தொழில்நுட்பம் in தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழில்நுட்பம் in தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 ஆக., 2015

உங்கள் பேஷ்புக்கில் ஆபாச படமா? வாங்க சரி செஞ்சிடலாம்!

Posted by Anto Navis

நேற்று முதல் பலருடைய முகநூல் கணக்குகள்ஹாக் செய்யப்பட்டு வருகிறது.ஹாக் செய்பவர்கள் உங்கள்டைம்லைனில் ஆபாசவீடியோக்களை பதிவிட்டு உங்கள்நட்பு வட்டத்தில் உள்ள அனைவருக்கும் டாக்செய்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்லநூற்றுக்கணக்கான விடியோக்கள்டைம்லைனில் பதிவாகிறது.இதை எதோ ஹாக் ப்ரோக்ராம்கொண்டு நடத்துகிறார்கள். (இந்த ஹாக்செய்பவர்கள் லிங்க் கொடுக்கும் வெப்சைட்புரியாத வெளிநாட்டு மொழியில் உள்ளது.)இதனை ஓரளவேனும் தவிர்க்க நீங்கள்செய்யவேண்டியது என்ன..!


# முதலில் உங்கள் முகநூல் கணக்கை BACKUPசெய்துகொள்ளுங்கள்.
Settings -> General -> க்கு கீழே உள்ள லிங்க் Download
a copy of your Facebook data. மூலம் BACKUP
செய்துகொள்ளுங்கள்.



# Settings -> Security Settings -> Login Alerts -> Get an alert
when anyone logs into your account from a new device or
browser. -> அனைத்து Notificationsம்
வருவது போல செட்டிங்செய்து கொள்ளுங்கள்.



# இது மிகவும் முக்கியம். ஒருவேளை உங்கள்கணக்கு ஹாக் செயப்பட்டால் இந்த நண்பர்கள்மூலம் திரும்ப பெறலாம். Settings -> SecuritySettings -> Trusted Contacts -> இதில் ஐந்து நண்பர்கள்வரைக்கும் தேர்வு செய்ய முடியும்.உங்களுக்கு நெருக்கமான, கம்ப்யூட்டர்சற்று நன்கு தெரிந்தஐந்து நண்பர்களை தேர்வு செய்யுங்கள்.

Settings -> Timeline and Tagging Settings -
> who can add things to my timeline? -> Review postsfriends tag you in before they appear on your timeline? ->
ENABLED.



# குறிப்பாக அறிமுகம் இல்லாத மொழியில்வரும்வெளிநாட்டு நட்பு அழைப்புகளை ஏற்கவேண்டாம்.


NEW UPDATE:

ஹாக் செய்யப்பட முகநூல் நண்பர்களிடம் நான்பேசிய வரைக்கும், அவர்களுடையகம்ப்யூட்டரில் இருந்து அவர்களால் முகநூலில்இருந்து Log-out செய்யவோ, அந்தபதிவுகளை நீக்கவோ, அல்லது சில
மாற்றங்களை செய்யவோ அனுமதிக்கவில்லை.ஆனால், வேறொரு கம்ப்யூட்டரில்இருந்து அனைத்து செட்டிங்ஸ்ம் மாற்றமுடிகிறது. எனவே ஹாக்கர் உங்கள் BrowserCookies மூலமே உங்கள் கணக்கை ஹாக்செய்வதாக நினைக்கிறேன். முடிந்தஅளவு Browser Settingsல் Remember passwordஎடுத்து விடவும். மேலும்,ஒவ்வொரு முறையும்
ப்ரௌசெரை விட்டு வெளியேறும்போது ClearHistory கொடுத்து Browser Cookies உட்படஅழித்துவிடவும். சில ப்ரௌசெர்களில்ஒவ்வொரு முறையும் நாம் வெளியேறும்போதுதானாகவேHistoryCleaningசெயும்படி இருக்கிறது. முடிந்தஅளவு அதையும் பயன்படுத்தலாம்..

Read More

19 ஜூன், 2015

அப்டேட் ஆகாத பேஸ்புக் பக்கங்கள் பிளாக் செய்யப்படும்!

