19 ஜூன், 2015

வெக்டர் கிராபிக்ஸ் படங்கள் வரைய

Posted by Unknown
கூகிள்.


இன்று இணையம் பயன்படுத்தும் அனைவருமே அறிந்த ஒரு இணையதளம். கூகிள் தரும் வசதிகள் பல. கூகிள் தரும் வசதிகள் அனைத்தும் இலவசம்தான். இதனாலேயே கூகிள் உலக அளவில் இணையப் பயன்பாட்டாளர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானமுதன்மைத் தளமாக (one of the top most popular web giant google) விளங்குகிறது.
கூகிள் டிராயிங் வசதி: 


கூகிள் டிராயிங் தரும் வசதிகளில் ஒன்று Google Drawing . இந்த வசதியின் உங்கள் விருப்பம்போல் வெக்டர் கிராபிக்ஸ் படங்களை உருவாக்கலாம்.அதுமட்டுமல்லாமல் Chart, Diagrams போன்றவற்றினையும் உருவாக்கும் வசதி இதில் உண்டு.

கூகிள் டிரைவ் & டிராயிங்


கூகிள் டிரைவ் என்பது கணினியில் உள்ள Hard Drive போன்றது. ஒரே வித்தியாசம் உங்கள் கணினி ஹார்ட் டிரைவில் (computer hard disk) கோப்புகளை சேமித்தால் உங்கள் கணினியை இருக்கும் இடத்திற்குச் சென்று நீங்கள் கோப்புகளை அணுக முடியும்.

கூகிள் டிரைவில் சேமித்தால், உங்களுக்கு இணைய இணைப்புடன் கூடிய ஏதாவது ஒரு கணினி இருந்தாலே போதும். ஜிமெயிலை அணுகுவது போல, உங்களுடைய கணக்கில் சென்று கூகிள் டிரைவில் உள்ள கோப்புகளை (Google Drive files) உலகத்தில் எந்த மூலையில் இருந்தால் எடுத்துப் பயன்படுத்திட முடியும். அவற்றை எடிட் செய்திடவும் முடியும்.


வெக்டர் ஓவியங்களை கூகிள் டிரைவில் சேமிக்கும் வசதி: 
வெக்டர் ஓவியங்கள் வரையும் வசதி, கூகிள் டிரைவ் வசதியுடன் இணைந்தே கிடைக்கிறது.அதனால் கூகிள் டிராயிங் வசதியின் மூலம் நீங்கள் வரையும் ஓவியங்கள், கிராபிக்ஸ் படங்கள், சார்ட்கள், டயகிராம்ஸ்கள் அனைத்தும் (Drawing, Charts, Diagrams) கூகிள் டிரைவ் தானாகவே சேமிக்கும் வசதியைக் கொண்டுள்ளது. சேமிக்கப்பட்டவைகளை மீண்டும் மற்ற கணினிகளில் திறந்து பயன்படுத்திட முடியும். 


கூகிள் டிரைவில் நீங்கள் வரையும் ஓவியங்கள் சார்ட்கள் சேமிக்கப்படுவதால் உலகத்தில் எந்த ஒரு கணினியைப் பயன்படுத்தியும், உங்களது கணக்கில் சேமிக்கப்பட்டுள்ளவற்றை எடுத்துப் பயன்படுத்திட முடியும். அவற்றை மீண்டும் மாற்றம் செய்ய (Editing) முடியும்.


Google Drawing நீட்சியை கூகுள் குரோம் உலவியிலும் இணைத்துப் பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு. 

கூகிள் டிராயிங் நீட்சியை தரவிறக்கம் செய்ய சுட்டி: 


0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்