Softwares லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Softwares லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 ஏப்., 2015

PDF கோப்பிலுள்ள படங்கள், எழுத்துக்களை நீக்குவதற்கு.

Posted by Anto Navis



PDF கோப்பு ஒன்றில் காணப்படும் அநாவசியமான படங்கள், எழுத்துக்களை நீக்குவதற்கு PDF Eraser எனும் மென்பொருள் பயனுள்ளதாக காணப்படுகின்றது.
விண்டோஸ் இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடிய இந்த இலவச
மென்பொருளினைக் கொண்டு இரண்டே இரண்டு படிமுறைகளில் Text, Images, Logos மற்றும் தேவையற்ற பகுதிகளை Delete அல்லது Erase செய்ய முடியும்.
இவை தவிர எழுத்துக்கள், படங்களை உட்புகுத்தவும் முடிவதுடன், தவறான திசைகளில் காணப்படும் PDF பக்கங்களை திருப்பிக்கொள்ள (Rotate) முடியும்.




--------------------------------------------------------------------------------------------------------------------------------
Read More

9 ஏப்., 2015

MP3 கோப்புகளுக்கு படங்களை இணைக்க

Posted by Anto Navis
இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் MP3 பாடல்கள் அந்தந்த குறிப்பிட்ட தளம் மற்றும் திரைப்படத்தின் படம் இணைக்கப்பட்டிருக்கும். இதனை நாம் ஆடியோவினை கேட்கும் போது படத்தினை காண முடியும். குறிப்பிட்ட ஆடியோ டேக் படத்தினை நாம் விரும்பியவாறு மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதற்கு ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் Mp32tag அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் File மெனு பொத்தானை அழுத்தி Add directory யை தேர்வு செய்யவும்.


பின் தோன்றும் விண்டோவில் குறிப்பிட்ட பாடல்களில் தொகுப்பு கோப்பறையை தேர்வு செய்யவும். பின் அனைத்து பாடல்களும் பட்டியலிடப்படும்.


பின் எந்த பாடலோ அதனை மட்டும் தேர்வு செய்யவும். பின் Extended Tags ஐகானை கிளிக் செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Add cover பொத்தானை அழுத்தி குறிப்பிட்ட படத்தை தேர்வு செய்து பின் OK பொத்தானை அழுத்தவும்.


குறிப்பிட்ட பாடலுக்கு நீங்கள் தெரிவு செய்த படம் செட் செய்யப்பட்டு இருக்கும். அந்த படம் குறிப்பிட்ட பாடலுக்கு செட் செய்து சேமிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி தோன்றும்.


Read More

24 செப்., 2014

3D படங்களை உருவாக்க இலவச மென்பொருள்..!

Posted by Anto Navis

3D படங்கள் இன்று நேற்றுத் தோன்றியதல்ல.. நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே 3D படங்களை உருவாக்கப்பட்டுள்ளன.

முப்பரிமாண படிமம் (3D) என்பது படிமத்தில் உயரம், அகலம் தவிர ஆழத்தின் தோற்றத்தை உருவாக்கவும் முடிகிற ஒரு ஒழுங்கமைந்த தொழில்நுட்பமாகும். அதாவது மூன்று பரிமாணங்களில் காட்சித் தகவல்களை பதிய முடியும்.

முப்பரிமாண தொழில்நுட்பத்தை 1840 ஆம் ஆண்டு சர் சார்லெஸ் வீட்ஸ்டோன் என்பவர் கண்டறிந்தார். இந்த 3D நுட்பமானது தற்காலத்தில் பட அளவையியல், பொழுது போக்கிற்காக எடுக்கப்படும் 3D படங்களில் பயன்படுத்தபடுகிறது. அத்தோடு மட்டுமல்லாமல் நவீன காலத்தில் கட்டிட வரைகலைக்குப் பயன்படும் ஆட்டோகேட், 3மேக்ஸ் மென்பொருட்களிலும் பயன்படும் நுட்பம் இதுதான்.


3D படங்கள் இன்று நேற்று உருவானவை அல்ல….1861 ஆம் ஆண்டிலேயே 3D படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அப்பொழுது ஏற்பட்ட உள்நாட்டு போரின் முடிவில் ஏற்பட்ட விளைவுகளை 3டி படங்களாக பதிவு செய்துள்ளனர்.

இப்படங்களை The library of congress கட்சி, மக்களின் பார்வைக்கு வெளியிட்டது. சிவப்பு -நீல வண்ணங்களில் பிரிண்ட் செய்யப்பட்டுள்ள இப்படங்களை பார்ப்பதற்கு கண்ணாடிகளும் தயார் செய்யப்பட்டிருந்தன என்பது ஆச்சரியம் கலந்த தகவல்.அன்றைய காலத்தில் 3D படங்கள் உருவாக்க பல்வேறு பிரச்னைகள் இருந்தன. ஆனால் தற்பொழுது நவீனமயனமான தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு மென்பொருளைப் பயன்படுத்தி சாதாரணமானவர்கள் கூட முப்பரிமாணப் படங்களை உருவாக்க முடியும்.

