4 பிப்., 2014

Pen Drive மூலம் OS இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்?

Posted by Anto Navis


எப்போதும் எதற்குமே ஒரு மாற்று வழி நமக்கு அவசியம் ஆகிறது.கணினியை பொறுத்த வரையில் அதில் முக்கியமானது OS இன்ஸ்டால் செய்வதற்கு மாற்று வழிகள். சில வேளைகளில் நமது DVD Drive இயங்கவில்லை
என்றாலோ அல்லது DVD Drive இல்லை என்றாலோ Pen Drive மூலம் மட்டுமே OS இன்ஸ்டால் செய்ய முடியும். அதை எப்படி செய்வது என்று இன்று பார்ப்போம்.
பென் டிரைவ் ஆனது நமக்கு பல விதங்களில் பயன்படுவதற்கு இதுவும் ஒரு உதாரணம். இதற்கு முன்னர் பென் டிரைவை எப்படி RAM ஆக பயன்படுத்துவது என்று பார்த்து இருந்தோம். 
இப்போது OS Install செய்ய எந்த பென் டிரைவை பயன்படுத்துகிறீர்களோ அதை உங்கள் கணினில் சொருகி ஒரு முறை Format செய்து விடவும். தொடர்ந்து கணினியிலேயே அது இருக்கட்டும்.
1. முதலில் இந்த இணைப்பில் சென்று  WinSetupFromUSB  என்ற மென்பொருளை டவுன்லோட் செய்யவும். 
2. RAR File ஆக டவுன்லோட் ஆகும் இதனை  Extract செய்து அதில் உள்ள Setup - ஐ Run செய்யவும். [இன்ஸ்டால் செய்ய தேவை இல்லை]
3. இப்போது கீழே உள்ளது போல அந்த மென்பொருள் இருக்கும். அதில் உங்கள் Pen Drive Detect ஆகி இருக்கும். 

4.  இப்போது உங்கள் பென் டிரைவ் பெயருக்கு கீழே Add To USB disk என்று உள்ளத்தில் உங்கள் Windows XP/Vista/7 Setup File ஐ நீங்கள் தெரிவு செய்து கொடுக்க வேண்டும். ஏற்கனவே DVD யில் உள்ளவர்கள் நேரடியாக அதனை தெரிவு செய்யலாம்.[நண்பர்களுக்கு இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று கேட்பவர்களுக்கு இது பயன்படும்.
இல்லை என்றால் OS-இன் ISO File-ஐ உங்கள் கணினியில் இருந்து தெரிவு செய்ய வேண்டும். இப்போது கீழே உள்ளது போல தெரிவு ஆகி இருக்கும். 
5.  உங்களுக்கு எதை தெரிவு செய்தீர்களோ அது மட்டும் தெரிவு ஆகி இருக்கும். இப்போது GO என்பதை கிளிக் செய்து விடுங்கள். 
6. சில நிமிடங்களில் உங்களுக்கு கீழே உள்ள சிறிய விண்டோ வரும். 
அவ்வளவு தான் இனி உங்கள் பென் டிரைவ் மூலம் OS இன்ஸ்டால் செய்து விடலாம்.
WinSetup From USB
------------------------------------------------------------------------------------------------------------------------
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavi713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)

* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள்  கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.



>>> Facebook Group  இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

12 கருத்துகள்:

  1. Ullaye poga mudiyadha laptop la epdi pendrive moolam epdi w8 os poduradhu

    பதிலளிநீக்கு
  2. http://computertricksintamil.blogspot.in/2014/09/7-os-install.html



    intha link ulamatheri panunga friend its for windows 7 its also same as windows 8 friend

    பதிலளிநீக்கு
  3. thank u SO much friend please like and share our page


    www.facebook.com/technologyincomputer

    பதிலளிநீக்கு
  4. normala epadi format panuvengalaoe antha matheri than pananum friend vinoth

    பதிலளிநீக்கு

பிரபலமான இடுகைகள்