பேஸ்புக் மிகப்பெரிய சமூக இணையதளம். சுமார் 700 மில்லியன் பயனர்களை கொண்ட ஒரே மிகப்பெரிய தளம் பேஸ்புக். இணையத்தில் சமூக தளங்கள் உபயோகிப்பவர்களில் 57% பேர் பேஸ்புக் தளத்தை தான் உபயோகிக்கிறார்கள். இதற்கடுத்த நிலையில் ட்விட்டர்(37%), Linkedin(6%), Myspace(1%) போன்ற தளங்கள் உள்ளன. இந்த பேஸ்புக் தளத்தை யார் அதிகமாக உபயோகிக்கிறார்கள் எப்படி உபயோகப் படுத்துகிறார்கள் என்ற தகவல்களை கீழே பார்ப்போம். இந்த தகவல்களை JESS3 உருவாக்கி உள்ளது.
இந்த புள்ளிவிவரங்களின் படி:
- 38 வயதில் உள்ளவர்கள் தான் அதிகமாக உபயோகிக்கிறார்கள்.
- 26% பேர் மற்றவர்களின் போஸ்ட்டை Like செய்கிறார்கள்.
- பேஸ்புக் உபயோகிப்பவர்களில் 22% பேர் 10 ஆம் வகுப்பிற்கும் கீழே படித்து கொண்டிருக்கும் மாணவர்கள்.
- ஒருவர் சராசரியாக 229 நண்பர்களை பெற்று இருக்கிறார்கள். இதில் 7% பேர் இதற்க்கு முன் தெரியாதவர்கள்.
மேலும் தகவல்களை அறிய கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்
0 comments:
கருத்துரையிடுக