19 ஜூன், 2015
ஆண்ட்ராய்ட் மொபைல் டூ கம்ப்யூட்டர் இணைய இணைப்பு கொடுப்பது எப்படி?
Posted by Anto Navis in: Android Tricks google trick mobile tricks
நாம் சாதாரணமாக பயன்படுத்தும் மொபைல் போனிலிருந்து கணினிக்கு இணைய இணைப்பு கொடுக்க வேண்டும் எனில், அந்த மொபைல் போனிற்கு ஏற்ற இணைய இணைப்பு மென்பொருளைக் கொண்டு கணினிக்கு இணைய இணைப்பை கொடுப்போம்.
ஆனால் தற்போது புதிய மாற்றங்களுடன், புதிய தொழில்நுட்பத்துடன், பயன்படுத்த எளிமையாக இருக்கும் ஆண்ட்ராய்ட் வகை மொபைல்களிலிருந்து இணைய இணைப்பை ஏற்படுத்த இரண்டு வழிமுறைகள் உள்ளன.
1. wifi வசதி மூலம் கணினிக்கு இணைய இனைப்பை வழங்கு முடியும்.
2 . USB கேபிள் மூலம் இணைய வசதியை கணினிக்கு ஏற்படுத்த முடியும். usb மூலம் கணினிக்கு இணைய இணைப்பை (internet connection) ஏற்படுத்த, எந்த வகையான ஆண்ட்ராய்ட் மொபைல்(model of Android Mobile phone) உங்களிடம் உள்ளதோ அதற்கான யூ.எஸ்.பி. டிரைவரை உங்கள் கணினியில் நிறுவியிருப்பது அவசியம்.
தேவையான யூ.எஸ்.பி. டிரைவரை (USB Driver) உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்தவுடன் , உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல் போனில் செட்டிங்ஸ் (settings)செல்லுங்கள்.
செட்டிங்சை கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் வைர்லெஸ் அண்ட் நெட்வொர்க்ஸ் (wireless & networks)என்பதில் கிளிக் செய்யுங்கள்.
அடுத்து தோன்றும் விண்டோவில் டிதரிங் & போர்ட்டபிள் ஹாட்பாட் (Tethering & portable hotspot) என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து யூ.எஸ்.பி. தெதரிங் (USB tethering) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து தோன்றும் விண்டோவில் any ongoing operations such as media transfer, phone software update, backup and restore will be interrupted. என்று காட்டும். அதன் கீழாக அதை உறுதிப்படுத்தும் விதத்தில் OK கிளிக் செய்யுங்கள். அவ்வளவுதான். இனி உங்கள் கணினியில் நீங்கள் இணைய இணைபைப் பெற்று இருப்பீர்கள். கணினியின் மூலம் இணையத்தில் உலவ முடியும்.
ஆண்ட்ராய்ட் மொபைலிலிருக்கும் போட்டோக்களை (Photos) இந்த முறையின் மூலம் கணினிக்கு பகிர்ந்துகொள்ள முடியும்.
உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைல்களுக்கான USB Driver-களை தரவிறக்கம் செய்துகொள்ள கீழிருக்கும் சுட்டிகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
நன்றி!
About Admin of the Blog:
Anto Navis is the founder of Computer Tricks In Tamil .He is a Tech Geek, SEO Expert, Web Designer and a Pro Blogger. Contact Him Here
பிரபலமான இடுகைகள்
-
இதோ இன்று நான் நல்ல பதிவு ஒன்றை உங்களுக்கு கொண்டு வந்துள்ளேன். எமக்கு வரும் Wrong Call ஐ எங்கிருந்து வந்தது என்று இலகுவாக கண்டு பிடிக...
-
இந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...
-
இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...
-
தொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...
-
நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...
-
ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பத...
-
Google Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...
-
பகுதி நேர வேலை ! வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ! ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ! உங்கள் திறமைக்கேற்ற வேலை ! சில மாதங்களில்...
-
நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...
-
ஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...
0 comments:
கருத்துரையிடுக