உங்கள் ப்ளாக் பிரபலமானால் உங்கள் பெயரும் பிரபலமாகும். "ஆப்பிள்", "கூகிள்", "பேஸ்புக்" போன்றவைகள் முதலில் வந்த போது யாரும் இவ்வளவு பிரபலமாகும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதனால் பெயர் வைப்பது என்பது சின்ன விஷயம் தான். 

சரி, இனி ப்ளாக் ஒன்றை தொடங்கிவிடுவோம்.

புதிய  ப்ளாக் உருவாக்குவது எப்படி?

1. முதலில் www.blogger.com என்ற முகவரிக்குச் செல்லுங்கள்.


2. உங்களுக்கு ஜிமெயில் அல்லது வேறொரு கூகிள் கணக்கு இருந்தால் அதன் மூலம் உள்நுழையுங்கள். இல்லையென்றால் புதிதாக ஜிமெயில் ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

3. பிறகு உங்கள் Dashboard தோற்றம் பின்வருமாறு இருக்கும்.


Dashboard பக்கத்தில் உள்ளவைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் பிறகு பார்க்கலாம்.

4. புதிய ப்ளாக் ஒன்றை உருவாக்க New Blog என்னும் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.




அதில்,
Title என்ற இடத்தில் ப்ளாக் பெயரை (தமிழ் ப்ளாக் என்றால் தமிழில்) கொடுங்கள்.

Address என்ற இடத்தில் உங்கள் ப்ளாக்கிற்கான முகவரியையும் கொடுங்கள். நீங்கள் கொடுக்கும் முகவரி ஏற்கனவே இருந்தால் ஏற்றுக் கொள்ளாது. வேறொன்றை முயற்சிக்கவும்.

கவனிக்க: முகவரியில் என்ன கொடுக்கிறீர்களோ? அதனையே ப்ளாக் பெயராகக் கொடுங்கள். இரண்டும் வேறுவேறாக இருந்தால்  அது வாசகர்களை குழப்பும்.

Template என்ற இடத்தில் உங்களுக்கு பிடித்தமான டெம்ப்ளேட்டை (உங்கள் ப்ளாக்கின் தோற்றம்) தேர்வு செய்யுங்கள். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இதனை மாற்றிக் கொள்ளலாம். பிறகு Create Blog என்பதை க்ளிக் செய்யுங்கள்.


அவ்வளவு  தான்! உங்களுக்கான புதிய ப்ளாக் உருவாகிவிட்டது. அதனை பார்க்க View Blog என்பதை க்ளிக் செய்யுங்கள்.

சோதனைக்காக நான் உருவாக்கி இருக்கும் ப்ளாக்,

Read More

ப்ளாக் தொடங்குவது எப்படி? Part 1

Posted by Anto Navis

ப்ளாக்கர் நண்பன் தளத்தில் இதுவரை ப்ளாக் தொடங்கிய பிறகு செய்ய வேண்டியவைகளைப் பற்றித் தான் எழுதி வந்தேன். இணையத்தில் புதிதாக வரும் நண்பர்களுக்கு பயன்படும் வகையில் ப்ளாக் தொடங்குவது பற்றி முடிந்தவரை முழுமையாக எழுதலாம் என எண்ணியுள்ளேன். இது முற்றிலும் புதியவர்களுக்கான பதிவு என்பதால் அதிகம் பேர் அறிந்திருக்கும் தகவல்களாகத் தான் இருக்கும்.

ப்ளாக் என்றால் என்ன?

Weblog என்பதன் சுருக்கமே Blog ஆகும். தமிழில் வலைப்பூ, வலைப்பதிவு என்று அழைக்கப்படும். ப்ளாக் என்பது  ஒருவகையான இணையத்தளம், அல்லது இணையத்தளத்தில் ஒரு பகுதியாகும். செய்திகளை பகிரும் முறையில் இவை இரண்டும் வேறுபடுகின்றன.

  • இணையத்தளங்களில் செய்திகள் எப்பொழுதாவது தான் புதுப்பிக்கப்படும். ஆனால் ப்ளாக்கில் செய்திகள் அடிக்கடி புதுப்பிக்கப்படும். (உங்கள் ப்ளாக் புதுப்பிக்கப்படாமல் இருந்தால் அது இணையத்தளம் ஆகிவிடாது!!! )
  •  ப்ளாக்கின் சிறப்பம்சங்களில் ஒன்று வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிடும் வசதி. (பெரும்பாலான) இணையத்தளங்களில் அந்த வசதி இல்லை. நம் கருத்துக்களை சொல்ல வேண்டுமானால் மின்னஞ்சல், தொலைபேசி ஆகியவற்றைத் தான் பயன்படுத்த வேண்டும்.
  •  இணையத்தளம் தொடங்குவதற்கு PHP, MySQL, Python போன்ற கணினி மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் ப்ளாக் தொடங்குவதற்கு கணினி அடிப்படைகள் தெரிந்தாலே போதும்.

ப்ளாக் பற்றி ப்ளாக்கர் தளம் பின்வருமாறு கூறுகிறது.

