மென்பொருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மென்பொருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 ஆக., 2015

உங்கள் பேஷ்புக்கில் ஆபாச படமா? வாங்க சரி செஞ்சிடலாம்!

Posted by Anto Navis

நேற்று முதல் பலருடைய முகநூல் கணக்குகள்ஹாக் செய்யப்பட்டு வருகிறது.ஹாக் செய்பவர்கள் உங்கள்டைம்லைனில் ஆபாசவீடியோக்களை பதிவிட்டு உங்கள்நட்பு வட்டத்தில் உள்ள அனைவருக்கும் டாக்செய்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்லநூற்றுக்கணக்கான விடியோக்கள்டைம்லைனில் பதிவாகிறது.இதை எதோ ஹாக் ப்ரோக்ராம்கொண்டு நடத்துகிறார்கள். (இந்த ஹாக்செய்பவர்கள் லிங்க் கொடுக்கும் வெப்சைட்புரியாத வெளிநாட்டு மொழியில் உள்ளது.)இதனை ஓரளவேனும் தவிர்க்க நீங்கள்செய்யவேண்டியது என்ன..!


# முதலில் உங்கள் முகநூல் கணக்கை BACKUPசெய்துகொள்ளுங்கள்.
Settings -> General -> க்கு கீழே உள்ள லிங்க் Download
a copy of your Facebook data. மூலம் BACKUP
செய்துகொள்ளுங்கள்.



# Settings -> Security Settings -> Login Alerts -> Get an alert
when anyone logs into your account from a new device or
browser. -> அனைத்து Notificationsம்
வருவது போல செட்டிங்செய்து கொள்ளுங்கள்.



# இது மிகவும் முக்கியம். ஒருவேளை உங்கள்கணக்கு ஹாக் செயப்பட்டால் இந்த நண்பர்கள்மூலம் திரும்ப பெறலாம். Settings -> SecuritySettings -> Trusted Contacts -> இதில் ஐந்து நண்பர்கள்வரைக்கும் தேர்வு செய்ய முடியும்.உங்களுக்கு நெருக்கமான, கம்ப்யூட்டர்சற்று நன்கு தெரிந்தஐந்து நண்பர்களை தேர்வு செய்யுங்கள்.

Settings -> Timeline and Tagging Settings -
> who can add things to my timeline? -> Review postsfriends tag you in before they appear on your timeline? ->
ENABLED.



# குறிப்பாக அறிமுகம் இல்லாத மொழியில்வரும்வெளிநாட்டு நட்பு அழைப்புகளை ஏற்கவேண்டாம்.


NEW UPDATE:

ஹாக் செய்யப்பட முகநூல் நண்பர்களிடம் நான்பேசிய வரைக்கும், அவர்களுடையகம்ப்யூட்டரில் இருந்து அவர்களால் முகநூலில்இருந்து Log-out செய்யவோ, அந்தபதிவுகளை நீக்கவோ, அல்லது சில
மாற்றங்களை செய்யவோ அனுமதிக்கவில்லை.ஆனால், வேறொரு கம்ப்யூட்டரில்இருந்து அனைத்து செட்டிங்ஸ்ம் மாற்றமுடிகிறது. எனவே ஹாக்கர் உங்கள் BrowserCookies மூலமே உங்கள் கணக்கை ஹாக்செய்வதாக நினைக்கிறேன். முடிந்தஅளவு Browser Settingsல் Remember passwordஎடுத்து விடவும். மேலும்,ஒவ்வொரு முறையும்
ப்ரௌசெரை விட்டு வெளியேறும்போது ClearHistory கொடுத்து Browser Cookies உட்படஅழித்துவிடவும். சில ப்ரௌசெர்களில்ஒவ்வொரு முறையும் நாம் வெளியேறும்போதுதானாகவேHistoryCleaningசெயும்படி இருக்கிறது. முடிந்தஅளவு அதையும் பயன்படுத்தலாம்..

Read More

15 ஏப்., 2015

YOUTUBE வீடியோகளை ANDROID தொலைபேசிகளில் தரவிறக்கம் செய்ய உதவும் (Application) மென்பொருள்

Posted by Anto Navis

YOUTUBE வீடியோகளை ANDROID தொலைபேசிகளில் தரவிறக்கம் செய்ய உதவும் (Application) மென்பொருள்


சிறந்த பொழுதுபோக்கு வீடியோ தளமான YOUTUBE தளத்தில் இருந்து உங்களுக்கு பிடித்த வீடியோகளை மிக சுலபமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். இதற்கு TUBE MATE எனும் ANDROID அப்ளிகேசன் உதவுகிறது. இந்த அப்ளிகேசன் மூலம் மிக வேகமாகவும் விரும்பிய தரத்திலும் தரவிறக்கம் செய்ய முடியும்.

இதன் வசதிகள்

YOUTUBE தேடல் மற்றும் விரும்பிய வீடியோ களை லைக் செய்யும் வசதி.

