20 ஜன., 2014

ஆண்ட்ராய்ட், ஆப்பிள் போன்களில் தமிழில் டைப் செய்ய

Posted by Anto Navis

செல்லினம்: 


ஸ்மார்ட்போன்களில் தமிழில் டைப் செய்ய பயன்படும் ஒரு மென்பொருளாகும். இதை மலேசியாவைச் சேர்ந்த திரு. முத்து நெடுமாறன் என்பவர் உருவாக்கினார். சிலமாதங்களுக்கும் இலவசமாக வெளியிடப்பட்ட இந்த மென்பொருளானது, பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது. பயனர்கள் தங்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் கொடுத்த மென்பொருளைப்பற்றிய கருத்துகளின் அடிப்படையில் தற்பொழுது இம்மென்பொருள் மேன்படுத்தபடுத்தப்பது செல்லினம் 2 என்ற புதிய பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. 

இம்மென்பொருளை உங்கள் ஸ்மார்ட்போன்களில் நீங்கள் பயன்படுத்த விரும்பினால் தரவிறக்கம் செய்துகொள்ள செல்ல வேண்டிய முகவரி: 

https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam

செல்லினம் மென்பொருளில் உள்ள சிறப்புகள்: 


1. சொல் திருத்தி: 

இம்மென்பொருளில் மற்ற தமிழ் மென்பொருளில் ஏற்படும் சொற்பிழைகள் ஏற்படுவதில்லை. ஒரு தமிழ் வார்த்தை தவறாக எழுத்துப் பிழையுடன் தட்டசிட்டாலும், தானாகவே திருத்தி அமைத்து விடும். இம்மென்பொருளின் மிக முக்கியமான சிறப்பாக இதைக் கூறலாம். 

2. எண்களை உள்ளிடுதலில் புதிய வழி: 

சாதாரணமாக மொபைல் போனில் உள்ள கீபோர்டில் எண்களை உள்ளிட 123 என்ற விசையைகளைத் தட்டி, பிறகு கிடைக்கும் குறியீடுகள் மற்றும் எண்களுக்கான குறியீடுகளை போர்டில் தேர்ந்தெடுத்து உள்ளீடு செய்யும் வழிமுறையே உள்ளது. 

ஆனால் புதிய செல்லினம் பதிப்பில் அவ்வாறில்லை. முதல் வரிசையில் உள்ள விசைகளை தொடர்ந்து அழித்தினாலே எண்களை உள்ளிடும் வசதி தோன்றும்.


3. Predictive Text:

ஒரு சொல்லை தட்டச்சிடும்பொழுது, தானாகவே இந்த சொல்தானா என்பதை காட்டும் வசதிகள் ஆங்கிலத்தில் உண்டு. அதுபோல செல்லினம் மென்பொருளில் உண்டு. நீங்கள் தட்டச்சிடும் எழுத்துக்களை உணர்ந்துகொண்டு கூகிள் இன்புட் டூலில் உள்ளதைப் போன்று அந்த வார்த்தைகளை வரிசைப்படுத்திக் காட்டும். 

செல்லினம் மென்பொருள் மூலம் தட்டச்சிடும்பொழுது தோன்றும் கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தினால் சொற்களுக்கான பட்டியல் விரித்துக் காட்டப்படும். தேவையான வார்த்தையை அதிலிருந்து தேர்ந்தெடுக்கலாம். 


செல்லினம் மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய : Download Free Tamil input Software Sellinam 2
------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavi713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்