அதற்காக பயன்படும் ஒரு அடிப்படை மென்பொருள் பிளெண்டர். இது ஒரு இலவச சுதந்திர மென்பொருளாகும். அனைவரும் இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.

இந்த மென்பொருள் Microsoft windows, Mac OS, Linux, Solaris, NetBSD, IRIX, OpenBSD, FreeBSD என்பன போன்ற அனைத்து வகையான இயங்குதளங்களிலும் பயன்படுத்தக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

எந்த வகையான கணினி என்றாலும் இம்மென்பொருளை எளிதாக பயன்படுத்த முடியும்.

இம்மென்பொருள் வடிவம்பெற்றதே ஒரு சுவையான கதை. டச்சு நாட்டு அனிமேஷன் நிறுவனமான NeoGeo மற்றும் Not a Number Technology (NaN) நிறுவனங்களுக்கு அனிமேஷன் உள் வேலைகள் செய்ய பயன்படும் மென்பொருளாக முதன் முதலில் உருப்பெற்றது. பிறகு இதற்கு பேபி என்ற ஆல்பத்தில் உள்ள ஒரு பாடல் மூலம் ப்ளண்டர் என்ற பெயர் வைக்கப்பட்டது.

கணினியில் கட்டிட வரைபடங்கள் வரையவும் , முப்பரிமான பொருட்களை (3D) வரையவும் பல்வேறு மென் பொருட்கள் உள்ளது. அம்மென்பொருட்கள் அனைத்தும் கட்டண மென்பொருள்கள். விலையும் அதிகம். ஆனால் பிளெண்டர் மென்பொருள் முற்றிலும் இலவச சுதந்திர மென்பொருளாகும்.

Blender மென் பொருள் 3D படங்களை உருவாக்கப் பயன்படுகிறது.
Macromedia Flash, Adobe photoshop போன்ற கிராபிக்ஸ் மென்பொருட்களில் ஏற்படுத்தக்கூடிய Photo Effects மற்றும் Text Effects களை உருவாக்க பயன்படுகிறது.

கட்டிடக் கலைக்குப் பயன்படும் ஆட்டோகேட் (Auto cad), 3டி மேக்ஸ் (3d max) ரைவட் (rivet) போன்ற மென்பொருளின் தோற்றத்தை பெற்றுள்ளது சிறப்பு. அதில் செய்யும் பணிமுறைகளைப் போன்ற இந்த மென்பொருளிலும் இருப்பதால் இம்மென்பொருள்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எளிதானதாக இருக்கும்.

இது விண்டோஸ் 32bit, 64bit , Ox , Linux போன்ற அனைத்து இயங்கு தளத்திலும் இயங்குமாகையால் எந்த வகை கணினியை பயன்படுத்தினாலும் அதில் மென்பொருளை நிறுவிக்கொள்ளலாம்.

40 MB கொள்ளவே கொண்ட இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவுவதும் எளிதானதுதான்.

மென்பொருளைத் தரவிறக்கம் (Software Download) செய்துகொள்ள
Read More

5 மார்., 2014

பாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.

Posted by Anto Navis 11 Comments

பாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software
இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் பற்றியும், இதற்கு பயன்படும் 

மென்பொருட்கள் பற்றியும், குறிப்பிடுகிறேன்.

நீங்களும் முயற்சித்து பாருங்கள்.


1) பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்க வேண்டிய தேவை என்ன?

தொலைக்காட்சி, மேடை போன்ற இடங்களில் பாடகர்கள் பாடும் Live நிகழ்ச்சிகளில் பயன்படுத்த.


2) பின்னணி இசை எவ்வாறு பெறப்படுகிறது ?

பொதுவாக TV நிகழ்சிகளில் பாடகருக்கான நிகழ்சிகளில். ஆனால் இங்கு திரைக்கு அருகில்/ பின்னால் ஒரு Music Group நின்று music, real time இல் இசைப்பார்கள். இதில் ஒரு சில பிழைகள் வர வாய்ப்பு உள்ளது. உயர் தர நிகழ்சிகளில் Studio இல் வைத்து தனியாக record செய்த Background music இல் தான் பாடுவார்கள். இவ்வாறன தனி இசைகளை கடைகளில் பெற முடியும். ஒரு போதும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் software மூலம் பாடலில் இருந்து இசையை பிரித்து எடுப்பது இல்லை.


எவ்வித இடைஞ்சலும் இன்றி அனைவராலும் மிக இலகுவாக பயன்படுத்த கூடிய ஒரே ஒரு Karaoke software. ஒரு சில buttons மூலம் பாடல்களில் இசை, குரல் இரண்டையும் பிரித்து எடுக்கலாம்.


-----------------------------
Download Software
----------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------
* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavis713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

Read More

பிரபலமான இடுகைகள்