1 ஏப்., 2015
விண்டோஸ் எக்ஸ்பி ரீ ஸ்டார்ட் பிரச்சனையை சரி செய்ய
Posted by Anto Navis in: கணினி உலகம் கணினி தொழில்நுட்பம் தொழில்நுட்பம் in தமிழ் விண்டோஸ் windows XP Tricks
விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளம் உபயோகிப்பவர்கள் அவ்வப்போது, தங்களது கணினி பூட் ஆகும் பொழுது, விண்டோஸ் லோடு ஆகும் திரை வந்த பிறகு, உடனடியாக ரீஸ்டார்ட் ஆகும் பிரச்சனையை சந்தித்து இருக்கலாம்.
இப்படி முதல் முறை ரீஸ்டார்ட் ஆகி மறுபடி பூட் ஆகும் பொழுது Safe mode ஆப்ஷனோடு திரை வந்திருக்கும்.
இதில் Safe mode இல் சென்றாலும், Last known Good Configuration -இல் சென்றாலும், இதே போன்று தொடர்ந்து ரீஸ்டார்ட் ஆகிக் கொண்டிருக்கும், உள்ளே இருக்கும் உங்களது முக்கியமான டேட்டாக்கள் ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் வருவது இயற்கை.
சரி, விண்டோஸ் சீடியை வைத்து பூட் செய்து இந்த இயங்குதளத்தின் மேலேயே over write செய்து விடலாம் என்று முயலும் போது, அங்கேயும் ஆப்பு காத்திருக்கும். விண்டோஸ் சீடியில் பூட் செய்து முதலாவது Repair ஆப்ஷனை தவிர்த்து Agreement பக்கத்திற்கு அடுத்து வரும் திரையில் கீழே உள்ளது போல உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷன் காண்பிக்கப்பட்டால் 'R' கீயை அழுத்தி ரிப்பேர் செய்து கொள்ளலாம்.
ஆனால், விண்டோஸ் ரிப்பேர் வசதியில் செல்லும் போது உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷனை Unknown partition என்றோ அல்லது விண்டோஸ் ஏற்கனவே நிறுவப்படாத மற்ற பார்ட்டிஷன்களை போலவே உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷனும் பட்டியலிடப்பட்டிருக்கும். இது போன்ற நிலை வரும்பொழுது சற்று சிக்கல்தான்.
முதலாவதாக நாம் நினைவில் கொள்ள வேண்டியது. இந்த நிலைக்கு முந்தைய வரலாறு (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!..) அதாவது இந்த ரீஸ்டார்ட் பிரச்சனை வருவதற்கு முன்பாக என்ன நிகழ்ந்தது? முழுவதுமாக ஷட் டவுன் ஆவதற்கு முன்பாக பவரை அனைத்து விட்டீர்களா? அல்லது கரண்டு போய்விட்டதா? யாராவது Reset பட்டனை அழுத்திவிட்டு போய் விட்டார்களா? அல்லது இதில் ஏதுமில்லையா?
இந்த கேள்வியெல்லாம் எதற்கு? என்றால், இது போன்ற ரீ ஸ்டார்ட் பிரச்சனை பெரும்பாலும் பூட் பார்ட்டிஷனில் கோப்புகள் கிராஸ் லிங்க் ஆகிவிடவதால் ஏற்படுபவை, அல்லது (மிக அரிதாக) உங்கள் வன்தட்டிற்கு வயதாகி கொண்டிருக்கிறது அல்லது (மிகமிக அரிதாக) பிராசசர் ஃபேனில் தூசி அதிகம் படிந்து, ஃ பேனின் வேகம் குறைந்தது என்றும் கொள்ளலாம். கிராஸ் லிங்க் ஆவதற்கு முக்கிய காரணம் முறையாக ஷட் டவுன் செய்யாமலிருப்பது.
இந்த பிரச்சனை வரும் பொழுது எடுத்தவுடனே விண்டோஸ் Over write செய்து விடலாம் அல்லது புதிதாக வேறு ட்ரைவில் நிறுவிவிடலாம் என்ற முடிவிற்கு வருவதற்கு முன்பாக, விண்டோசின் தாத்தா DOS கருவியான Chkdsk ஐ பயன்படுத்தி இந்த பிரச்னைக்கு விரைவாகவும், எளிதாகவும் தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
விண்டோஸ் பூட் சீடியை வைத்து உங்கள் கணினியை பூட் செய்து கொள்ளுங்கள். பிறகு முதலாவதாக வரும் Repair திரையில் 'R' கீயை அழுத்தி Recovery Console திரைக்கு வந்து விடுங்கள்.
இந்த பிரச்சனை உள்ள கணினிகளில், விண்டோஸ் பார்ட்டிஷன் உள்ள ட்ரைவை குறிப்பிடும்படி கேட்காது. தேர்வு செய்ய சொல்லி வந்தால் தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்து, C:\> ப்ரோம்ப்டில் CHKDSK /R கட்டளை கொடுக்கலாம். ஒரு சில சமயங்களில் இந்த கட்டளை இயங்காமல் போனால், CD/DVD ட்ரைவிற்கு சென்று (உதாரணமாக g:) அங்கு CD\i386 கட்டளை கொடுத்து அந்த டைரக்டரிக்கு சென்று அங்கு CHKDSK கட்டளையை கொடுங்கள்.
இது முடிந்த உடன் Exit கொடுத்து கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விட்டால் போதுமானது. கிராஸ் லிங்க ஆன சிஸ்டம் கோப்புகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, கணினி முன்பு போல இயங்கும். பெரும்பாலான கணினிகளில் இந்த வழியை பயன்படுத்தி விண்டோஸ் எக்ஸ்பி ரீ ஸ்டார்ட் பிரச்சனையை சரி செய்யப் பட்டுள்ளது.
About Admin of the Blog:
Anto Navis is the founder of Computer Tricks In Tamil .He is a Tech Geek, SEO Expert, Web Designer and a Pro Blogger. Contact Him Here
பிரபலமான இடுகைகள்
-
இதோ இன்று நான் நல்ல பதிவு ஒன்றை உங்களுக்கு கொண்டு வந்துள்ளேன். எமக்கு வரும் Wrong Call ஐ எங்கிருந்து வந்தது என்று இலகுவாக கண்டு பிடிக...
-
இந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...
-
இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...
-
தொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...
-
நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...
-
ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பத...
-
Google Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...
-
பகுதி நேர வேலை ! வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ! ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ! உங்கள் திறமைக்கேற்ற வேலை ! சில மாதங்களில்...
-
நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...
-
ஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...
0 comments:
கருத்துரையிடுக