17 மார்., 2014

Win RAR மென்பொருள் தற்பொழுது Android சாதனங்களுக்கும் முற்றிலும் இலவசமாக....

Posted by Anto Navis

ஒன்றுக்கு மேற்பட்ட பல கோப்புக்களை ஒரே கோப்பாக இணைத்துக் கொள்வதற்கு Windows கணனியிலேயே Compress Zip எனும் வசதி தரப்பட்டுள்ளது.


இதன் மூலம் எந்த ஒரு வகையிலமைந்த கோப்புக்களையும் ஒன்றாக இணைத்துக்கொள்ள முடியும்.
Eg: Newtext.txt + NewImage.jpeg + NewDocument.doc + Newpdf.pdf ====Compress to ====> NewZip.zip


இவ்வாறு Compress Zip வசதியை பயன்படுத்தி கோப்புக்களை ஒன்றிணைப்பதன் மூலம் அவைகளின் அளவுகளை பெரிதும் குறைத்துக் கொள்ளவும் முடிவதுடன் அவற்றினை மிக இலகுவாக மின்னஞ்சல் செய்யவோ அல்லது வேறு தேவைகளுக்காக பகிர்ந்து கொள்ளவோ முடியும்.

இவைகள் தவிர அவற்றினை கடவுச்சொல் இட்டு பாதுகாத்துக்கொள்ளவும் முடியும்.

மேற்குறிப்பிட்ட வசதிகளை பயன்படுத்திக்கொள்ள Windows கணனியில் Compress Zip வசதி தரப்பட்டிருந்தாலும் அந்த வசதிகளுடன் சேர்த்து மேலும் பல வசதிகளை தருவதே நாம் அனைவரும் அறிந்த Win RAR எனும் மென்பொருளாகும்.

 இது கணனியில் தரப்பட்டுள்ள வசதியினை விட பல மடங்கு வினைத்திறனாக கோப்புக்களை சுருக்கி ஒன்றிணைத்துத் தருவதுடன் பயன்படுத்துவதற்கு மிக எளிமையான இடைமுகத்தையும் கொண்டுள்ளது. 

ஏராளமான கணனிப் பயனர்களால் பயன்படுத்தப்படும் இந்த மென்பொருளானது தற்பொழுதுAndroid சாதனத்துக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


win rar tamil

 எனவே இதன் பிறகு எவ்வித தடையும் இன்றி  Win RAR கோப்புக்களை எமது Android Smart சாதனத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இனிப்பான விடயம் தானே.


 Android சாதனங்களில் இயங்குவதற்காக அருமையாக வடிவமைக்கப்பட்டு Play Store இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதனை Android பயனர்கள் முற்றிலும் இலவசமாகவே தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்க 


நன்றி
Content taken by : www.tamilinfotech.com
------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavis713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்