10 அக்., 2014

உங்கள் கணினி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா?

Posted by Anto Navis

நாம் கணினியை தொடர்ந்து உபயோகப்படுத்திக் கொண்டிருப்பதால் அதிகமான அளவு சூடு அடைகிறது. அந்த சூட்டின் நிலை 60 டிகிரி செல்சியஸைத் தொடும் போது தானாகவே ரீஸ்டார்ட் ஆகும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.
கணினியில் உள்ள டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும் போது நிச்சயம் வெப்ப ஆவி உருவாகி வெளியே வருகிறது. அதனால் தான் ப்ராசசர் சிப் மேலாக ஒன்றும் கேபினட் உள்ளாக ஒன்றும் என மின்விசிறிகள் அமைக்கப்பட்டு அவை அந்த வெப்பத்தை வெளியேற்றுகின்றன.

மேலும் இப்போதெல்லாம் இயக்கப்படும் புரோகிராம்கள் பெரிய அளவில் ப்ராசசரின் சக்தியை உறிஞ்சும் வகையில் உள்ளதால் சூடு அதிகம் உருவாகும் நிலை ஏற்படுகிறது. அதே போல் பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தினாலும் இந்த பிரச்சினை வரும்.

அடுத்ததாக அளவுக்கு அதிகமாக கணினி கேபினுள் சேரும் தூசியும் சூடு வெளியாவதைத் தடுக்கும். சூட்டை வெளித் தள்ளும் மின்விசிறிகள் சரியான அளவில் இயங்குவதைத் தடுக்கும். இவற்றை அவ்வப்போது நீக்க வேண்டும். கேபினைத் திறந்து தூசியை வெளியே எடுக்கும் சாதனம் கொண்டு கேபினைச் சுத்தம் செய்திட வேண்டும்.

இருந்தாலும் ரீஸ்டார்ட் ஆகிறது என்றால் அடுத்தபடியாக உங்கள் கணினியின் மெமரியைச் சோதனை செய்திட வேண்டும். உங்கள் ப்ராசசர் ராம் மெமரியின் சேதமடைந்த இடத்தில் உள்ள தகவலைப் பெற முயன்று தோற்றால் கணினி உடனே ரீஸ்டார்ட் ஆகத் தொடங்கும்.

இதனைக் கண்டறிய உங்கள் ராம் மெமரி ஸ்டிக்குகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தால் எந்த ஸ்டிக்கில் பிரச்சினை உள்ளது என்று தெரியவரும். அதனை மட்டும் மாற்றலாம். இதுவும் சரியாக உள்ளது என்று தெரிய வந்தால் கணினியில் உள்ள செட்டிங் ஒன்றை மாற்றினால் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.

விண்டோஸ் எக்ஸ்பி ஓப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பிழை ஏதேனும் ஏற்பட்டால் உடனே ரீஸ்டார்ட் செய்யும்படி அமைக்கப்பட்டிருக்கும். அந்த ஓப்ஷனை ஓப் செய்துவிட்டால் இந்த பிரச்சினை தீரும். இதனை மேற்கொள்ள

1. Start - Control Panel என்று சென்று Performance and Maintenance என உள்ளதில் கிளிக் செய்திடவும்.

2. இதில் உள்ள System லிங்க்கில் கிளிக் செய்து பின் Advanced டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

3. இதில் உள்ள Startup and Recovery செக்ஷனில் Settings பட்டனில் கிளிக் செய்திடவும்.

4. இதில் Automatically Restart என்று தரப்பட்டு அதன் அருகே தரப்பட்டுள்ள சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தின் மீது கிளிக் செய்து அதனை எடுத்துவிடவும்.
இது System Failure பிரிவில் இருக்கும். பின் ஓகே கிளிக் செய்து அனைத்து விண்டோக்களை மூடவும். இனி உங்கள் கணினி பிழை ஏற்படுவதனால் ரீஸ்டார்ட் ஆகாது.

இதை விண்டோ விஸ்டாவில் செயல்படுத்த:

1. Start - Control Panel சென்று System என்பதில் கிளிக் செய்திடவும்.

2. இந்த விண்டோவில் Advanced System Settings என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் விண்டோவில் Startup and Recovery என்பதன் கீழ் பார்க்கவும்.

3. இங்கு Settings பட்டனில் கிளிக் செய்திடவும். இதில் Automatically Restart என்பதன் கீழாக என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்