Posted by Anto Navis
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் (முகநூல்) உலகம் முழுவதும் 15 கோடிப் பேர் போலி கணக்குகள் வைத்து இருப்பதாகவும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் பேஸ்புக் நிறுவனம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. பேஸ்புக்கின் விதிமுறையை மீறி பல தனி நபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வைத்து இருக்கிறார்கள். உலகம் முழுவதும் 7.9 சதவீதத்தினர் மாதாந்த அடிப்படையில் தங்களது கணக்குகளை தீவிரமாக பயன்படுத்துகிறார்கள். இதில் 4.3 சதவீதத்தினர் தங்கள் பிரதான கணக்குகளைத் தவிர வேறு பெயரில் ஒரு போலி கணக்கை வைத்து இருக்கிறார்கள்.அதே சமயம் 54 சதவீதம் பேர் போலி கணக்குகளை அப்டேட் செய்வதில்லை.
facebook-denied

அப்படி பேஸ்புக்கில் அக்கவுண்ட் உருவாக்கிவிட்டு நீண்ட காலம் அப்டேட்டாக செயல்படாமல் கிடக்கும் அக்கவுண்ட்களை முடக்கி வைக்க பேஸ்புக் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. வரும் வாரங்களில் இந்த நடவடிக்கை முழு வீச்சில் நடைபெறும் என்ற செய்தியையும் பேஸ்புக் நிர்வாகம் தனது அதிகாரபூர்வ வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதாவது வரும் 12ந்தேதி முதல் இந்த அக்கவுண்ட்களை முடக்கும் பணியில் பேஸ்புக் இறங்குகிறது.

பயன்படாமல் இருக்கும் ஃபேஸ்புக் அக்கவுண்ட் மூலம், பேஸ்புக் பக்கங்களுக்கு ஏற்கனவே ‘லைக்’ கொடுத்திருந்தால், அந்த லைக்குகளும் ’அன்லைக்’ ஆகி விடும். இதனால், பல பேஸ்புக் பக்கங்கள் தனது ‘லைக்’களை இழக்க நேரிடும். இந்த நடவடிக்கை மூலம், நிறுவனங்கள், தங்கள் பேஸ்புக் பக்கத்திலிருந்து, செய்திகளை , தகவல்களை பகிரும் போது, சரியான நபர்களுக்கு கொண்டு சேர்க்க உதவும் என்கிறது பேஸ்புக்.
அதே சமயம் முடக்கப்பட்ட பேஸ்புக் அக்கவுண்ட்கள் மீண்டும் செயல்பட விரும்பினால், அந்த அக்கவுண்ட் மூலம் கொடுக்கப்பட்ட லைக்-கள், கருத்துகள் அனைத்தும் மீட்கப்பட்டு அந்தந்த பக்கங்களில் சேர்க்கப்படும் என்று பேஸ்புக் நிர்வாகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. பேஸ்புக்கின் இத்தகைய ’லைக்’ களை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கை மூலம் போலி லைக்குகளும், முடக்கப்படும் நிலை ஏற்படும். அதே சமயம், இறந்தவர்களின் பேஸ்புக் அக்கவுண்ட்கள் மூலம் பெறப்பட்ட லைக் களும் இழக்க நேரிடும். 
Read More

ஆண்ட்ராய்ட் போனில் வைரஸ் - எச்சரிக்கை.

Posted by Anto Navis
தகவல் தொழில்நுட்பம் அதிக வளர்ச்சிப்பெற்றபோதும் அதனுடைய பாதுகாப்பும் சில நேரங்களில் கேள்விக்குறியாகவே அமைந்துவிடுகிறது. பொதுவாக எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பாக இருந்தாலும், அதற்கு எதிர்மறைப் பலன்கள் உண்டு என்பதை மறுப்பதற்கு இயலாது. 


பல்வேறு நிலைகளில் அதனுடைய பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது. விலையுயர்ந்த கம்ப்யூட்டராக இருப்பினும் அதற்கு ஒரு ஆண்ட்டி வைரஸ் மென்பொருள் (Anti virus software)கட்டாயம் தேவைப்படுகிறது. இல்லையென்றால் என்ன விலை கொடுத்து வாங்கியிருந்தாலும் அதிலுள்ள கோப்புகளை நச்சு நிரல்கள் துவம்சம் செய்துவிடுகின்றன. 


அதேபோன்றதொரு நிலைதான் தற்பொழுது பிரபலமாகிக்கொண்டிருக்கும் ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் நீடிக்கிறது என்பது கசப்பான உண்மை. விலையுயர்ந்த ஆண்ட்ராய்ட் மொபைல்களாக இருப்பினும் சரி.. விலையுயர்ந்த டேப்ளட் பி.சி. க்களாக இருப்பினும் சரி (Tablet pc, android tablet), எதுவாக இருப்பினும் வைரஸ் பாதிப்பு என்பது பொதுவானதே. 



ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் டேப்ளட் பி.சி. மற்றும் மொபைல் போன்களை பயன்படுத்துவோர் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த வைரஸ் ஆனது ஆண்ட்ராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் பதிப்பிற்கு முந்தைய பதிப்புகளைப் பயன்படுத்தும் சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை உறுதி செய்யும் முகமாக computer emergency response teamindia வின் அறிக்கை அமைந்துள்ளது. இந்தியாவில் ஆண்ட்ராய்ட் சாதனங்களில் அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.


