19 ஜூன், 2015

Android Apps களை Google play Store லிருந்து கணினியில் Download செய்ய

Posted by Anto Navis






இந்த முறைமையானது Online உதவியுடன் Android Apps னை Download செய்வது எவ்வாறு என பார்ப்போம். Android பற்றியோ Google Play store பற்றியோ பெரிய முன்னுரை தேவையில்லை என்று நினைக்கிறேன்.


Android என்பது Google நிறுவனத்தின் Mobile/Tab களுக்கான இயங்குதளம் ஆகும். இந்த இயங்குதளத்தில் இயங்கும் Appsகளுக்கென ஒரு சந்தையினை உருவாக்கியது அதற்கு பெயர் தான் Play store ஆகும். இச்சந்தையில் தற்போது கூகுள் நிறுவனத்தின் சோதனைக்குட்பட்ட மென்பொருள்கள் மட்டுமே உள்ளன.


Google play Store ல் இருக்கும் Apps களை நாம் நேரிடையாக கணினியில் பதிவிறக்கம் செய்ய முடியாது. Android இயங்குதளம் நிறுவப்பட்ட Mobile சாதனம் மற்றும் Tab லிருந்து மட்டுமே Android Apps களை பதிவிறக்கம் செய்ய முடியும்.


Google play Store ல் இருக்கும் Apps களை கணினியில் பதிவிறக்கம் செய்ய ஒரு தளம் உதவி செய்கிறது.


தளத்திற்கான http://apps.evozi.com/


எந்த Apps னை பதிவிறக்கம் செய்ய வேண்டுமோ அதற்கு குறிப்பிட்ட Apps ன் URL முகவரி கண்டிப்பாக வேண்டும். URL முகவரியினை பெற Google play Store சென்று குறிப்பிட்ட Apps ன் முகவரியினை பெற்றுவிட முடியும்.


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, குறிப்பிட்டApps ன் முகவரியை (url) குறிப்பிட்டு பின் Generate Download Link என்னும் பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி கிடைக்கும் அதை பயன்படுத்தி கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


கணினியில் தரவிறக்கம் செய்யும் Android Apps களை வழக்கம்போல் Android சாதனங்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

0 comments:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்