computer tricks லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
computer tricks லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 ஆக., 2015

உங்கள் பேஷ்புக்கில் ஆபாச படமா? வாங்க சரி செஞ்சிடலாம்!

Posted by Anto Navis

நேற்று முதல் பலருடைய முகநூல் கணக்குகள்ஹாக் செய்யப்பட்டு வருகிறது.ஹாக் செய்பவர்கள் உங்கள்டைம்லைனில் ஆபாசவீடியோக்களை பதிவிட்டு உங்கள்நட்பு வட்டத்தில் உள்ள அனைவருக்கும் டாக்செய்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்லநூற்றுக்கணக்கான விடியோக்கள்டைம்லைனில் பதிவாகிறது.இதை எதோ ஹாக் ப்ரோக்ராம்கொண்டு நடத்துகிறார்கள். (இந்த ஹாக்செய்பவர்கள் லிங்க் கொடுக்கும் வெப்சைட்புரியாத வெளிநாட்டு மொழியில் உள்ளது.)இதனை ஓரளவேனும் தவிர்க்க நீங்கள்செய்யவேண்டியது என்ன..!


# முதலில் உங்கள் முகநூல் கணக்கை BACKUPசெய்துகொள்ளுங்கள்.
Settings -> General -> க்கு கீழே உள்ள லிங்க் Download
a copy of your Facebook data. மூலம் BACKUP
செய்துகொள்ளுங்கள்.



# Settings -> Security Settings -> Login Alerts -> Get an alert
when anyone logs into your account from a new device or
browser. -> அனைத்து Notificationsம்
வருவது போல செட்டிங்செய்து கொள்ளுங்கள்.



# இது மிகவும் முக்கியம். ஒருவேளை உங்கள்கணக்கு ஹாக் செயப்பட்டால் இந்த நண்பர்கள்மூலம் திரும்ப பெறலாம். Settings -> SecuritySettings -> Trusted Contacts -> இதில் ஐந்து நண்பர்கள்வரைக்கும் தேர்வு செய்ய முடியும்.உங்களுக்கு நெருக்கமான, கம்ப்யூட்டர்சற்று நன்கு தெரிந்தஐந்து நண்பர்களை தேர்வு செய்யுங்கள்.

Settings -> Timeline and Tagging Settings -
> who can add things to my timeline? -> Review postsfriends tag you in before they appear on your timeline? ->
ENABLED.



# குறிப்பாக அறிமுகம் இல்லாத மொழியில்வரும்வெளிநாட்டு நட்பு அழைப்புகளை ஏற்கவேண்டாம்.


NEW UPDATE:

ஹாக் செய்யப்பட முகநூல் நண்பர்களிடம் நான்பேசிய வரைக்கும், அவர்களுடையகம்ப்யூட்டரில் இருந்து அவர்களால் முகநூலில்இருந்து Log-out செய்யவோ, அந்தபதிவுகளை நீக்கவோ, அல்லது சில
மாற்றங்களை செய்யவோ அனுமதிக்கவில்லை.ஆனால், வேறொரு கம்ப்யூட்டரில்இருந்து அனைத்து செட்டிங்ஸ்ம் மாற்றமுடிகிறது. எனவே ஹாக்கர் உங்கள் BrowserCookies மூலமே உங்கள் கணக்கை ஹாக்செய்வதாக நினைக்கிறேன். முடிந்தஅளவு Browser Settingsல் Remember passwordஎடுத்து விடவும். மேலும்,ஒவ்வொரு முறையும்
ப்ரௌசெரை விட்டு வெளியேறும்போது ClearHistory கொடுத்து Browser Cookies உட்படஅழித்துவிடவும். சில ப்ரௌசெர்களில்ஒவ்வொரு முறையும் நாம் வெளியேறும்போதுதானாகவேHistoryCleaningசெயும்படி இருக்கிறது. முடிந்தஅளவு அதையும் பயன்படுத்தலாம்..

Read More

19 ஜூன், 2015

லாக் (LOCK ) செய்யப்பட்ட DONGLEகளை அன்லாக்(UNLOCK) செய்யாமல் வேறு SIMகளை பாவிப்பது எப்படி?

Posted by Anto Navis 2 Comments

ஒரு தொலைபேசி சேவை வழங்குனரின் Dongle ஒன்றை வாங்கும் போது அதில் உள்ள பிரதான சிக்கல்களில் ஒன்று அவற்றில் வேறு நெட்வேர்க் சிம்பாவிப்பது முடியாத காரியம். அதற்கு அதனை அன்லாக் செய்ய வேண்டும்.ஆனால் அப்படி செய்யாமல் வேறு நெட்வேர்க் சிம் பாவித்து இணைய இணைப்பை மேற்கொள்ள ஒரு வழி இருக்கிறது...

