11 ஜூன், 2014
செல்போன் லோ பேட்டரி சிக்கலில் இருந்து தப்பிக்க ! ! !..
Posted by Anto Navis in: mobile tricks
நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னை, பேட்டரி. சிறிதுநேரம் 3ஜி போனை பயன்படுத்தினாலேபோதும், லோ பேட்டரி என ஆகிவிடும். இதனால் பெரும்பாலானவர்கள் கூடுதலாக ஒரு பேட்டரியை எப்போதும் பாக்கெட்டில் வைத்திருக்கவேண்டிய கட்டாயம்; இந்தச் சிக்கலில் இருந்து தப்பிக்க லேட்டஸ்டாக வந்திருக்கும் கேட்ஜெட்தான் 'போர்ட்டபிள் சார்ஜர்.'
பென்டிரைவ்போல தோற்றமுள்ள இந்தக் கருவி, பார்ப்பதற்கு சிறிதாகவும் பயன்படுத்த எளிமையாகவும் இருக்கும். 2000 MAH லிருந்து 3000mAh வரை செயல்திறன்கொண்ட இந்த போர்ட்டபிள் சார்ஜர்கள் 5V அளிக்கும் திறனை உடையது. முதல்முறை சார்ஜ் செய்யும்போது மட்டும், கிட்டத்தட்ட 10 மணி நேரம் சார்ஜ் செய்யவேண்டியிருக்கும். இரண்டாவது முறையிலிருந்து 6 மணி நேரம் சார்ஜ் செய்தாலே 100% சார்ஜ் ஏறிவிடும். இப்படி 100% சார்ஜ்-ஆன போர்ட்டபிள் சார்ஜரைக்கொண்டு ஒரேசமயத்தில் குறைந்தபட்சம் இரண்டு ஸ்மார்ட் போன்களை சார்ஜ் செய்துவிடலாம்.
யூஎஸ்பி (USB) கேபிளைக்கொண்டு சார்ஜ் ஆகும் இந்த போர்ட்டபிள் சார்ஜரை எளிதாக பாக்கெட்டிலோ, பையிலோ போட்டுக்கொள்ளலாம். மொபைல் Low Battery என்று காட்டும்போது இந்த 'போர்டபிள் சார்ஜர்’யை மொபைலோடு பொருத்திவிட்டு, சார்ஜ் ஆக ஆக சாட்டிங், மியூசிக் பிளேயர், வாட்ஸ்அப், கேமரா என எதுவாக இருந்தாலும் மிகச் சுலபமாகப் பயன்படுத்தலாம்.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 - 100 நாட்கள் வரை இந்த போர்ட்டபிள் சார்ஜரின் சார்ஜ் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அப்படியே இருக்கும். இந்த அளவு கம்பெனிக்கு கம்பெனி வேறுபடும்.
ரூ.500 - ரூ.5,000 வரை விற்கப்படும் இந்த சார்ஜர்தான் இப்போது விற்பனையாகும் ஹாட்டான கேட்ஜெட். பிசினஸ்மேன், நீண்ட பயணம் செல்பவர்கள் என இந்த சார்ஜரை வாங்குபவர்களின் எண்ணிக்கை ஏராளம்!
தற்போது ஆன்லைன் வர்த்தக ஜாம்பவானான
Flipkart -இல் பல விலைகளில் கிடைக்கிறது
சென்றுபார்த்து பிடித்திருந்தால் வாங்கலாம் :
About Admin of the Blog:
Anto Navis is the founder of Computer Tricks In Tamil .He is a Tech Geek, SEO Expert, Web Designer and a Pro Blogger. Contact Him Here
பிரபலமான இடுகைகள்
-
இதோ இன்று நான் நல்ல பதிவு ஒன்றை உங்களுக்கு கொண்டு வந்துள்ளேன். எமக்கு வரும் Wrong Call ஐ எங்கிருந்து வந்தது என்று இலகுவாக கண்டு பிடிக...
-
இந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...
-
இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...
-
தொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...
-
நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...
-
ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பத...
-
Google Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...
-
பகுதி நேர வேலை ! வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ! ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ! உங்கள் திறமைக்கேற்ற வேலை ! சில மாதங்களில்...
-
நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...
-
ஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...
THNX BRO KEEP IT UP
பதிலளிநீக்குthank u friend stay conected with my blog and share it to all ur friends ...
நீக்குI collect all the information through net only .. if u have any content about computer related topics give it to me i will surely publish it !!!
thank u