பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கை, தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் உபயோகப்படுத்துகின்றனர்.இதில் போலி கணக்கு வைத்திருபவர்கள் ஏராளம். இவர்களை கண்டறிய சில சுலபமான வழிகள்.
- இவர்களின் Profile Picture ஐ வைத்து ஓரளவு கணிக்கலாம். Profile Picture ஐ நீண்டகாலம் மாற்றாமல் வைத்திருப்பார்கள். ஏதாவது ஒரு பிரபல பெண்களின் புகைப்படத்தை Profile Picture ஆக வைத்திருப்பார்கள். இவர்களின் புகைப்பட ஆல்பத்தில் இரண்டிற்கு மேற்பட்ட படங்கள் இருப்பது அரிது.
- இவர்களுடைய நண்பர்கள் பட்டியலில் அதிகளவான ஆண்கள் நண்பர்களாக இருப்பார்கள்.
- யார்மேலாவது சந்தேகம் ஏற்பட்டால் அவர்கள் Facebook இல் இணைந்த தேதியினையும், அவர்களது நண்பர்கள் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பாருங்கள்.குறைந்த காலத்தில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் பட்டியலில் இருந்தால் அந்தக்கணக்கு போலியாக இருப்பதற்கான சாத்தியம் அதிகம். காரணம் விளம்பரத்துக்காக கண்டபடி நண்பர்களை சேர்ப்பார்கள்.
- அவர்களின் Profile முழுமையான தகவல்களுடன் இருக்கிறதா என பாருங்கள்.உண்மையான நபர்களின் Profile முழுமையாக நிரப்பப்பட்டும், சுவாரசியமாகவும் இருக்கும். ஆனால் போலி நபர்களின் Profile கள் முழுமையாக நிரப்பப்படாமலும்,ஏனோதானோ என நிரப்பப்பட்டும் இருக்கும்.
- போலி என சந்தேகப்படுவோரின் Activities ஐ பாருங்கள். உதாரணமாக Comments, Likes, Status. போலி கணக்காயின் இவை அதிகம் இருக்காது.ஆண்களுக்கு!… பெண்களின் பெயரில் Friend Request வந்தால் அவர்களின் Profile ஐ முழுவதுமாக ஆராயுங்கள். காரணம் உண்மையான கணக்கு வைத்திருக்கும் பெண்கள், தானாக முன்வந்து முகம் தெரியாத ஆண்களுக்கு Friend Request கொடுப்பதில்லை.
- போலி கணக்குகளில் அநேகமானவை பெண்களின் பெயரிலேயே இருக்கும். அதுவும் 1988 தொடக்கம் 1992 ஆம் ஆண்டு பிறந்ததாகவே Profile இல் குறிப்பிடப்பட்டிருக்கும்.
0 comments:
கருத்துரையிடுக