ஒரே நேரத்தில் பல வீடியோ களை தரவிறக்கம் செய்யும் வசதி.

இணைய இணைப்பு இல்லாத போது நிறுத்தப்பட்டால் மீண்டும் தரவிறக்கம் செய்ய முடியும்.

உங்களுக்கு விருப்பமான வீடியோக்கள் கொண்டு உங்களுக்கான PLAYLIST உருவாக்க முடியும். 

MP3 யாக மற்றும் வசதி

வீடியோகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி.

பல்வேறுபட்ட RESOLUTION தரங்களில் தரவிறக்கம் செய்யலாம் . இதற்கு உங்கள் மொபைலின் தரத்தினை பொறுத்து விரும்பியதை தெரிவு செய்ய முடியும்.

இந்த அப்ளிகேசன் மூலம் தரவிறக்கம் செய்ய விரும்பும் வீடியோவினை தெரிவு செய்து கொண்டு பின்னர் தரவிறக்கம் அல்லது வீடியோவினை பார்ப்பதற்கான  விரும்பத்தை தெரிவு செய்து பின்னர் விரும்பிய RESOLUTION தெரிவு செய்தால் வீடியோ தரவிறக்கம் ஆரம்பிக்கும்.





______________________________________________
தரவிறக்கம் செய்ய முகவரி


Read More

14 ஏப்., 2015

PDF கோப்பிலுள்ள படங்கள், எழுத்துக்களை நீக்குவதற்கு.

Posted by Anto Navis



PDF கோப்பு ஒன்றில் காணப்படும் அநாவசியமான படங்கள், எழுத்துக்களை நீக்குவதற்கு PDF Eraser எனும் மென்பொருள் பயனுள்ளதாக காணப்படுகின்றது.
விண்டோஸ் இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடிய இந்த இலவச
மென்பொருளினைக் கொண்டு இரண்டே இரண்டு படிமுறைகளில் Text, Images, Logos மற்றும் தேவையற்ற பகுதிகளை Delete அல்லது Erase செய்ய முடியும்.
இவை தவிர எழுத்துக்கள், படங்களை உட்புகுத்தவும் முடிவதுடன், தவறான திசைகளில் காணப்படும் PDF பக்கங்களை திருப்பிக்கொள்ள (Rotate) முடியும்.




--------------------------------------------------------------------------------------------------------------------------------
Read More

11 ஏப்., 2015

Iphone மூலம் கணினியை இயக்க புதிய செயளி

Posted by Anto Navis
Android கருவிகளை தொடர்ந்து Google நிறுவனம் IOS கருவிகளுக்கும் புதிய செயளியை வெளியிட்டுள்ளது. இந்த செயளி மூலம் வாடிக்கையாளர்கள் கணினியை Iphone அல்லது ipad மூலம் பயன்படுத்த முடியும்.
Chrome Remote Destop என்றழைக்கப்படும் இந்த செயளியின் IOS பதிப்பு மூலம் கணினியை Smart Phone அல்லது Teblet மூலம் இயக்க முடியும். மேலும் இந்த செயளி உங்கள் நண்பர்களும் சிறிது நேரம் கணினியை பயன்படுத்தும் வசதியை கொடுக்கின்றது. இதை பயன்படுத்த, முதலில் கணினியில் Remote Access பதிவு செய்ய வேண்டும், இதன் பின் IOS கருவியில், செயளியை Open செய்து இணைக்கப்பட்ட கணினியை இயக்க முடியும். இந்த செயளி Appleன் AppStoreல் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
Read More

9 ஏப்., 2015

MP3 கோப்புகளுக்கு படங்களை இணைக்க

Posted by Anto Navis
இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் MP3 பாடல்கள் அந்தந்த குறிப்பிட்ட தளம் மற்றும் திரைப்படத்தின் படம் இணைக்கப்பட்டிருக்கும். இதனை நாம் ஆடியோவினை கேட்கும் போது படத்தினை காண முடியும். குறிப்பிட்ட ஆடியோ டேக் படத்தினை நாம் விரும்பியவாறு மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதற்கு ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் Mp32tag அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் File மெனு பொத்தானை அழுத்தி Add directory யை தேர்வு செய்யவும்.


பின் தோன்றும் விண்டோவில் குறிப்பிட்ட பாடல்களில் தொகுப்பு கோப்பறையை தேர்வு செய்யவும். பின் அனைத்து பாடல்களும் பட்டியலிடப்படும்.


பின் எந்த பாடலோ அதனை மட்டும் தேர்வு செய்யவும். பின் Extended Tags ஐகானை கிளிக் செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Add cover பொத்தானை அழுத்தி குறிப்பிட்ட படத்தை தேர்வு செய்து பின் OK பொத்தானை அழுத்தவும்.


குறிப்பிட்ட பாடலுக்கு நீங்கள் தெரிவு செய்த படம் செட் செய்யப்பட்டு இருக்கும். அந்த படம் குறிப்பிட்ட பாடலுக்கு செட் செய்து சேமிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி தோன்றும்.


