19 ஜூன், 2015

இண்டர்நெட் வழியாக மொபைல் போனை சார்ஜ் செய்ய

Posted by Anto Navis





வயர்கள் ஏதும் இல்லாமல் வை-ஃபை இண்டர்நெட் வழியாக மொபைல் போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

30 அடி தூரம் வரையில் காற்றலை வழியாக வயர்கள் ஏதுமின்றி வை-ஃபை இண்டர்நெட் மூலம் மொபைல்களை சார்ஜ் செய்யும் ‘power over WiFi’ என்ற நவீன தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த தொழில்நுட்பமானது வழக்கமாக வை-ஃபை ரூட்டர்களில் இருந்து அனுப்பப்படும் ரேடியோ பிரிக்வன்ஸி பவரை பயன்பாட்டுக்கான நேரடி மின்சாரமாக (usable direct current (DC) power) மாற்றுவதன் மூலம் மொபைலுக்கு சார்ஜை ஏற்றுகிறது. ஆனால், தற்போதுள்ள வை-ஃபை தொழில்நுட்பத்தை காட்டிலும் இதற்கு சற்று மேம்படுத்தப்பட்ட வன்பொருள் தேவை.

ஒரு ரூட்டரிலிருந்து எவ்வளவு மின்சாரத்தை அவுட்புட்டாக எடுக்க முடியும் என்பதை கண்டறிய புதிய சாப்ட்வேர் ஒன்றும் உருவாக்கப்பட்டு ஆராய்ச்சி நடந்து வருகிறது.

இந்த தொழில்நுட்பத்தை ஏற்கனவே கேமிராவில் 17 அடி தூர தொலைவில் இருந்து சோதனை செய்து பார்த்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். அதிகபட்சமாக 28 அடி தூரத்தில் டெம்பரேச்சர் சென்சார்கள் பேட்டரியை சார்ஜ் செய்வது உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில், சார்ஜ் ஏறும் போது வை-ஃபை இண்டர்நெட் வேகத்திலும் எவ்வித தடங்கலும் ஏற்படவில்லை.


இதையடுத்து, ஆராய்ச்சியாளர்கள் வெகுவிரைவில் இந்த தொழில்நுட்பத்தை அன்றாட பயன்பாட்டுக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்