6 ஏப்., 2015

அதிசயத் தகவல்கள்.! wonderful informations

Posted by Anto Navis


* இன்று அனைவரின் கைகளிலும் கையடக்கத் தொலைபேசி இருக்கிறது. அவற்றில் உள்ள சிம் அட்டைகள் பிளாஸ்டிக் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தாவரங்களிலிருந்து கிடைக்கும் செலுலோஸ் என்பதிலிருந்து தான் சிம் அட்டை தயாரிக்கப்படுகிறது.

* வேகமாகப் போக விரும்பினால், தனியாகப் பயணம் செய். தொலை தூரம் போக விரும்பினால் துணையுடன் பயணம் செய் என்பது ஆப்பிரிக்காவில் பிரபலமாகச், சொல்லப்படும் வாக்கியம்.

* எந்த விளையாட்டுக்கும் இல்லாத தனிச்சிறப்பு படகுப் போட்டிக்கு உண்டு. பின்பக்கமாகத் திரும்பி வெற்றிக் கோட்டைத் தொடும் ஒரே விளையாட்டு இது மட்டும்தான்.

* இரவில் தூங்கும்போது படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை ஆங்கிலத்தில் NOCTURNAL ENURESIS என்று குறிப்பிடுவோம். இந்தப் பழக்கத்துக்குப் பெண் குழந்தைகளைவிட அதிகம் ஆளாவது ஆண் குழந்தைகள்தான்.

* எல்லா வகை ரத்தத்துடனும் சேரும் ரத்த வகை ‘ஓ’ பாஸிட்டிவ் தான்.

* மகாத்மா காந்தி பற்றி ஜன்ஸ்டீன் சொன்ன புகழ்பெற்ற கருத்து இன்னும் 50 ஆண்டுகள் கழித்து ரத்தமும் சதையும் கொண்ட இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்!

* பொதுவாகவே நல்ல பெட்ரோலானது எங்கு சிந்தினாலும் சிறிதுநேரத்தில் சிந்திய சுவடு தெரியாமல் மாயமாகி விடும்.

கலப்பட பெட்ரோல் மட்டுமே சிந்திய இடத்தில் சிறிய வரைபடம் போன்று அதன் எல்லைக் கோட்டை விட்டுச்செல்லும்.

* நமது உள்ளங்கையில் ஒரு சதுர அங்குலத்திற்கு 3000 வியர்வைச் சுரப்பிகள் உள்ளனவாம்.

* அறிஞர் ‘வால்’ என்பவர் பல ஆய்வுகளை மேற்கொண்டு, பாம்புக்கு கேட்கும் திறன் இல்லை, செவி இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளார்.

* ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 113 டன் எடையுள்ள மழை நீர் பொழிவதையே ஓர் அங்குலம் என்பர்.

* குழந்தை பிறக்கும் போது அதன் இதயம் ஒரு நிமிடத்திற்கு 140 முறை துடிக்கும் முயலின் இதயம் ஒரு நிமிடத்திற்கு 150 முறையும், குதிரையின் இதயம் 38 முறையும், சுண்டெலியின் இதயம் 200 முறையும், நாயின் இதயம் 118 முறையும், ஆட்டின் இதயம் 60லிருந்து 78 முறையும் யானையின் இதயம் 48 முறையும் துடிக்குமாம்.

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்