வைரசால் ஏற்படும் பாதிப்புகள்: 
(Virus affections in android tablets, mobiles)
இந்த வைரசானது, தான் புகுந்த ஆண்ட்ராய்ட் சாதனங்களில் உள்ள எஸ்.எம்.எஸ் மற்றும் தனி நபர் தகவல்களை திருடி அனுப்புகிறது. காரணம் Adroid System த்தில் உள்ள வழுக்கள் ஆகும். இந்த வழுக்களைப் பயன்படுத்தி வைரஸ் பரவுகிறது. ஆண்ட்ராய்ட் சாதனங்களில் உள்ள ஒவ்வொரு அப்ளிகேஷனிலும் இந்த வைரஸ் புகுந்து கெடுதல்களை விளைவிக்கின்றன. கெடுதல் விளைவிக்கும் பல குறியீடுகளை இந்த வைரசானது புகுத்துகிறது. 


இதனால் அந்த அப்ளிகேஷன்களில் உள்ள ஒரிஜினல் குறியீடுகள் பாதிக்கப்படுவதில்லை. ஒரிஜினல் அப்ளிகேஷன்கள் இயல்பாகவே இயங்கும். அப்ளிகேஷன்கள் அனைத்தும் இயல்பாக இயங்குவதால் இதிலுள்ள வைரசை பயனரால் கண்டறிய இயலாது. 




மேலும் இவ்வைரசானது போனில் உள்ள அப்ளிகேஷனில் இருக்கும் கோப்பின் பெயரிலேயே டூப்ளிகேட் பைலை நிறுவுகிறது. இதனால் வேறேதேனும் சோதனையின்போதும் இத்தகைய கோப்புகள் கிடைப்பதில்லை.


இவ்வாறு தொடர்ந்து பயனாளர் வைரஸ் புகுந்த அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தும்பொழுது அதில் குடியேறிய வைரசானது, அவரைப்பற்றிய தகவல்களை திருடி அனுப்பிவிடுகிறது. 



வைரஸ் புரோகிராம் என்னென்ன தகவல்களைத் திருடும்?


(what kind of data theft virus from android device)
நீங்கள் பர்சனலாக அனுப்பும் SMS கள், மொபைல் எண்கள், தனிப்பட்ட அடையாள எண்கள், உங்கள் வங்கி கணக்கு விபரங்கள்...மேலும் நீங்கள் பெற்ற SMS தகவல்கள் (உங்களுக்கு பிறரால் அனுப்பபட்ட தகவல்கள்) இதுபோன்று முக்கியமான தகவல்களையும் திருடி விடும். 


தகவல் திருட்டுடன் மற்றொரு வேலையையும் இது சத்தமில்லாமல் செய்கிறது. போன் பயன்படுத்துபவர்களுக்குத் தெரியாமலேயே, அந்த போனிலிருந்து இந்த வைரஸ் அழைப்புகளை மேற்கொள்கிறது. தனிப்பட்ட தகவல்களையும் அனுப்புகிறது. 


இந்த வைரஸ் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?
(Remedy for virus problem in android devices)
எந்த பிரச்னைக்கும் கட்டாயம் ஒரு தீர்வு இருக்கும். முதலில் வருமுன் காப்பது. இந்த பார்முலாவைப் பயன்படுத்தி முடிந்த அளவிற்கு உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனங்களில் வைரஸ் புகுவதை பெருமளவு தடுத்துவிடலாம். 


இலவசமாக கிடைக்கிறது என்பதற்காகவும், ஆசையின் காரணமாகவும் பாதுகாப்பில்லாத தளங்களிலிருந்து கிடைக்கும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்வதை நிறுத்த வேண்டும். 


ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கென்றே நல்ல தரமுள்ள பாதுகாப்பான அப்ளிகேஷன்களை வழங்கும் தளங்கள் உள்ளன. 


உதாரணமாக சொல்வதெனில் கூகிள் பிளே ஸ்டோர். இதுபோன்ற தளங்கள் அந்த அப்ளிகேஷன்களை வெளியிடுவதற்கு முன்பே அது தரமானதுதானா? வழுக்கள் ஏதும் இருக்கிறதா? வைரஸ் பாதிப்பு இதனால் ஏற்படுமா? என்றெல்லாம் சோதனைச் செய்தபிறகே தளத்தில் தரவிறக்கம் செய்யும் வசதியைக் கொடுக்கிறது. 


இதுபோன்று வேறு சில தளங்களும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தலாம்.


வைரஸ் வந்த பிறகு என்ன செய்யலாம்? 


