19 ஜூன், 2015

அப்டேட் ஆகாத பேஸ்புக் பக்கங்கள் பிளாக் செய்யப்படும்!

Posted by Unknown
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் (முகநூல்) உலகம் முழுவதும் 15 கோடிப் பேர் போலி கணக்குகள் வைத்து இருப்பதாகவும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் பேஸ்புக் நிறுவனம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. பேஸ்புக்கின் விதிமுறையை மீறி பல தனி நபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வைத்து இருக்கிறார்கள். உலகம் முழுவதும் 7.9 சதவீதத்தினர் மாதாந்த அடிப்படையில் தங்களது கணக்குகளை தீவிரமாக பயன்படுத்துகிறார்கள். இதில் 4.3 சதவீதத்தினர் தங்கள் பிரதான கணக்குகளைத் தவிர வேறு பெயரில் ஒரு போலி கணக்கை வைத்து இருக்கிறார்கள்.அதே சமயம் 54 சதவீதம் பேர் போலி கணக்குகளை அப்டேட் செய்வதில்லை.
facebook-denied

அப்படி பேஸ்புக்கில் அக்கவுண்ட் உருவாக்கிவிட்டு நீண்ட காலம் அப்டேட்டாக செயல்படாமல் கிடக்கும் அக்கவுண்ட்களை முடக்கி வைக்க பேஸ்புக் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. வரும் வாரங்களில் இந்த நடவடிக்கை முழு வீச்சில் நடைபெறும் என்ற செய்தியையும் பேஸ்புக் நிர்வாகம் தனது அதிகாரபூர்வ வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதாவது வரும் 12ந்தேதி முதல் இந்த அக்கவுண்ட்களை முடக்கும் பணியில் பேஸ்புக் இறங்குகிறது.

பயன்படாமல் இருக்கும் ஃபேஸ்புக் அக்கவுண்ட் மூலம், பேஸ்புக் பக்கங்களுக்கு ஏற்கனவே ‘லைக்’ கொடுத்திருந்தால், அந்த லைக்குகளும் ’அன்லைக்’ ஆகி விடும். இதனால், பல பேஸ்புக் பக்கங்கள் தனது ‘லைக்’களை இழக்க நேரிடும். இந்த நடவடிக்கை மூலம், நிறுவனங்கள், தங்கள் பேஸ்புக் பக்கத்திலிருந்து, செய்திகளை , தகவல்களை பகிரும் போது, சரியான நபர்களுக்கு கொண்டு சேர்க்க உதவும் என்கிறது பேஸ்புக்.
அதே சமயம் முடக்கப்பட்ட பேஸ்புக் அக்கவுண்ட்கள் மீண்டும் செயல்பட விரும்பினால், அந்த அக்கவுண்ட் மூலம் கொடுக்கப்பட்ட லைக்-கள், கருத்துகள் அனைத்தும் மீட்கப்பட்டு அந்தந்த பக்கங்களில் சேர்க்கப்படும் என்று பேஸ்புக் நிர்வாகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. பேஸ்புக்கின் இத்தகைய ’லைக்’ களை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கை மூலம் போலி லைக்குகளும், முடக்கப்படும் நிலை ஏற்படும். அதே சமயம், இறந்தவர்களின் பேஸ்புக் அக்கவுண்ட்கள் மூலம் பெறப்பட்ட லைக் களும் இழக்க நேரிடும். 

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்