17 மார்., 2015

வெப்சைட் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?

Posted by Anto Navis


வணக்கம் நண்பர்களே...!

அன்றாட வாழ்வில் நாம் பல தேவைகளுக்காக பல வெப்சைட்டுகளை உபயோகித்து வருகின்றோம். அது சேட் செய்வதற்காக இருக்கலாம், பாடல்களை படங்களை டவுன்லோட் செய்வதற்காக இருக்கலாம் அல்லது வீறு எதோ நமக்கு தேவைப்படும் விசயங்களுக்காக வெப்சைட்டுகளை உபயோகிக்கின்றோம்.

என்னதான் தினமும் நாம் வெப்சைட்டுகளை தினமும் உபயோகித்து வந்தாலும். அந்த வெப்சைட்டினை நடத்துபவர் யார், அந்த வெப்சைட் எங்கிருந்து செயல்படுகிறது போன்ற விபரங்கள் நமக்கு தெரிவதில்லை. ஆனால் அவற்றை தெரிந்துகொள்ளும் ஆர்வம் நம்மில் அனைவரிடமும் இருப்பது என்னமோ உண்மைதான். அதற்கான வழி தெரியாமல்தான் நமது ஆர்வத்தை அப்படியே முடக்கிவிடுகின்றோம்.

ஒரு வெப்சைட்டினை பற்றிய முழுவிவரங்களை அறிதுகொள்ளவும் வழி இருக்கின்றது நண்பர்களே.... அது எப்படி என்று இங்கே பாப்போம்.

Whois33.com நமக்கு இந்த சேவையினை இலவசமாக வழங்குகின்றனர். இந்த வெப்சைட்டிற்கு சென்று யார் வேண்டுமானாலும் எந்த வெப்சைட் பற்றிய தகவல்களையும் ஒரு நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ள முடியும்.

Whois33.com க்கு சென்று நமக்கு எந்த வெப்சைட் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமோ அந்த வெப்சைட்டின் முகவரியினை டைப் செய்து சர்ச் கொடுத்தால் போதும் ஓரிரு வினாடிகளில் அந்த வேப்சைட்டினை பற்றிய முழுவிவரமும் தோன்றும்.
உங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்