அந்த வகையில் ஆண்ட்ராய்ட் சாதனங்களைப் பாதிக்கும் இந்த வைரஸ்களை நீக்க தரமான ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கான வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களை பயன்படுத்தலாம். இந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருளைப் பயன்படுத்து உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனத்தை முழுமையாக ஸ்கேன் செய்யவும். வைரஸ் பாதிப்பு ஏதேனும் இருப்பின் அவற்றை கண்டறிந்து அழித்துவிடும். 


முக்கியமாக எந்தவொரு தளத்திலிருந்து நீங்கள் டவுன்லோட் செய்யும் அப்ளிகேஷனின் நம்பகத்தன்மையை, பாதுகாப்பை நன்றாக படித்துணர்ந்து அதற்குப் பிறகு டவுன்லோட் செய்து பயன்படுத்துவதே புத்திசாலித்தனம். 


ஆண்ட்ராய்ட் போன்களுக்கென இலவசமாகவும் ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்கள் கிடைக்கின்றன. இலவச மென்பொருளை விடவும் கட்டண மென்பொருளே சிறந்தது. கூகிள் Anti virus for Android Device என தேடுங்கள். கிடைக்கும் முடிவுகளில் உங்களுக்குத் தேவையான, சரியான ஆண்ட்டி வைரஸைக் கண்டறிந்து அவற்றை டவுன்லோட் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள். 


ஆண்ட்ராய் சாதனங்களுக்கான மிகச்சிறந்த ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்களைப் பற்றி அடுத்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
Read More

மொபைல் பேட்டரியை பராமரிக்க சில டிப்ஸ்…

Posted by Anto Navis


1618540நாம் யாருக்காவது அர்ஜென்டாக கால் செய்ய நினைக்கும் போது நமதுமொபைல் பேட்டரி லோ காமிக்கும் போது நமக்கு வர கூடிய எரிச்சல் இருக்கிறதே அதை சொல்லி மாளாது. நாம் ஒழுங்காக பேட்டரியை பராமரித்தால் நிச்சயம் இந்த பிரச்சனை நம் மொபைலுக்கு வராது. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஒரு சிலவே என்றாலும் நமக்கு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்படவேண்டிய சில நடவடிக்கைகளைக் கீழே காணலாம்.
1. பேட்டரிகளை அதிக நேரம் சார்ஜ் செய்திடும் வகையில் தொடர்ந்து மின் இணைப்பிலேயே இருக்கக் கூடாது. இதனால் சூடு பரவும் நிலை ஏற்படும். பேட்டரிகளை அதிக நேரம்சார்ஜ் செய்வது போனின் வாழ்நாளைக் குறைக்கும்.
2. மொபைல் போன்களுக்கு போன் நிறுவனங்கள் தரும் ஒரிஜினல் பேட்டரிகளையே பயன்படுத்த வேண்டும். டூப்ளிகேட் பேட்டரி உங்கள் போனை பாதிக்கும்.
3. ஈரம் மற்றும் அதிக சூடு இவை இரண்டுமே போன் பேட்டரிகளுக்கு கெடுதல் தரும் நிலைகளாகும்.
4. நாம் தொடர்ச்சியாக மியூசிக் அல்லது வீடியோ பார்க்கும் சூழ்நிலையில் பேட்டரி சூடு அடைகிறது இதனால் போனை சிறிது நேரம் ஆப் செய்து வைக்கலாம்.
5. சார்ஜ் செய்வதனால் பேட்டரியின் அளவு குறைகிறதா? உடனே எடுத்துச் சென்று போன் டீலரிடம் தரவும்.அடிக்கடி பேட்டரியை மொபைலில் இருந்து கழட்டாதீர்.
6. முக்கியமாக பேட்டரிகளில் ஷார்ட் சர்க்யூட் பிரேக் ஏற்படக் கூடாது. இதனால் வெடிக்கும் நிலை கூட ஏற்படலாம்.
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பேட்டரியின் ஆற்றல் எவ்வளவு இருக்கிறது என்று எளிதாக பார்க்கலாம். பொதுவாக ஸ்மார்ட்போன்களின் திரையில் பேட்டரி போல் இருக்கும் ஐகான் மூலம் தான், நிறைய பேர் பேட்டரியின் ஆற்றலை பார்த்து சார்ஜ் செய்கின்றனர். ஆனால் பேட்டரியின் ஆற்றலை சோதித்து பார்க்க இன்னும் ஓர் சரியான வழிமுறை இருக்கிறது. அந்த எளிய வழி பற்றி பார்ப்போம். ஸ்மார்ட்போனின் மெனு பட்டனை அழுத்த வேண்டும். இதில் செட்டிங்ஸ் என்ற மெனுவிற்குள் செல்ல வேண்டும்.
இந்த செட்டிங்ஸ் என்ற பட்டனை அழுத்தினால் இதற்குள் நிறைய ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதை ஸ்குரோல் செய்தால் எபவுட் மெனு என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் பேட்டரி யூசேஜ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் பேட்டரியின் ஆற்றல் எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
பேட்டரியின் ஆற்றலை தெரிந்து கொள்வது மட்டும் அல்லாமல் வைபை நெட்வொர்க் வசதிக்கு எவ்வளவு பேட்டரி தீர்ந்திருக்கிறது, டிஸ்ப்ளே வசதிக்கு எவ்வளவு பேட்டரி செலவாகி உள்ளது போன்ற விவரங்களை தெளிவாக பார்க்கலாம்.
இதில் தேவையில்லாமல் அப்ளிக்கேஷனுக்கு பேட்டரி செலவானால், அதற்கு தகுந்த வகையில் அப்ளிக்கேஷன்களை குறைத்தோ அல்லது அகற்றுவதோ (டெலீட்டோ) செய்து கொள்ளலாம்.
Read More