இதற்கு தேவையான ஒரு மென்பொருள் அனைவரும் அறிந்த Nokia PC Suite ஆகும். இதை வைத்து என்ன செய்வது என்று யோசனை வருகிறதா? கீழே கூறப்பட்ட வழிகளை பின்பற்றவும்.


1.உங்கள் Dongle கணணியில் இணைக்கவும்

2.உங்கள் Dongle க்கான மென்பொருள் தானகவே செயற்பட தொடங்கி Invalid SIM என்ற ஒரு பிழை செய்தி வரும். அதனை பொருட்படுத்தாது அந்த மென்பொருளை மூடவும்.

3.இப்போது Nokia PC Suite மென்பொருளை திறக்கவும். அதில் சென்று File > Connect To Internet என்பதை தெரிவு செய்யவும்

4.இப்போது Settings சென்று உங்கள் புதிய இணைய சேவை வழங்குனருக்கான Configuration செய்யவும்.

5. APN (access Point Name) என்பதில் உங்கள் சேவை வழங்குனரின் APN கொடுக்கவும். தெரியவில்லை என்றால் Google உதவியை நாடவும்.

5. இப்போது Connect செய்து இணையத்தில் நுழையுங்கள்
Read More

18 ஜூன், 2015

கூகிள் ப்ளஸ், ஃபேஸ்புக் மற்றும் ப்ளாக்கர்

Posted by Anto Navis
கூகிள் ப்ளஸ் பற்றிய செய்திகளை கடந்த பதிவில் பதிவிட்டிருந்தேன். தற்போது கூகுள் ப்ளஸ் பற்றி சற்று விரிவாக பார்ப்போம். கடந்த ஐந்தாம் தேதி வரையில் கூகிள் ப்ளஸ் அழைப்பிதழ் கிடைக்காததால் கவலையில் இருந்தேன். நண்பர் ப்ரேம் அவர்கள் அனுப்பியிருந்த அழைப்பிதழை க்ளிக் செய்தாலும் "Keep Me Posted" என்றே சொன்னது. பிறகு கூகிள் ப்ளஸ் Vice president ப்ராட்லி ஹோரோவிட்ஸ் (Bradley Horowitz) அவர்களுக்கு மெயில் அனுப்பியிருந்தேன். அவர் அனுப்பிய அழைப்பிதழ் மூலம் கூகிள் ப்ளஸ்ஸில் இணைந்தேன்.

கிட்டத்தட்ட பேஸ்புக் போன்றே காட்சி அளித்தாலும் பேஸ்புக்கைவிட கூகிள் ப்ளஸ் நன்றாக இருக்கிறது. 

சர்கிள்: 



பேஸ்புக்கில் நாம் ஏதாவது பகிர்ந்தால் அது நம்முடைய நண்பர்கள் அனைவருக்கும் சென்றடையும். ஆனால் கூகிள் ப்ளஸ்ஸில் நண்பர்கள், உறவினர்கள், பதிவர்கள் என நம் விருப்பப்படி பல குழுக்களாக (Circle) பிரித்துக் கொள்ளலாம். ஒருவரையே எத்தனை குழுக்களில் வேண்டுமானாலும் சேர்க்கலாம். அவ்வாறு பிரித்துக் கொண்ட பின் குறிப்பிட்ட குழுவில் உள்ளவர்களுக்கு மட்டும் நாம் விரும்பியதை பகிர்ந்துக் கொள்ளலாம்.

நம்மை யாரவது அவர்கள் குழுவில் சேர்த்தால் நமக்கு செய்தி வந்துவிடும். ஆனால் எந்த குழுவில் அவர்கள் சேர்த்தார்கள் என்பது நமக்கு தெரியாது. அவ்வாறு அவர்கள் நம்மை சேர்த்த குழுவில் வேறு யார் யார் இருக்கிறார்கள் என்பதும் நமக்கு தெரியாது.

இது  குறித்து பேஸ்புக்  நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் (மறைமுகமாக) குறிப்பிடும்போது,

"குழுக்கள் என்பதன் பொருளே, குழுவில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் தெரிந்திருப்பது தான்."

(சரியாக மொழிபெயர்க்க தெரியவில்லை. அவர் கூறியது ஆங்கிலத்தில்,

"The definition of groups is . . . everyone inside the group knows who else is in the group"

இன்னொரு விஷயம் என்னவெனில், நம் அனுமதி இல்லாமலே யார் வேண்டுமானாலும் நம்மை அவர்கள் சர்கிளில் சேர்த்துக் கொள்ளலாம். அதனால் நீங்கள் ஏதாவ்து பகிரும் முன் கவனித்து பகிரவும்.

