6 மார்., 2014

சமூக வலைத்தளமான ட்விட்டர் நமது தமிழில்....

Posted by Anto Navis
சமூக வலைத்தளமான ட்விட்டர் தனது பக்கத்தினை தமிழில் வடிவமைத்து வழங்க இருக்கிறது.


ட்விட்டர் பக்கத்தில் ஹோம், கனக்டு, ஃபாலோவர் என்ற அனைத்து வார்த்தைகளையும் ஆங்கிலத்தில் பார்த்து வருகிறோம். இனி தமிழ் மொழியிலேயே ட்விட்டர் பக்கத்தினை பார்க்கலாம். ஐரிஷ், தமிழ், கன்னடா, பெங்காலி என்று தொடங்கி இப்படி மொத்தம் 16 மொழிகளில் மொழிபெயர்ப்பு மையத்தினை (ட்ரேன்ஸிலேஷன் சென்டரை) வழங்கஉள்ளது ட்விட்டர்.














உதாரணதிற்கு கூகுள் பக்கத்தில் தமிழ் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் தமிழ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் அந்த பக்கம் முழுவதும் தமிழ் மொழியில் மாற்றப்பட்டிருப்பதை பார்க்கலாம். இப்படி ட்விட்டரும் தனது பக்கத்தினை 16 மொழிகளில் வடிவமைக்க இருக்கிறது.
இதில் புதுமையான விஷயமும் ஒன்றும் இருக்கிறது. இப்படி தமிழ் மொழியில் ட்விட்டர் பக்கத்தினை வடிவமைக்கும் வாய்ப்பினை ட்விட்டர் உறுப்பினர்களுக்கே வழங்குகிறது சமூக வலைத்தளமான ட்விட்டர். அதாவது ட்ரான்ஸிலேட்.ட்விட்டர்.காம் என்ற வலைத்தளத்தில் நுழைந்தால் உங்களுக்கான வார்த்தை கொடுக்கப்பட்டிருக்கும்.
அந்த வார்த்தைக்கு சரியான மொழிபெயர்ப்பை டைப் செய்து சமர்ப்பிக்க வேண்டும். அதே வார்த்தைக்கு ஆயிரக்கணக்கான ட்விட்டர்வாசிகள் தாங்கள் மொழிபெயர்த்த வார்த்தையை ட்பை செய்து சமர்ப்பித்திருப்பார்கள். இப்படி வந்து சேர்ந்த ஒட்டு மொத்த வார்த்தைகளிலும், வாக்கிளிக்கும் (வோட்)முறையின் மூலம் சிறந்த வார்த்தைகள் தேர்வு செய்யப்படும். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் ட்விட்டர் முகவரியில் நுழைந்து (லாகின் செய்து) எல்லோரும் எளிதாக வார்த்தைகளை சமர்ப்பிக்கலாம்
------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavis713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்