18 ஜூன், 2015

Hard disk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய

Posted by Anto Navis

Picture



அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டுகளில் பலவிதமான கோளாருச் செய்திகள் காணப்படும். விண்டோஸ் நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற கோளாருச் செய்திகள் அதிகமாக காணப்படும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம்தேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில பைல்கள் நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும் அந்த பைல்களால் நம்முடைய கணினியில் அடிக்கடி ஏரர் செய்தி காட்டும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது செக்டர் பகுதிகளாகவே சேமிக்கப்படும். மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும் இந்த பகுதிகளில் மீண்டும் தகவல் பதியப்படும் முழுமையாக இல்லை குறிப்பிட்ட பகுதியில் மட்டும், மற்றவைகள் வழக்கம் போல காலியாக உள்ள இடத்தில் பதியப்படும். இதனால் வன்தட்டில் எரர் செய்தி வருவதோடு கணினி தொடக்கமும் மந்தமாகும். இதுபோன்ற எரர் செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

                           இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து வேண்டிய ட்ரைவ் கோலனை தேர்வு செய்து, Read only பொதானை அழுத்தி சோதனை செய்து கொண்டு, எரர் செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும். எரர் செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த எரர் செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். வன்தட்டினை சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். 
Read More

22 ஏப்., 2015

உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் பிரட்ச்சனைகளும் அதன் தீர்வும் !

Posted by Anto Navis

புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு....


நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவராக இருப்பீர்கள். உங்கள் கம்ப்யூட்டரில் திடீரென சில பிரட்ச்சனைகள் வந்துவிடும். உடனே நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்யக்கூடியவரை கூப்பிட்டு என்ன பிரட்ச்சனை என்று பார்க்கச்சொல்வீர்கள். அவர் நல்லவராக இருந்தால் பரவாயில்லை. பணம் பறிப்பவராக இருந்தால் உங்களுக்கு கம்ப்யூட்டர் தெரியாததை புரிந்துகொண்டு சாதாரண பிரட்ச்சனையை எல்லாம் பெரிதாகச் சொல்லி உங்களிடம் காசு பறிக்க பார்ப்பார்...........

சரி இதற்க்கு என்ன செய்யவேண்டும் நான் என்று கேட்கிறீர்களா ?

கம்ப்யூட்டரை பயன்படுத்த ஆரம்பித்துவிட்ட நீங்கள் கம்ப்யூட்டரில் அடிக்கடி ஏற்படும் சாதாரண பிரட்ச்சனைகளைப் பற்றி தெரிந்துகொண்டால் உங்களை யாரும் அவ்வளவு சீக்கிரம் ஏமாற்ற முடியாது.

அப்படி சாதாரணமாக வரக்கூடிய பிரட்ச்சனை என்னென்ன ?

1) உங்கள் கம்ப்யூட்டர் நீங்கள் முன்பு பயன்படுத்தியதை விட ரெம்பவும் வேகம் குறைந்ததாக (Slow) இருந்தால் அதன் வேகத்தை எந்தெந்த முறைப்படி அதிகப்படுத்துவது.

முதலாவதாக உங்கள் கம்ப்யூட்டர் ஸ்டார் ஆகும்போது தானாக திறந்து செயல்பட்டுக்கொண்டிருக்கக்கூடிய சில சாப்ட்வேர்களால் (Automatic Running Programes) உங்கள் கம்ப்யூட்டர் வேகம் குறையலாம்.

