13 மே, 2014

ஜி மெயிலில் இருக்கும் பேக் அப் வசதி...!

Posted by Anto Navis
 

நாம் இன்று அதிகமாக பயன்படுத்தும் மெயில் வசதியான ஜிமெயிலுக்கு பேக் அப் தேவையாதானா என ஆச்சரியத்துடன் நீங்கள் கேள்வி கேட்கலாம். ஜிமெயில் தரும் கொள்ளளவிற்கு மேலாகவும் நாம் மின்னஞ்சல்களை அடுக்கி வைக்கப் போகிறோமா?

ஜிமெயில் தான், நம் மெயில்களைத் தேவை இல்லாமல் நீக்கப்போவது இல்லையே! என்ற சமாதானங்கள் இருந்தாலும், அவ்வாறு ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் மனதில் தோன்றுகிறது.

நம் முக்கிய டாகுமெண்ட்கள் பலவற்றை, ஜிமெயில் மின்னஞ்சல்களில் சேமித்து வைத்திருக்கிறோம். குறிப்பாக, சிறிய அளவில் இயங்கும் நிறுவனங்கள் பல தங்களின் ஆண்டு கணக்குகளை, கோப்புகளாக சேமித்து வைத்துள்ளன.

எனவே, இலவசமாக இயங்கும் இந்த ஜிமெயில் சேவை என்றாவது மூடப்பட்டால், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் நிலை திக்கற்றதாகிவிடும்.

எனவே தான் மற்ற மின்னஞ்சல் நிறுவனங்களின் அஞ்சல்களுக்கு பேக் அப் எடுப்பது போல, ஜிமெயில் தளத்தில் உள்ள அஞ்சல்களையும், அதன் கோப்புகளுடன் பேக் அப் எடுத்து வைப்பது நல்லது.

இதற்கான ஒரு பயன்பாட்டு புரோகிராம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது.

http://www.gmail-backup.com/download

இன்ஸ்டால் செய்தவுடன், Backup என்பதில் கிளிக் செய்தால், நாம் நம் கம்ப்யூட்டரில், எந்த போல்டரைக் குறிப்பிட்டோமோ, அந்த போல்டரில் மெயில்கள் மற்றும் கோப்புகள் அனைத்தும் பேக் அப் செய்யப்படும்.

அனைத்து மெயில்களும் தேவை இல்லை எனில், குறிப்பிட்ட நாட்களுக்கிடையே கையாளப்பட்ட மெயில்களை மட்டும் பேக் அப் செய்திடலாம்.

பேக் அப் செய்திட்ட மெயில்கள் .eml என்ற துணைப் பெயருடன், அந்த பார்மட்டில் இருக்கும். இதனைப் படிக்க இயலும் எந்த புரோகிராம் மூலமாகவும், மெயில்களைப் படிக்கலாம்.

------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavis713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.


0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்