24 ஜூன், 2014

பாஸ்போர்ட்டு அப்ளே செய்யப்போரிங்களா ? அப்ப இத படிங்க !

Posted by Anto Navis

அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்தில்

ஒகே ரெடி ஸ்டார்ட்.
முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்https://passport.gov.in/pms/Information.jsp

Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.
அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.
District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்Service Desired:என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன
பெண் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து
Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால்பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால்அந்நாட்டையிம் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய முகவரி
Permanent Address: நிரந்தர முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை
Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்
Father's Name: தந்தை பெயர்
Mother's Name: தாயார் பெயர்

தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்

பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து

Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்
File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்

[] கண்டிப்பாக எழுதவும் [] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்

அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவைஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.

முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)

· ரேசன் கார்டு
· குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· வாக்காளர் அடையாள அட்டை
· வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
· துணைவின் பாஸ்போர்ட்

பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_

· 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
· பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
· கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு சான்றிதல்கள்

· 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்
· உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
· பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து,பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா... நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்... கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய்சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.

அவ்வளவுதான் முடிந்தது மேலும் தகவல்களுக்கு

மேலும் ஏதாவது தகவல் தேவை என்றால் இங்கு கேட்கவும்.

சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள்

1 கருத்து:

  1. hai nice one
    date of birth prof to say any one on below this
    dob certificate after 1989
    or
    school certificate


    i am get only school certificate not a dob certificate
    if this acceptable or not

    பதிலளிநீக்கு

பிரபலமான இடுகைகள்