இதற்க்கு நீங்கள் Start பட்டனை அழுத்தி Run என்று வருவதை கிளிக் செய்து




அதில் msconfig என்று டைப் செய்து எண்டரை அழுத்தினால் உங்களுக்கு ஒரு தட்டு ஓப்பன் ஆகும்

அதில் Startup என்ற தலைப்பை தேர்ந்தெடுத்து அங்கு டிக் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களில் உங்களுக்கு எந்த புரோகிராம் தேவை இல்லாமல் தானாக திறக்கிறது என்று தோன்றுகிறதோ அந்த புரோகிராம் பெயரில் உள்ள டிக்கை அகற்றிவிட்டு OK செய்துவிடலாம்.

அடுத்து Start > Control Panel > Add or Remove Programs சென்று நீங்கள் இன்ஸ்டால் செய்த தேவை இல்லாத மென்பொருள்களை (Software) நீக்கிவிடலாம்.


அடுத்து My Computer > C Drive சென்று அதன் வலது புறம் கிளிக் செய்து Properties ஐ தேர்ந்தெடுத்து Disk clean up என்ற இடத்தை கிளிக் செய்து


அதில் உள்ள அனைதையும் டிக் செய்து தேவை இல்லாத பழைய டெம்ரவரி பைல்கள் அனைத்தையும் அழித்துவிடலாம். இதில் உள்ள பைல்களை அழிப்பதால் உங்கள் கம்ப்யூட்டருக்கு எந்த பிரட்ச்சனையும் இல்லை.

அடுத்து Start > All Programs > Accessories > System Tools > Disk Defragmenter என்ற பகுதிக்குச் சென்று Defragment என்ற பட்டனை அழுத்தி உங்கள் கம்ப்யூட்டரை கிளின் செய்யலாம்.


இந்த மூன்று முறையில் உங்கள் கம்ப்யூட்டரை கிளீன் செய்வதால் உங்கள் கம்ப்யூட்டரில் முன்பு இருந்த வேகம் குறைவு நீங்கி சிறப்பாக செயல்படும். இதைச் செய்ய நீங்கள் தெரிந்துகொண்டால் உங்களுக்கு ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவர் தேவையில்லை.

2)உங்கள் கம்ப்யூட்டரில் ஏதாவது ஒன்றை நீங்கள் தவறுதலாக செய்யப்போக உங்கள் கம்ப்யூட்டரில் உங்களை வேலை செய்யவிடாமல் கீழே உள்ள படத்தில் உள்ளதுபோல ஒரு பிரட்ச்சனையான பகுதி (Error Display) அடிக்கடி ஓப்பன் ஆகி உங்களை வேலை செய்ய விடாமல் தடுக்கலாம்.



இந்த பிரட்ச்சனை தட்டை (Error Display) எப்படி போக வைப்பது.

உங்கள் கம்ப்யூட்டரில் Start பட்டனை கிளிக் செய்து Help and Support என்ற இடத்தை கிளிக்       செய்யுங்கள்

.

அதில் undo change your computer with System Resotre என்ற இடத்தை கிளிக் செய்து
restore my computer earliery time என்ற இடத்தை கிளிக் செய்தால்
உங்களுக்கு காலெண்டர் போல ஒரு தட்டு ஓப்பன் ஆகும்

அதில் நீங்கள் இரண்டு மூன்று நாளைக்கு முன்பாக உங்கள் கம்ப்யூட்டரில் பிரட்ச்சனை இல்லாமல் இருந்த நாளை தேர்ந்தெடுத்து கிளிக் செய்து Next > Next அழுத்தி Finish செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் ஒரு முறை மூடி திறக்கும் (Restart). அப்படி திறந்த உடன் பாருங்கள் உங்களுக்கு ஏற்பட்ட பிரட்ச்சனை தட்டு (Error Display) மருபடியும் வராது.

3) நீங்கள் தினமும் இண்டெர் நெட் பார்த்துக்கொண்டிருப்பீர்கள் அந்த இண்டெர் நெட் உங்கள் கம்ப்யூட்ருக்கு வருவதற்க்கு என்னென்ன செட்டப் செய்யப்பட்டுள்ளது என்று உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அது பிரட்ச்சனை இல்லை. ஆனால் உங்கள் கம்ப்யூட்டரில் தேதி மற்றும் நேரம் ஓடிக்கொண்டிருக்கும் இடத்தில் இரண்டு கம்ப்யூட்டர் ஒன்றாக இனைந்தது போன்று ஒரு ஐக்கான் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்

. அது விளக்கு போல மின்னுவதால்தான் இண்டெர் நெட் வருகிறது என்று உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். ஆனால் திடீரென அந்த ஐக்கான் அந்த இடத்தில் இல்லாமல் போய் இண்டெர் நெட் வேலை செய்யவில்லை என்றால் அதை எங்கு போய் எடுப்பது மறுபடி இண்டெர் நெட்டை எப்படி வேலை செய்ய வைப்பது என்பது உங்களுக்கு தெரியாது. அதற்க்காக கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவரை கூப்பிட்டு வந்து அவருக்கு பணம் கொடுத்து அதை கொண்டு வருவீர்கள்.