ஹேங்-அவுட் (Hang-Out):


(படத்தில் கறுப்பு பின்னணியில் இருப்பது என்னுடைய திரை. நான் வீடியோவை மறைத்திருந்தேன்.)

ஹேங்-அவுட் என்பது குழுவாக வீடியோ சாட் செய்யும் வசதியாகும். அதிகபட்சமாக பத்து நபர்களுடன் நாம் நேரிடையாக வீடியோ சாட் செய்யலாம். பத்து நபர்கள் சாட் செய்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வெளியேறினால், வேறு யாராவது இணைந்துக் கொள்ளலாம். வீடியோ சாட் செய்துக் கொண்டிருக்கும் போதே text Chat-ம் செய்யலாம். இதுவும் கூகிள் ப்ளஸ்ஸின் சிறப்பம்சமாகும். உங்கள் வீடியோவை மறைத்துக் கொண்டும் மற்றவர்களுடன் வீடியோ சாட் செய்யலாம்.

இதன் மூலம் பதிவர் சந்திப்பு கூட நடத்தலாம். ஆனால் பத்து நபர் மட்டும் தான் கலந்துக் கொள்ள முடியும். பத்து நபர்கள் என்பதை அதிகப்படுத்த வேண்டுமென கூகிளுக்கு பலர் கோரிக்கை விடுக்கின்றனர். 

Photo Tag:



பேஸ்புக்கில் உள்ளது போன்று புகைப்படத்தில் Tag கொடுப்பதுதான். ஆனால்  இதில் எளிமையாக இருக்கின்றது. நாம் Tag கொடுக்கும்போது அந்த கட்டத்தின் அளவை நாம் நம் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி புகைப்படத்தில் முகங்கள் இருந்தால் தானாகாவே கண்டுபிடித்து பரிந்துரை செய்கிறது.

பகிர்ந்துக் கொள்வதில் நான்கு முறைகள்:

பேஸ்புக்கில் உள்ளது போன்றே செய்திகள், சுட்டிகள்(Links), வீடியோக்களை பகிரலாம். கூடுதலாக தாங்கள் இருக்கும் இடத்தையும் பகிரலாம். பகிர்வதில் நான்கு முறைகள் இருக்கின்றன.

1. குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டும்  அல்லது ஒரு குழுவினருக்கு மட்டும் பகிரலாம்.

2. தங்கள் உருவாக்கியுள்ள அனைத்து சர்கிளிலும் உள்ளவர்களுக்கு பகிரலாம். (Your Circles)

3. அனைத்து சர்கிளிலும் உள்ளவர்களுக்கும், அவர்களின் சர்கிளின் உள்ள அனைவருக்கும் பகிரலாம். (Extended Circle)

4. கூகிள் உள்ள ப்ளஸ்ஸில் உள்ள அனைவருக்கும் பகிரலாம். (Public)



பேஸ்புக்கில் வீடியோ சாட்:

பேஸ்புக் தளம் ஸ்கைப் நிறுவனத்துடன் இணைந்து வீடியோ சாட் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அது One to One சாட் தான். அதனை ஆக்டிவேட் செய்ய http://www.facebook.com/videocalling என்ற முகவரிக்கு சென்று, Get Started என்பதை க்ளிக் செய்யவும். பிறகு நீங்கள் நண்பர்களுடன் சாட் செய்யும் போது மேலே வீடியோ ஐகானை க்ளிக் செய்து சாட் செய்யலாம். 

Video Calling என்ற பெயரில் ஒரு போலியான Application ஃபேஸ்புக்கில் இருக்கிறது. உண்மையில் அது ஸ்பாம் ஆகும்.  

மாறிவிட்டது ப்ளாக்கர்:
                                    

மாறுகிறது ப்ளாக்கர் என்ற பெயரில் கடந்த மார்ச் மாதம் ப்ளாக்கர் புதிய மாற்றங்களை தரவிருப்பதாக கூறியிருந்தேன். அதன் பின் சிலருக்கு மட்டும் சோதனை முறையில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. சோதனை முறையில் இருந்ததில் சில மாற்றங்களுடன் தற்போது அனைவருக்கும் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. சோதனை முறையில் Edit Html இல்லாமல் இருந்தது. தற்போது Edit Html பக்கம் இருக்கிறது. முன்பைவிட சற்று எளிதாக இருப்பது போல தோன்றுகிறது.