A blog is a personal diary. A daily pulpit. A collaborative space. A political soapbox. A breaking-news outlet. A collection of links. Your own private thoughts. Memos to the world.

Your blog is whatever you want it to be. There are millions of them, in all shapes and sizes, and there are no real rules.

In simple terms, a blog is a website, where you write stuff on an ongoing basis. New stuff shows up at the top, so your visitors can read what's new. Then they comment on it or link to it or email you. Or not.
ஏன் ப்ளாக் தொடங்க வேண்டும்?

உண்மையை சொன்னால் இதற்கு சரியான வரைமுறைகள் எதுவும் இல்லை. எதற்கு வேண்டுமானாலும் ப்ளாக் தொடங்கலாம். உங்கள் கருத்துக்களையோ, அனுபவங்களையோ, உங்களுக்கு தெரிந்த ஒன்றைப் பற்றியோ, நீங்கள் ரசித்தவைகளைப் பற்றியோ மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்காக ப்ளாக் தொடங்கலாம். இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்காகவும் கூட ப்ளாக் தொடங்கலாம்.  அது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது.

குறிப்பு: பணம் சம்பாதிப்பதற்காக ப்ளாக் தொடங்க நினைத்தால் உங்கள் ப்ளாக்கை ஆங்கிலத்தில் தொடங்குங்கள். ஆங்கிலத் தளங்களைப் பிரபலப்படுத்துவது பற்றியும் இத்தொடரில் எனக்குத் தெரிந்ததைப் பகிர்கிறேன்.

எப்படி தொடங்குவது?

இலவசமாக ப்ளாக் தொடங்குவதற்கு பல இணையத்தளங்கள் உள்ளன. அவற்றில் முன்னணியில் இருக்கும் இரண்டு, ப்ளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ்ஆகியவை. நாம் இத்தொடரில் பார்க்கவிருப்பது ப்ளாக்கர் தளம் பற்றி தான். ஏனெனில் இலவச வேர்ட்பிரஸ் தளத்தைக் கொண்டு நாம் சம்பாதிக்க முடியாது. மேலும் அதில் உருவாக்கப்படும் தளத்தின் வடிவமைப்பில் நமக்கு விரும்பிய மாற்றங்களை செய்ய முடியாது. ஆனால் அதற்கென்று சில சிறப்பம்சங்கள் உள்ளது. அது நமக்கு தேவையில்லை.

ப்ளாக்கர்:

ப்ளாக்கர் (Blogger) தளம் கூகிள் நிறுவனத்தின் தளமாகும். உங்களுக்கு ஜிமெயில், யூட்யூப் போன்ற கூகிள் கணக்கு இருந்தால் அதன் மூலம் ப்ளாக்கர் தளத்தைப் பயன்படுத்தலாம். அல்லது புதிதாக கூகிள் கணக்கு ஒன்றை தொடங்கிப் பயன்படுத்தலாம். நீங்கள் தொடங்கும்  ப்ளாக்கின் முகவரியில் நீங்கள் கொடுத்தப் பெயருடன் .blogspot என்றும் சேர்ந்து இருக்கும். இதற்கு Subdomainஎன்று பெயர். உதாரணத்திற்கு நீங்கள் blogname என்று கொடுத்திருந்தால் உங்கள் முகவரி blogname.blogspot.com என்று இருக்கும். பெரிதாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் பணம் கட்டி உங்களுக்கு பிடித்த பெயரை முகவரியாக வைக்கலாம். அதை பற்றி பிறகு பார்ப்போம்.

தயாராகிவிட்டீர்களா?

ப்ளாக் தொடங்க தயாராகிவிட்டீர்களா?ஆம் என்றால் உங்கள் ப்ளாக்கிற்கு பெயர் வைக்க பல்வேறு தலைப்புகளை முடிவு செய்து வையுங்கள். ஏனெனில் நீங்கள் நினைக்கும் பெயரை ஏற்கனவே யாராவது வைத்திருக்கக்கூடும். நீங்கள் எதைப்பற்றி எழுதப் போகிறீர்களோ அது தொடர்பான வார்த்தைகளாக அந்த பெயர் இருக்கட்டும்.

இறைவன் நாடினால், அடுத்த பகுதியில் புதிய ப்ளாக் ஒன்றை தொடங்கிவிடுவோம். அதுவரை காத்திருக்க விருப்பமில்லை என்றால்www.blogger.com என்ற முகவரிக்கு சென்று முயற்சித்துப் பாருங்கள். மிகவும் எளிதாக ப்ளாக் உருவாக்கிவிடலாம்.
Read More

பிளாக்கரில் Related Post கேட்ஜெட் இணைப்பது எப்படி?

Posted by Anto Navis

இதைப்பற்றி ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.  ஆனால் தெரியாதவர்களுக்காக மட்டும் இதை எழுதுகிறேன்.  பதிவர்கள் கண்டிப்பாக உபயோகப்படுத்த வேண்டியது Related Post Gadget.  ஏன் என்றால் நம் வலை பதிவிற்கு பதிவை படிக்க வருபவர்கள், அவர்கள் தேடிவந்த
பதிவு சம்பந்தமான பதிவுகளை தேடி படிப்பதிலேயே அதிக 
ஆர்வம் காட்டுவார்கள்.  