சரி......... அதை எப்படி கொண்டு வருவது.

உங்கள் கம்ப்யூட்டரின் முகப்பில் (Desktop-ல்) My Network Place என்ற ஒரு ஐக்கான் இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால் சரி இல்லை என்றால் அப்படியே அந்த கம்ப்யூட்டர் படத்தில் (Wallpaper-ல்) உங்கள் மவுசை வைத்து அதன் வலது புறம் கிளிக் செய்து Properties சென்று Desktop என்ற தளைப்பை தேர்ந்தெடுத்து Customize Desktop என்ற பட்டனை கிளிக் செய்து மேலே My Network Place என்று எழுதப்பட்ட இடத்தில் பக்கத்தில் உள்ள சிறிய கட்டத்தில் கிளிக் செய்து டிக்கை வரவைத்து ok செய்து அதை மூடிவிடுங்கள்.

இப்பொழுது My Network Place என்ற ஐக்கானை உங்கள் மவுசால் தொட்டு வலது புறம் கிளிக் செய்து Open என்ற இடத்தை அழுத்துங்கள்.

உடனே உங்களுக்கு My Network Place என்ற ஒரு பகுதி ஓப்பன் ஆகும். அதில் வலது புறத்தில் View Network Connections என்று எழுதப்பட்ட இடத்தை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து உங்களுக்கு அதன் வலது புறத்தில் Local Aria Connection என்று ஒரு ஐக்கான் தோன்றும். அந்த ஐக்கானை உங்கள் மவுசால் தொட்டு அதன் வலது புறம் கிளிக் செய்து அதில் வரும் Enable என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள்.


உடனே உங்களுக்கு பழையபடி உங்கள் கம்ப்யூட்டரின் Taskbar டைம் பக்கத்தில் அந்த இண்டெர் நெட் இரண்டு கம்ப்யூட்டர் ஐக்கான் வந்துவிடும். 
இனி உங்கள் கம்ப்யூட்டரில் இண்டெர்நெட்டை நீங்கள் பார்க்கலாம்.



Read More

12 ஏப்., 2015

வாட்ஸ்ஆப் மூலம் ஒரே நேரத்தில் 250 பேருக்கு Message அனுப்புவது எப்படி ?

Posted by Anto Navis



இன்று நாம் பார்க்க இருப்பது வாட்ஸ் ஆப் பற்றிய ஒரு தகவல். இன்றைய நவீன காலத்தில் எல்லோருடைய கையிலும் மொபைல் போன் இருக்கு அதோட சேர்த்து வாட்ஸ்ஆப் இருக்கு. 

இந்த வாட்ஸ்ஆப் மூலம் எப்படி ஒரு நேரத்தில் 250 பேருக்கு Message அனுப்புவது என்று தான் பார்க்க போரம் முதலில் உங்களுடைய வாட்ஸ்ஆப் ஓபன் செய்து கொள்ளுங்கள் 


படத்தில் உள்ள படி செய்யவும் நண்பர்களே 



நான் வாட்ஸ்ஆப் ஆரம்பத்தில் இருந்து இப்படித்தான் எல்லோருக்கும் Msg போடுறன் 



இதில் New List கொடுத்து கொள்ளுங்கள் 







உங்களுடைய நண்பர்களை Add பண்ணுங்க அதுக்கு பின்னர் Create கொடுத்து கொள்ளுங்கள் அவ்வளவுதான்





இப்ப நீங்கள் Create செய்த Broadcast வந்துடு பாருங்கள் 


இதுக்கு பின்னர் நீங்கள் அனுப்புற ஒரு செய்தி 250 பேருக்கு போகும் இது உண்மை தேவை என்றால் try பண்ணுங்கள் 
Read More

11 ஏப்., 2015

Iphone மூலம் கணினியை இயக்க புதிய செயளி

Posted by Anto Navis
Android கருவிகளை தொடர்ந்து Google நிறுவனம் IOS கருவிகளுக்கும் புதிய செயளியை வெளியிட்டுள்ளது. இந்த செயளி மூலம் வாடிக்கையாளர்கள் கணினியை Iphone அல்லது ipad மூலம் பயன்படுத்த முடியும்.
Chrome Remote Destop என்றழைக்கப்படும் இந்த செயளியின் IOS பதிப்பு மூலம் கணினியை Smart Phone அல்லது Teblet மூலம் இயக்க முடியும். மேலும் இந்த செயளி உங்கள் நண்பர்களும் சிறிது நேரம் கணினியை பயன்படுத்தும் வசதியை கொடுக்கின்றது. இதை பயன்படுத்த, முதலில் கணினியில் Remote Access பதிவு செய்ய வேண்டும், இதன் பின் IOS கருவியில், செயளியை Open செய்து இணைக்கப்பட்ட கணினியை இயக்க முடியும். இந்த செயளி Appleன் AppStoreல் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
Read More

10 ஏப்., 2015

(FAKE FACEBOOK) போலி பேஸ்புக் Profile ஜ கண்டறிய எளிய வழிகள்!!