பழைய டாஷ்போர்டை விரும்புபவர்கள், டாஷ்போர்ட் மேலே வலதுபுறம் 

என்ற இடத்தில் உள்ள பெட்டியை Uncheck செய்யவும்.


ப்ளாக்கர் பெயர் கூகுள் ப்ளாக் (Google Blog) என்று பெயர் மாறப்போவதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால் இதனை கூகிள் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. கூகிள் பிளஸ் முழுமை அடைந்தபின் அறிவிக்கக்கூடும்
Read More

அன்ராய்டு பயனீட்டார்கள் கவனிக்க! போன் கால்களை பதிவு செய்யும் டார்சன் மென்பொருள்

Posted by Anto Navis

 
எல்லா வ​கையான ​மொ​பைல் ஆப்​ரேடிங் சிஸ்டம்க​ளையும் தற்​போது ​வைரஸ்கள், மால்​வேர்கள், டார்சன்கள் ஆகியன தாக்குகின்றன. அன்ராய்டும் தற்​போது அதற்கு விதிவிலக்கு அல்ல. அன்ராய்டு போன்களை தாக்கும் புதிய வ​கையான APP / BOT தற்​போது பரவி வருகின்றது. இந்த வ​கையான அப்ளி​கேசன்கள் ​பெரும்பாலும் UNKNOWN APK மூலம் பரவி வருகின்றன.


இந்த வ​கை அப்ளி​கேசன்கள் ​CALL க​ளை ​ரெக்கார்ட் ​​செய்து ரி​மோட் சர்வர்க்கு அனுப்பப்படுகின்றன. இந்த வ​கை டார்சன் ​மென்​​பொருட்கள் இருப்ப​தை CA Technologies கண்டறிந்து உள்ளது. அடுத்த மு​றை APK ​பைல் க​ளை நிறுவும் ​போது அவற்றுக்கான பர்மிஷன்கள் என்​னென்ன என்ப​தை படித்து பார்த்த பின்னர் நிறுவவும்.


சிறிய பதிவு ஆயினும் மதிப்பு ​பெற்றது.
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Read More

அண்ராய்டு PDF Creator

Posted by Anto Navis

எந்த ஒரு கோப்பையும் பிடிஎப் மாற்ற நிறைய மென்பொருட்களை நான் தந்திருக்கிறேன்.  இப்பொழுது அறிமுகப்படுத்த போகின்ற மென்பொருள் விண்டோஸ், மேக், மற்றும் ஆன்ட்ராய்டு மொபைல்,  ஐஓஎஸ் மொபைல் போன்ற சாதனங்களிலும் வேலை செய்யும் ஒரு பிடிஎப் மாற்றி மென்பொருள் ஆகும்.





இந்த பிடிஎப் மாற்றி மென்பொருளின் பெயர் Sonic PDF Creator Mobile இந்த மென்பொருளை தரவிறக்க கீழே செல்லுங்கள். இந்த மென்பொருள் ஒரு ஒபன் சோர்ஸ் மென்பொருள் என்பதே இதன் தனிச்சிறப்பாகும். இந்த மென்பொருளின் விண்டோஸ் பதிப்பினை தரவிறக்க சுட்டி  விண்டோஸ் மென்பொருள் ஒரு ட்ரையல் வெர்சன் மட்டுமே!

ஆன்ட்ராய்டு மொபைல் மற்று டேப்லட்டுகளுக்கான சுட்டி



 ஐபோன்களுக்கான மென்பொருள் தரவிறக்க சுட்டி


Read More

ஆங்கிலம் (Spoken English) பேச கற்றுக்கொடுக்கும் ஆண்ட்ராய்டுஅப்ளிகேசன்

Posted by Anto Navis
ஆங்கிலப்பயிற்சி ஆண்ட்ராய்டு மொபைல் போன் அப்ளிகேசன் உதவியுடன் எளிதாக கற்றுக்கொள்ளலாம் ஆங்கிலம் கற்க வேண்டும் என்று ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் மூலம் எக்ஸ்பர்ட் வரை அனைவருக்கும் பயனுள்ளதாக இந்த அப்ளிகேசன் உள்ளது.


தரவிறக்க  முகவரி : Download


நம்மிடம் இருக்கும் ஆண்ட்ராய்டு மொபைல் போனில் இத்தளத்திற்கு சென்று இடது பக்கம் இருக்கும் Install என்ற பொத்தானை சொடுக்கி எளிதாக நம் மொபைல் போனில் நிறுவலாம். நிறுவிய பின் ஒவ்வொரு வார்த்தைகளையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதில் நாம் உச்சரிப்பதில் பிழை ஏதும் இருந்தால் உடனடியாக நமக்கு தெரியப்படுத்தி நம்மை திருத்துகிறது.