அதனால் நாம் அவர்கள் படிக்கும் பதிவின் கீழேயே அதற்க்கு சம்பந்தமான பதிவுகளை பட்டியலிட இந்த Related Post Gadget உதவுகிறது. இதனால் பதிவை படிக்க வருபவர்கள் பதிவுகளை தேடாமல் மிக சுலபமாக படிக்க வசதியாய் இருக்கும். இதனால் வாசகர்கள் வரத்து அதிகரிக்கும்.


Related Post Gadget 'ஐ சுலபமாக இணைக்கலாம் அதற்க்கான வழிமுறைகளை கீழே கொடுத்துள்ளேன்.

      1. முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

      2. பிறகு  Dashboard ==>  Design ==>  Edit HTML ==> Expand Widget Templates என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

      3. பிறகு ( CTRL+F ) அழுத்தி <data:post.body/> இந்த கோடிங்கை கண்டுபிடியுங்கள்.

      4. கண்டுபிடித்த கோடிங்கின் கீழே.  இங்கே கீழே கொடுத்துள்ள கோடிங்கை பேஸ்ட் செய்யுங்கள்.


<!--related post started-->
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<div class='similiar'>
<div class='widget-content'>
<h2>Related post</h2>
<div id='data2007'/><br/><br/>
<script type='text/javascript'>
var homeUrl3 = &quot;<data:blog.homepageUrl/>&quot;;

var maxNumberOfPostsPerLabel = 5;
var maxNumberOfLabels = 3;
maxNumberOfPostsPerLabel = 5;
maxNumberOfLabels = 3;

function listEntries10(json) {
var ul = document.createElement(&#39;ul&#39;);
var maxPosts = (json.feed.entry.length &lt;= maxNumberOfPostsPerLabel) ?
json.feed.entry.length : maxNumberOfPostsPerLabel;
for (var i = 0; i &lt; maxPosts; i++) {
var entry = json.feed.entry[i];
var alturl;
for (var k = 0; k &lt; entry.link.length; k++) {
if (entry.link[k].rel == &#39;alternate&#39;) {
alturl = entry.link[k].href;
break;
}
}
var li = document.createElement(&#39;li&#39;);
var a = document.createElement(&#39;a&#39;);
a.href = alturl;
if(a.href!=location.href) {
var txt = document.createTextNode(entry.title.$t);
a.appendChild(txt);
li.appendChild(a);
ul.appendChild(li);
}
}
<!--Bloggertrix.com-->
for (var l = 0; l &lt; json.feed.link.length; l++) {
if (json.feed.link[l].rel == &#39;alternate&#39;) {
var raw = json.feed.link[l].href;
var label = raw.substr(homeUrl3.length+13);
var k;
for (k=0; k&lt;20; k++) label = label.replace(&quot;%20&quot;, &quot; &quot;);
var txt = document.createTextNode(label);
var h = document.createElement(&#39;b&#39;);
h.appendChild(txt);
var div1 = document.createElement(&#39;div&#39;);
div1.appendChild(h);
div1.appendChild(ul);
document.getElementById(&#39;data2007&#39;).appendChild(div1);
}
}
}
function search10(query, label) {
var script = document.createElement(&#39;script&#39;);
script.setAttribute(&#39;src&#39;, query + &#39;feeds/posts/default/-/&#39;
+ label +
&#39;?alt=json-in-script&amp;callback=listEntries10&#39;);
script.setAttribute(&#39;type&#39;, &#39;text/javascript&#39;);
document.documentElement.firstChild.appendChild(script);
}
var labelArray = new Array();
var numLabel = 0;
<b:loop values='data:posts' var='post'>
<b:loop values='data:post.labels' var='label'>
textLabel = &quot;<data:label.name/>&quot;;
var test = 0;
for (var i = 0; i &lt; labelArray.length; i++)
if (labelArray[i] == textLabel) test = 1;
if (test == 0) {
labelArray.push(textLabel);
var maxLabels = (labelArray.length &lt;= maxNumberOfLabels) ?
labelArray.length : maxNumberOfLabels;
if (numLabel &lt; maxLabels) {
search10(homeUrl3, textLabel);
numLabel++;
}
}
</b:loop>
</b:loop>
</script>
</div>
</div>
</b:if>

<!--related post end-->


இப்போது Save Template என்பதை தேர்வு செய்து வெளியேறுங்கள்.



var maxNumberOfPostsPerLabel = 5;

maxNumberOfPostsPerLabel = 5; 

உங்களுக்கு பதிவின் கீழ் எத்தனை பதிவுகள் தேவையோ அதர்கேற்றர்ப்போல் எண்ணிக்கையை இங்கே மாற்றிக் கொள்ளலாம்.


இந்த Related Post Gadget ஐ வைத்து உங்கள் வலைப்பதிவை மேலும் அழகாக்கிக் கொள்ளுங்கள்.  
நன்றி... மீண்டும் சந்திப்போம்..................
Read More

பிரபலமான இடுகைகள்