Posted by Anto Navis


பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கை, தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் உபயோகப்படுத்துகின்றனர்.இதில் போலி கணக்கு வைத்திருபவர்கள் ஏராளம். இவர்களை கண்டறிய சில சுலபமான வழிகள். 
  • இவர்களின் Profile Picture ஐ வைத்து ஓரளவு கணிக்கலாம். Profile Picture ஐ நீண்டகாலம் மாற்றாமல் வைத்திருப்பார்கள். ஏதாவது ஒரு பிரபல பெண்களின் புகைப்படத்தை Profile Picture ஆக வைத்திருப்பார்கள். இவர்களின் புகைப்பட ஆல்பத்தில் இரண்டிற்கு மேற்பட்ட படங்கள் இருப்பது அரிது.
  • இவர்களுடைய நண்பர்கள் பட்டியலில் அதிகளவான ஆண்கள் நண்பர்களாக இருப்பார்கள்.
  • யார்மேலாவது சந்தேகம் ஏற்பட்டால் அவர்கள் Facebook இல் இணைந்த தேதியினையும், அவர்களது நண்பர்கள் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பாருங்கள்.குறைந்த காலத்தில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் பட்டியலில் இருந்தால் அந்தக்கணக்கு போலியாக இருப்பதற்கான சாத்தியம் அதிகம். காரணம் விளம்பரத்துக்காக கண்டபடி நண்பர்களை சேர்ப்பார்கள்.
  • அவர்களின் Profile முழுமையான தகவல்களுடன் இருக்கிறதா என பாருங்கள்.உண்மையான நபர்களின் Profile முழுமையாக நிரப்பப்பட்டும், சுவாரசியமாகவும் இருக்கும். ஆனால் போலி நபர்களின் Profile கள் முழுமையாக நிரப்பப்படாமலும்,ஏனோதானோ என நிரப்பப்பட்டும் இருக்கும்.
  • போலி என சந்தேகப்படுவோரின் Activities ஐ பாருங்கள். உதாரணமாக Comments, Likes, Status. போலி கணக்காயின் இவை அதிகம் இருக்காது.ஆண்களுக்கு!… பெண்களின் பெயரில் Friend Request வந்தால் அவர்களின் Profile ஐ முழுவதுமாக ஆராயுங்கள். காரணம் உண்மையான கணக்கு வைத்திருக்கும் பெண்கள், தானாக முன்வந்து முகம் தெரியாத ஆண்களுக்கு Friend Request கொடுப்பதில்லை.
  • போலி கணக்குகளில் அநேகமானவை பெண்களின் பெயரிலேயே இருக்கும். அதுவும் 1988 தொடக்கம் 1992 ஆம் ஆண்டு பிறந்ததாகவே Profile இல் குறிப்பிடப்பட்டிருக்கும்.
Read More

9 ஏப்., 2015

MP3 கோப்புகளுக்கு படங்களை இணைக்க

Posted by Anto Navis
இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் MP3 பாடல்கள் அந்தந்த குறிப்பிட்ட தளம் மற்றும் திரைப்படத்தின் படம் இணைக்கப்பட்டிருக்கும். இதனை நாம் ஆடியோவினை கேட்கும் போது படத்தினை காண முடியும். குறிப்பிட்ட ஆடியோ டேக் படத்தினை நாம் விரும்பியவாறு மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதற்கு ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் Mp32tag அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் File மெனு பொத்தானை அழுத்தி Add directory யை தேர்வு செய்யவும்.


பின் தோன்றும் விண்டோவில் குறிப்பிட்ட பாடல்களில் தொகுப்பு கோப்பறையை தேர்வு செய்யவும். பின் அனைத்து பாடல்களும் பட்டியலிடப்படும்.


பின் எந்த பாடலோ அதனை மட்டும் தேர்வு செய்யவும். பின் Extended Tags ஐகானை கிளிக் செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Add cover பொத்தானை அழுத்தி குறிப்பிட்ட படத்தை தேர்வு செய்து பின் OK பொத்தானை அழுத்தவும்.


குறிப்பிட்ட பாடலுக்கு நீங்கள் தெரிவு செய்த படம் செட் செய்யப்பட்டு இருக்கும். அந்த படம் குறிப்பிட்ட பாடலுக்கு செட் செய்து சேமிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி தோன்றும்.


Read More

பிரபலமான இடுகைகள்