14 ஜன., 2014

MS Office – இல் ஒரு டாகுமென்ட்க்கு Password கொடுப்பது எப்படி?

Posted by Anto Navis

MS Office நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு மென்பொருள். Word, Power Point, Excel என்று ஏதேனும் ஒன்றை நாம் தினமும் பயன்படுத்தி வருகிறோம். சில நேரங்களில் நமது டாகுமென்ட்களுக்கு நாம் பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டி வரலாம். அதை எப்படி செய்வது என்று பார்ப்போம். 

1. ஒரு புதிய டாகுமென்ட்டை உருவாக்குங்கள் அல்லது உங்களிடம் ஏற்கனவே உள்ள ஒன்றை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

2. Save செய்யும் போது “Save As” என்பதை கிளிக் செய்யுங்கள். 

3. அதில் முதலாவதாக உள்ள Word Document – ஐ என்பதையே கிளிக் செய்யுங்கள். 

4. இப்போது வரும் பகுதியில் Tools >> General Options என்பதை கிளிக் செய்ய வேண்டும். 



5. இப்போது வரும் பகுதியில் Password கொடுப்பதற்கான வசதிகள் இருக்கும். 


முதலாவதாக உள்ள “Password to open” பகுதியில் Password கொடுத்தால் File Open ஆகும் போது Password கேட்கப்படும். 

“Password To Modify” என்பதில் Password கொடுத்தால் Edit செய்யும் போது Password கேட்கப்படும். 

“Read-only recommended” என்பதை கொடுத்தால் File Read Only என்ற முறையில் இருக்கும். அதை எடிட் செய்ய முடியாது. 

உங்களுக்கு தேவைப்படும் முறையில் இவற்றை செய்து OK கொடுத்து விடுங்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavi713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

6 கருத்துகள்:

பிரபலமான இடுகைகள்