Read More

9 மார்., 2014

நம் முகத்தை கடவுச்சொல்லாக காட்டி கணினிக்குள் நுழைய மென்பொருள்!!

Posted by Anto Navis 10 Comments

கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள் நுழையலாம்.


கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது. ஹாலிவுட் படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம் முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம்.

மென்பொருளின் பெயர் பிலிங்.இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை நம் கணினியில் இண்ஸ்டால் செய்துகொள்ள வேண்டியது தான். வெப்கேம் அல்லது மடிக்கணினியுடன் வரும் கேமிரா முன் நம் முகத்தை காட்ட வேண்டும் அவ்வளவுதான் இனி உள்ளே செல்லலாம். விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ்7,8,8.1 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இதன் 32 பிட் மற்றும் 64பிட் வெர்சனும் கிடைக்கிறது.




கணினிக்கு முன் இருந்து கொண்டு நம் முகத்தை காட்டினால் போதும் உள்ளே செல்லலாம். புதுமை விரும்பிகளுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.
------------------------------------------------------------------------------------------------------------------------

எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavis713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.


Read More

21 பிப்., 2014

1 கிளிக்கில் அவசியமான 90 க்கும் மேற்பட்ட மென்பொருள்களை நிறுவ

Posted by Anto Navis

கணினியில் இயங்குதளம் நிறுவியவுடன், அதில் ட்ரைவர், ஆண்டிவைரஸ் தொகுப்பு, ஆப்பிஸ் தொகுப்பு, மற்றும் கன்வெர்ட்டர்கள் மேலும் கனிணிக்கு தேவையான மென்பொருளை நிறுவ வேண்டும். இவ்வாறு செய்யும் போது நேர தாமதம் ஆகும்.அது மட்டும் அல்லாது நமக்கு தேவையான ஒவ்வொரு மென்பொருட்களையும் தேடி பெற்றுக் கொள்வதில் தான் இருக்கிறது சிக்கல் இதற்கு பதிலாக அனைதையும் ஒரே கிளிக்கில் நிறுவ முடியும் என்றால் எவ்வளவு நன்றாக இருக்கும். கணினியில் எந்த பணியை செய்தாலும் அதற்கு கண்டிப்பாக மென்பொருள் ஒன்று தேவைப்படும். அதற்கு தேவையான மென்பொருள்கள் அனைத்தும் இணையத்தில் கிடைக்கிறன. அதனை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும். ஆனால் ஒவ்வொரு மென்பொருளாக தனித்தனியே  பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும். இதற்கு பதிலாக கணினிக்கு தேவையான முதன்மை மென்பொருள்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் நிறுவ முடியும். இதற்கு ஒரு தளம் உதவி செய்கிறது.

இத்தளத்தின் முகப்பு பக்கத்திற்கு சென்றவுடன் உங்களுக்கு ஒரு மென்பொருள் பட்டியல் தோன்றும்., அதில் தேவையானவற்றை தெரிவு செய்த பின் Get Installer என்பதை சொடுக்கவும். உங்களுக்கு கிடைக்கும் Setup நிறுவ ஆரம்பிக்கவும். இதற்கு இணைய இணைப்பு அவசியமாகும்.

A Ninite Installer


Visit This Link
------------------------------------------------------------------------------------------------------------------------

எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavi713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

Read More

12 பிப்., 2014

ஆடியோ, வீடியோ, புகைப்படம் அனைத்தையும் Edit செய்ய‌ ஒரே மென்பொருள்

Posted by Anto Navis



நாம் மொபபைல் போனில் வீடியோ எடுக்கிறோம் பின்பு அதை டிவிடி பிளேயர்கள், மற்றும் டிவி 'களில் பார்ப்பதர்க்கு வெவ்வேரான ஃபார்மெட்களில் கன்வெர்ட் செய்ய வேண்டும்.  அத்ற்க்கு தேவையான



மென்பொருட்களை தனித்தனியாக டவுன்லோட் செய்ய வேண்டும்.  அதுவும் சிலவற்றை பணம் செலுத்தி வாங்கியும் இருக்கின்றோம்.  அத்ற்க்கு விடுதலை தரும் விதமாக அனைத்து மென்பொருட்களும் ஓரே மென்பொருளில் இனைக்கப்பட்டு நமக்கு கிடைக்கிறது.  அதுவும் முற்றிலும் இலவசமாக.  இந்த மென்பொருளின் பெயர்  Free Studio.   இதில் கீழ்காணும் வசதிகள் உள்ளன‌.






தேவையானதை மட்டும் Download செய்ய மேலே உள்ள வசதிகளில் வேண்டியவற்றை தேர்வு செய்து Download செய்துக் கொள்ளுங்கள்.  அல்லது அனைத்தையும் ஓரே மென்பொருளாக Download செய்ய இங்கு செல்லுங்கள்.

நன்றி...

------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavi713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

Read More

பிரபலமான இடுகைகள்