பலவிதாமான வழி வகைகள் மூலம் எளிதாகவும் திறமையாகவும் புதுமையாகவும் ( Spoken English) மூலம் ஆங்கிலம் கற்க விரும்பும் அனைவருக்கும் இந்த ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் பயனுள்ளதாக இருக்கும்.
Read More

ஆண்ட்ராய்ட் போனில் ஸ்கிரீன் ஷாட் எடுக்க..!

Posted by Anto Navis


ஸ்கிரீன் ஷாட் என்றால் என்ன? 

(What is Screen Shot?)
கணினி, ஆண்ட்ராய்ட் போன்(Android Smartphone), டேப்ளட் பிசி(Tablet Pc) களின் திரையில் உள்ள காட்சியை அப்படியே படமாக மாற்றுவதுதான் ஸ்கிரீன்ஷாட். கணினியில் ஸ்கிரீன் ஷாட் எடுக்க Print Screen என்ற பட்டன் இருக்கும். 
takes screen shot from android phone

ஆனால் புதிய வகை ஆண்ட்ராய்ட், டேப்ளட் பிசிக்களில் அதுபோன்று தனியாக பட்டன் எதுவும் இருப்பதில்லை. ஸ்கீரின் ஷாட் எடுக்க குறுக்கு விசைகளைப் பயன்படுத்த வேண்டும். 

ஆண்ட்ராய்ட் போனில் ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வழிமுறை:

ஆண்ட்ராய்ட் போனில் பவர் பட்டனையும், ஹோம் பட்டனையும் ஒருசேர அழுத்தினால் உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்டுவிடும். 


Power Button+Home Button = Screen shot
or
Unlock Button+Home Button = Screen shot
 
 
நன்றி. 
Read More

மென்பொருள்கள் இல்லாமல் கணினியின் வேகத்தை அதிகரிக்க

Posted by Anto Navis
வாங்கிய புதிதில் கணினியில் வேகம்  சூப்பராக இருக்கும்..அதுவே நாளாக நாளாக குறைந்துவிடும்..மென்பொருள் எதுவும் பயன்படுத்தாமலேயே கணினியின் வேகத்தை அதிகரிப்பது எப்படி? என்பதைப் பார்ப்போம்.
நீங்கள் விண்டோஸ் XP பயன்படுத்துபவர்கள் என்றால்...

Start=>Programs=>Run

நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள் என்றால்...

Start=>Programs=>Search=>Run தேர்ந்தெடுக்கவும்.

ஆக... நீங்கள் Run Window வைத் திறக்க வேண்டும். இதற்கு குறுக்கிவிசை Star+R அழுத்தினாலே Run Window திறந்துகொள்ளும். இப்போது அதில் gpedit.msc என தட்டச்சிடுங்கள். புதிதாக ஒரு window open ஆகும். அதில் 

Computer Configuration==>Administrative Templates==>Network==>Qos Packet Scheduler==>Limit Reservable Bandwidth என்ற வரிசையில் செல்லவும். இப்போது Not Configured என்பதில் டிக் மார்க் இருப்பதை கவனியுங்கள்.

இதை Enable என மாற்றிவிட்டு , Bandwith -ஐ 20 லிருந்து 0 க்கு மாற்றம் செய்துவிடுங்கள்.. அவ்வளவுதான்.. இனி உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்து பரிசோதித்துப் பாருங்கள்.. கணினி முன்பைவிட வேகமாக இயங்குவதை உணர முடியும். 
Read More

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க

Posted by Anto Navis
நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள் இருக்கும்.நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து கொள்ளவோ முடியும்.இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது.

இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட Window தோன்றும்.


இதில் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key தேர்வு செய்து கொள்க. உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என ஏதாவது தேர்வு செய்து கொள்க.

தேர்வு செய்த பின் Activate என்ற பட்டனை அழுத்துக.பின் கீழ்க்கண்ட Window தோன்றும்.

இதில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்கவோ முடியாது.மேலும் கோப்பின் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும்.கீழே உள்ள படத்தை பார்க்க.


உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால் முன்பு தேர்வு செய்த key அழுத்தினால் போதும்.அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும்.

தற்போது நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்க முடியும்.
இந்த மென்பொருளை தரவிறக்க 
இங்கே கிளிக் செய்க
Read More

பிரபலமான இடுகைகள்